OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Friday 22 February 2013

நன்றி! நன்றி! நன்றி!
தோழர்களே! தோழியர்களே!
வணக்கம். நமது  NFPE விடுத்த அறைகூவளுக்கிணங்க  February 20 மற்றும்  21 – ம்  தேதிகளில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் பங்குபெற்ற அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும்  தேனி கோட்டத்தின்  NFPEசார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! 

வாழ்க  NFPE !                          வளர்க  NFPE !
NFPE, Theni



Tuesday 19 February 2013


வேலை நிறுத்தம் வெல்லட்டும் !


நாடு தழுவிய அளவில் 10 கோடி தொழிலாளர்களுக்கு மேல்  , எந்த வித அரசியல் பாகுபாடும் இல்லாமல் எதிர் வரும் பிப்ரவரி 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெறவுள்ள  48 மணி நேர வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ள உள்ளார்கள். 

ஆளும் கட்சியான இந்திய தேசிய காங்கிரசின் அங்கீகரிக்கப் பட்ட தொழிற் சங்கமான INTUC  இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதும் அதன் இணைப்பு சங்கமான  அஞ்சல் பகுதியின் FNPO  இந்த வேலை நிறுத்தத்தை முன்னின்று  நடத்துவதும் இதற்கு உதாரணமாகும். எப்போதும் தனியே நிற்கும்  தோழர். மகாதேவையா தலைமையில் ஆன AIPEDEU  சங்கமும்  இந்த வேலை நிறுத்தத்தில்  தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாக அவரது வலைத்தளத்தில்  வெளியிட்டுள்ளார் என்பதும் இங்கு  குறிப்பிடத்தக்கது. 

மத்திய அரசின்  தனியார் மயக் கொள்கைகளை தடுத்திட நாம் தொடர் போராட்டங்கள் பல காலமாக நடத்தி வந்துள்ளோம். NATIONAL  POSTAL POLICY 2012 என்பது அறிவிக்கப்பட்டு , PPP  என்று சொல்லப்படும்  PRIVATE -PUBLIC -PARTNERSHIP  என்ற கொள்கை அஞ்சல் துறையில் தன்னிச்சையாக அறிவிக்கப் பட்டுள்ளது உங்களுக்கு தெரிந்திருக்கும். INDIA  POST  வலைத்தளத்தில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

இந்த சூழ் நிலையில் தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு அஞ்சல் சேவையில் பங்கு என்பது  தற்போது பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.  ஒவ்வொரு அஞ்சலகத்திலும்  கூரியர் நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கிக் கொடுக்க இந்த வரைவு வழி வகை செய்துள்ளது . இதனை நாம் எதிர்க்க வேண்டிய  கட்டாயத்தில்  உள்ளோம். நாம் மட்டுமே தனியாக போராடினால் மத்திய அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்திட முடியுமா என்பதை உங்களின் சிந்தனைக்கு விடுக்கிறோம். 

நாடு முழுதும் உள்ள கோடிக்கணக்கான  மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் , அமைப்பு சாரா ஊழியர்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள்  திரண்டெழுந்து போராடும் போது  நாம் மட்டும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாமா ?

இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் , பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தால்  , நாம்  போராடும் போது  எவர் வருவார் என்பதை  சிந்திக்க வேண்டுகிறோம் .

எப்போதும் போல  நம்மில் ஒரு சிலர்  இது அரசியல் கட்சிகளின் போராட்டம் என்று கூறி ,  ஊழியர்களை  பிளவு படுத்த நினைப்பது எந்த வகையில் சரி என்பதை  உங்களின் சிந்தனைக்கே  விடுகிறோம் .  

நாளை BSNL  போல நமது துறையும்  சீரழிக்கப் படும்  . BSNL  ஊழியர்கள் , அவர்களது துறை காக்க போராடும் காலமெல்லாம்  அதனை கொச்சைப் படுத்திய  சில பிளவு வாத சக்திகள் , இன்று  4 ஆண்டுகளாக அந்த ஊழியர்களுக்கு BONUS  நிறுத்தப் பட்டுள்ளதற்கு  என்ன பதில் சொல்வார்கள் . போதிய நிதி இல்லை என்று கூறி BSNL  இல்  மாத சம்பளமே சில மாதங்களுக்கு முன்னர் நிறுத்தப் பட்டது உங்களுக்கு நினைவிருக்கும் . அவர்களுக்கு LTC  கிடையாது . தற்போது ஒரு லட்சம் ஊழியர்கள் உபரி என்று அறிவிக்கப் பட்டு  VRS  இல் செல்ல நிர்ப்பந்திக்கப்  படுகிறார்கள் 

இது போல நமது துறையிலும் , கூரியர் நிறுவனங்களுக்கு கதவு திறந்து விடப்பட்டு , CBS  திட்டம் மூலம்  கிளை அஞ்சலகங்கள் வரை centralised  server  உடன்  இணைக்கப் படுமானால் ,  துணை  அஞ்சலகங்களில் வேலை  பாதியாகக் குறையும் .  தலைமை அஞ்சலகங்களில் SBCO,  SO SB BRANCH, MO PAID BRANCH   போன்றவை இருக்காது .

 ECS  மூலம் சம்பளம் உட்பட அனைத்து  ஊழியர்  BILL களும் பட்டு வாடா செய்யப் படும் போது  ACCOUNTS  BRANCH  எப்படி  இருக்கும் ?  அப்போது  ஊழியர்கள் உபரி என்று  இந்த இலாக்காவும் , அரசாங்கமும் அறிவிக்க எவ்வளவு நேரம் ஆகும் ?  BSNL  போல  நமக்கும்  போனஸ்,  சம்பள  நிறுத்தம் வருமா வராதா ?  இந்தக் கொடுமை எல்லாம் எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதா இல்லையா ? இதனை எதிர்க்க இந்திய தேசமெங்கும்  அனைத்து பகுதி ஊழியர்களும் அணி திரளும் போது 
நாம் மட்டும் ஒதுங்கிக் கொள்ளலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்வது   கோழைத்தனமா ?  குழு மனப்பான்மையா ?

பொது நன்மை தேவையா ?  தனி மனிதர்களின் விருப்பு வெறுப்பு  தேவையா ?சிந்திக்க வேண்டுகிறோம் .  இன்று 10 கோடி பேருடன் இணைந்து  போராட வில்லையானால் , நாளை   தனியே போராடி மட்டும்  தலைகீழாக  மத்திய அரசின் கொள்கை முடிவுகளை புரட்டிப் போட்டுவிட முடியுமா ?  ஒவ்வொரு துறையிலும் ஊழியர்கள் பாதிக்கப் படும் போது , ஆங்காங்கே போராடி  தடுக்க முடியாத போது , தற்போது  அனைத்து பகுதி ஊழியர்களும் ஒன்று  திரண்டுள்ளோம் !

இன்றில்லையேல்  என்றும் இல்லை ! 

களம் இறங்கிப் போராடுவோம் !

போராட்டத்தை முழு வெற்றியாக்குவோம் !


போராட்ட வாழ்த்துக்களுடன் 

 NFPE- தேனி கோட்டம்

Monday 18 February 2013

TWO DAYS STRIKE ON 20 FEB &
21 FEB 2013
 
இந்திய தேசத்தின் மிகப் பெரும் தொழிற் சங்கங்களான INTUC, AITUC, CITU, BMS, HMS உள்ளிட்ட 11 தொழிற்சங்க மையங்கள், மத்திய , மாநில, பொதுத் துறை ஊழியர் சங்கங்கள்  அறிவித்துள்ள 48 மணி நேர வேலை நிறுத்தம்.

NFPE, FNPO சம்மேளனங்கள் மற்றும்  GDS ஊழியர் சங்கங்கள்  சேர்ந்து நடத்தும் வேலை நிறுத்தம்.

7 ஆவது ஊதியக்குழு , 50% பஞ்சப்படி இணைப்பு, GDS போனஸ், புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்தல்  போன்ற 25 அம்சக் கோரிக்கைகளுக்கான வேலை நிறுத்தம்.

பிப்ரவரி 20 & 21 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் !
 

       வேலை நிறுத்தத்திற்கு  தயாராவீர் !
 
வெற்றி வாழ்த்துக்களுடன்!

                                     NFPE- தேனி கோட்டம்

Wednesday 13 February 2013


          சுழல் மாறுதல்  2013

அன்பார்ந்த தோழர்களே /தோழியர்களே  ! 
    
                
இந்த ஆண்டு  சுழல் மாறுதல்  அறிவிப்பு  வெளிவந்துள்ளது .
விண்ணப்பங்கள் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய
கடைசி நாள் 26.2.2013.     EXTENSION கேட்பவர்கள் 26.02.2013 குள்  
PMG அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும் .விடுதல் /சேர்த்தல் 
இருந்தால் 18.2.2013 குள்  கோட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்கவும் .

      SPM VACANT                   PA VACANT

 1)  Bangalamedu                             1) Periyaklam HO        - 1                 
 2)  Kadamalaikundu                        2) Devadanapatti         - 1                       
 3)  Periyakulam Bzr                        3) Sedapatti                 - 1                 
 4)  Periyakulam East                       4) Bodinayakanur HO   - 1             
 5)  Saptur                                       5) Cumbum                   - 1
 6)  T Nagar Theni                           6) KK Patti                  - 1
 7)  Pudupatti                                   7) Royappanpatti           - 1
 8)  Highwavys                                 8) Sillamarathupatti        - 1
 9)  Kamatchipuram                          9) Thevaram                 - 1
10) Kombai                                    10) Uthamapalayam        - 1
11)  Periyar Project                        
12)  Uthamapalayam Bzr                      O/o SPOs/OA           -2
13)  Venniar Estate                               Acct/ Bok                -1
     Acct/Spos               -1

Monday 11 February 2013

TN JCA NOTICE ON 48 HOURS STRIKE










Thursday 7 February 2013

Direct Cash Transfer Scheme (DCT) is going to be launched through post offices in Chittoor district on 09.02.2013

The direct cash transfer scheme (DCT) is going to be launched through post offices in Chittoor district. The seeding of the accounts of beneficiaries with Aadhaar numbers and biometrics is being completed and it would be launched by February 9, Chief Postmaster General AP Circle Karuna Pillai said.

Union Minister for Rural Development Jairam Ramesh, Union Minister of State for Information Technology and Communication Killi Kripa Rani, Chief Minister N Kiran Kumar Reddy and other Ministers and dignitaries are expected to attend the launch, she said speaking on the sidelines of the AP Postal Regional Cultural Selection Trials 2013 here on Saturday.

Further, the Department of Posts is launching its core banking service in Srikakulam district and Parvathipuram division this month, she said. With the linking of the postal savings bank accounts the users would be able to transact their accounts in any post office in the region for now and later it would be expanded to cover all the post offices. These accounts also would be seeded with the Aadhaar and biometric details to enable their unique identification and enable them to be used for the Centre’s DCT scheme.

Accepting the fact that there were delays in the delivery of Aadhaar cards to individuals she said that postmen were heavily burdened. In some cases the postmen have 8,000 articles to deliver. This would cause a delay in their delivery. In Hyderabad, the postmen have been delivering the Aadhaar cards on Sundays and holidays also, she said and added that the Department was also recruiting staff apart from provide postmen with two-wheelers to increase the efficiency in the last mile delivery, she added.

The Department will sett up two automatic mail sorting machines at its complex near the Hyderabad airport. One system would cater to the regular letters and the other to sort the parcels. The letter sorting machine would be able to handle 35,000 letters per hour and the other would be able to sort 25,000 parcels per hour.

Source:-The Hindu

Wednesday 6 February 2013

Merger of 50% of DA and DR with basic pay' - Finance Ministry not agreed to the Demand


    The below explanation was presented by the Minister of State for Finance Shri.Namo Narain Meena to the questions regarding merger of DA / DR  with basic pay of Central Government employees and Pensioners in the Parliament on 14.12.2012.

Question: 

   Whether various Associations/ Organisations of Central Government employees demanded merger of 50 per cent Dearness Allowance into the basic pay of Central Government employees and pensioners and the recommendation of the Sixth Central Pay Commission in this regard and action taken by the Government thereto?

Reply:

  Yes, A number of representations have been received from Associations/Organizations of Central Government Employees/Pensioners and individuals demanding merger of 50% of Dearness AHowance/ Dearness Relief with basic pay/pension respectively. The demand has been considered by the Government and not agreed to since the 6th Central Pay Commission has not recommended as such. 

The 6th Central Pay Commission did not recommend merger of dearness allowance with Basic Pay at any stage. Government accepted this recommendation vide Government of India Resolution dated 29.08.2008.
RJCM MINUTES FINAL REPLY RECEIVED FOR APPROVAL FROM STAFF SIDE

அன்புத் தோழர்களே ! வணக்கம் ! RJCM  MINUTES  DRAFT  COPY  இல் நாம் கேட்டிருந்த திருத்தங்களுக்கு  இறுதி பதிலாக சிலவற்றை CPMG  இடமிருந்து அனுப்பியுள்ளார்கள். இதிலும் நமக்கு உடன்பாடில்லாத பிரச்சினைகளுக்கு DISAGREEMENT  செய்ய வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம். CPMG  அலுவலகத்தில் இருந்து வந்த  பதிலை உங்கள் பார்வைக்கு கீழே தருகிறோம். பார்த்தபின் உங்கள் ஆலோசனைகளை தரவும்.





MINUTES COPY OF THE BMM , SOUTHERN REGION

அன்புத் தோழர்களே ! வணக்கம் ! தென் மண்டலத்தில்  நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்த இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி நடைபெற்று அதன் MINUTES  COPY  அளிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு புதிதாக மாறுதலில் பணியில் அமர்ந்த  திருமதி . சாருகேசி PMG , SR  அவர்களுடன் நமது மண்டலச் செயலர் தோழர். K . நாராயணன் அவர்கள் கடந்த 19.1.2013 அன்றும் 04.02.2013 அன்றும்  நேர் காணல்  பெற்று  பல்வேறு ஊழியர் பிரச்சினைகளை பேசியுள்ளார். அதில் பல தீர்க்கப்பட உறுதி அளிக்கப் பட்டுள்ளன. 

ஏற்கனவே நடைபெறாமல் இருந்த ராமநாதபுரம் கோட்ட மாதாந்திர பேட்டி  CPMG  தலையீட்டில்  கடந்த 27.12.2012 அன்று நடத்தப் பட்டது. 

இதுபோல பழி வாங்கும் நடவடிக்கையாக பாம்பன் SPM  தோழர். P . நாகராஜன் அவர்கள் அங்கிருந்து 90 கி. மீ. தொலைவில் உள்ள ஆனந்தூர் SO  விற்கு மாறுதல் அளிக்கப் பட்டிருந்தது , தற்போது சரி செய்யப்பட்டு  அவரின் விருப்பப் படி அருகில் உள்ள ராமேஸ்வரம் SO  விற்கு உத்திரவு அளிக்கப்பட்டு பணியில் அமர்ந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 


ராமநாதபுரம் தோழர். ஞானசேகரன் மாறுதல் , வாடிப்பட்டி தோழர் . காளிமுத்து மாறுதல் ஆகியவை  உறுதியளிக்கப்பட்டுள்ளது. 


திருநெல்வேலி கோட்டச் செயலர் தோழர் ஜேக்கப் ராஜ் , திண்டுக்கல் கோட்டப் பொருளர் தோழர். மைக்கேல்  சகாயராஜ் ஆகியோரின் IMMUNITY TRANSFER க்கு  சட்டப்படி அவர்களுக்கு இடமாறுதல் அளிக்க அந்தந்த கோட்டக் கண்காணிப்பாளர்களுக்கு  உரிய உத்திரவு தற்போது அளிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே நிலுவையில் இருந்த  அம்பை தோழியர் பகவதி அவர்களின் RULE 38  இடமாறுதல் என்பது  தற்போது நிறைவேற்றப்பட்டு அந்தத் தோழியர் RELIEF  அளிக்கப்பட்டு பணியில் அமர்ந்தார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


மாநிலச் சங்கத்தின் இடையறாத முயற்சிக்கு உங்கள் மேலான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம்.தென் மண்டலத்தில் கடந்த 4 மாதங் களாக இருந்த இருக்க நிலை தற்போது  தளர்ந்துள்ளது.





Sunday 3 February 2013


ADDITIONAL CHARGE ORDERED FOR CCR AND WR