OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Thursday 26 September 2013




New Delhi, Sept 25 (IBNS) 

Union Finance Minister P.Chidambaram on Wednesday announced that Prime Minister Manmohan Singh has approved the constitution of the Seventh Central Pay Commission (CPC).

The average time taken by a Pay Commission to submit its recommendations has been about two years.

"Accordingly, allowing about two years for the 7th CPC to submit its report, the recommendations are likely to be implemented with effect from 1.1.2016," said Chidambaram in a statement.

"The names of the Chairperson and members as well as the terms of reference (ToR) of the 7th Pay Commission will be finalised and announced shortly after consultation with major stakeholders," he said.

Since India's Independence, pay commissions have been set up on a regular basis to review and make recommendations on the work and pay structure of all civil and military divisions of the Government of India.

******************************************************************************

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று 7வது ஊதியக் குழுவை நியமித்து பிரதமர் மன்மோகன்சிங் இன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார். 7வது ஊதியக் குழு அமைத்து அதன் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் நீண்டகால கோரிக்கை. இந்த ஊதியக் குழுவில் வேறு பல ஊழியர்களையும் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று ஐநா பொதுச்சபை கூட்டத்துக்கு நியூயார்க் செல்வதற்கு முன்பாக 7வது ஊதியக் குழுவை நியமித்து பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஊதியக் குழு 2 ஆண்டுகாலம் செயல்படும். இக் குழுவின் பரிந்துரைகள் 2016ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் 50 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர். அண்மையில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FIR AGAINST SRI. AYYAKKANNU , SPOs., TIRUPPATTUR DIVISION

"என்ன தேசமோ ! இது என்ன தேசமோ !
இங்கு பொய்கள் கூடியே ஒரு நியாயம் பேசுமோ ?
 தர்மம் தூங்கிப் போகுமோ ?  நீதி  வெல்லுமோ ? 
வெகு நாளும் ஆகுமோ ?"
*************************************
பார்க்க  தினத்தந்தி பத்திரிகை செய்தி ! 

கணவனை வேலைக்கு திரும்ப சேர்க்க வேண்டுமானால் அந்த ஊழியரின் மனைவியிடம்  தன் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று திரு. அய்யாக்கண்ணு வற்புறுத்தினாராம் .  
இந்தப் புகாருக்கு ஆதாரமாக செல் போனில் பதிவு செய்யப்பட கண்காணிப்பாளரின் உரையாடல் நகல் CD இல் பதிவு செய்து அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளதைப் பார்க்கவும். 
 திரு . அய்யாக்கண்ணு மீது திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை (FIR) நகலினை  கீழே பார்க்கவும்.  கணவனை மீண்டும் பணிக்கு சேர்த்துக் கொள்ள ரூ. 35000/-  லஞ்சம் பெற்றதாகவும்  அது தவிர அந்த ஊழியரின் மனைவியிடம் "இரவில் தன்னுடன் தனியாக  தங்கினால் தான்  அவரது கணவருக்கு மீண்டும், வேலை தருவேன்" என்று  திரு அய்யாக்கண்ணு  கூறியதாகவும் FIR அனைத்து  மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார்கள். 

இதனால் அந்த கண்காணிப்பாளர் எந்த நேரமும் கைது செய்யப் படலாம் என்றும் அதனை எதிர்பார்த்து  "முன் ஜாமீன்" பெற்றிட அவர் பல நீதி மன்றங்களை அணுகியுள்ளதாகவும்  திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் இருந்து மாநிலச் சங்கத்திற்கு தகவல்கள் வந்துள்ளன.  

சாதாரண ஊழியர்கள் தவறு செய்ததாக வெறும் புகார் வந்தாலே 'SUSPEND" செய்யும் நிர்வாகம் , இவ்வளவு நடந்தும் வாய் மூடி மௌனியாக இருப்பது ஏன் ? என்று  ஊழியர்கள்  மற்றும் பொதுமக்கள் கொந்தளிப்பில்  உள்ளார்கள். மகளிருக்கு எதிரான புகார் வந்தால் உடன் விசாரித்து "டிஸ்மிஸ் " செய்திட பரிந்துரைக்கும்  அந்த அமைப்பின் அதிகாரி , இந்த புகார் மீது  நடவடிக்கை எடுக்கவில்லையாம் ! ஏன் என்று தெரியவில்லை என்று ஊழியர்கள்  மற்றும் மகளிர் அமைப்புகள் கொந்தளித்துள்ளார்கள்.

எனவே இது  குறித்து குற்றம் சாட்டப் பட்ட அந்த  அதிகாரி உடன்  "SUSPEND" செய்யப் பட்டு துறை ரீதியான  நடவடிக்கை  எடுக்கப் படவில்லை எனில்  ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சென்னையில்  முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலக வாயிலில் மாபெரும் அளவில் மகளிர் அமைப்புகளை திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் ஓரிரு நாளில் நடத்தப் போவதாக திருப்பத்தூர் பகுதியில் இருந்து அதன் செயலாளர் நம்மிடம் தெரிவித்துள்ளார். 




Wednesday, September 25, 2013

திருப்பத்தூர் அஞ்சல் கண்காணிப்பாளர், சஸ்பெண்ட் செய்யப்பட ஊழியரின் மனைவியிடம் செல் போனில் செக்ஸ் டார்ச்சர் ... தினகரன் பத்திரிக்கை செய்தி !

திருப்பத்தூர் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர்
 திரு.அய்யாக்கண்ணு அவர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்ட கிளை அஞ்சலக அதிகாரியின் மனைவியிடம்  பணிக்கு திரும்ப உத்திரவிட 
 ரூ. 35000/-  லஞ்சம்  பெற்றதாகவும் ,  மேலும் அவரிடம் செல் போனில் ஆபாசமாக பேசி செக்ஸ்  தொந்தரவு செய்ததாகவும்  திருமதி . சரோஜா என்பவர்  ஆடியோ CD இல் பதிவு செய்யப் பட்ட ஆதாரத்துடன்  நேற்று  திருப்பத்தூர் அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அதன்மீது காவல் நிலையத்தில் FIR போடப்பட்டு  வழக்கு தொடரப் பட்டுள்ளதாகவும் தினகரன்  வேலூர் பதிப்பின் 25.09.2013  பத்திரிக்கை செய்தியை  கீழே காண்க.

இவர் மீது ஏற்கனவே நமது மாநிலச் சங்கத்தின் மூலம் பலமுறை மேற்கு மண்டல PMG அவர்களிடம்  புகார் அளித்தும் CPMG அவர்களிடம் புகார் அளித்தும்  அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படாமல் ஊழியர் சங்கங்களை சமாதானப் படுத்தியது  மாநில மண்டல நிர்வாகங்கள் ! அவர் நல்ல அதிகாரி என்று வேறு பட்டயம் வழங்கினார்கள் ! 

 நமது அகில இந்திய சங்கமும் அவர் மீது புகார் அளித்துள்ளது . நமது சம்மேளன மாபொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்களும் நேரிடையாக CPMG அவர்களுக்கு புகார் அளித்துள்ளதும்  
குறிப்பிடத் தக்கது. 

ஆனால் அதிகாரிகளுக்கு அதிகாரி என்ற வகையில்  அவரை விட்டுக் கொடுக்காமல்   பல  உயர் அதிகாரிகள்  காப்பாற்ற  நடவடிக்கை எடுத்து கோப்புகளை  இழுத்து மூடினர். 

"அரசன் அன்று கொல்வான் , தெய்வம் நின்று கொல்லும் "  இது 
நமது நாட்டின் முது மொழி.  தவறுக்கு மேல் தவறு செய்த 
அந்த அதிகாரி  இன்று  காவல்துறையின்  பிடியில் ! 

உயர் நீதி மன்றத்தில்  பிடி வாரண்டுக்கு ,  பணம் கட்டிவிட்டேன் என்று கூறி ANTICIBATORY  BAIL போட்டு இன்று வெளியில் மண்டல அலுவலகத்தில்  உலாவரும் ஒரு ஊழல் அதிகாரி இவருக்கு பாதுகாப்பு அளிக்கிறாராம் . இது குறித்தும்  நமது PMG, WR அவர்களும் CPMG அவர்களும்  கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

"என்ன தேசமோ ! இது என்ன தேசமோ !
இங்கு   தர்மம் தூங்கிப் போகுமோ ?  நீதி  வெல்லுமோ ? 
வெகு நாளும் ஆகுமோ ?"
 மாநில மண்டல அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டுகிறோம்!