Pages

Monday, 8 October 2012

வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் - திருச்சி மண்டலம்


04.10.2012 அன்று மாலை  திருச்சி   RMS HRO  மன மகிழ் மன்ற அரங்கில்  திருச்சி மண்டல  வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் , திருச்சி  கோட்ட JCA  சார்பில் வெகு சிறப்பாக ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது . கிட்டத்தட்ட 200 தோழர்கள் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில் NFPE  சார்பில் மாநிலச் செயலர்கள்  தோழர். J.R., P 3,  தோழர். K.  சங்கரன் R 3,  மண்டலச் செயலர் தோழர்.A.  மனோகரன் , மற்றும் FNPO   சார்பில்  மாநிலச் செயலர்கள்  தோழர். G.P. முத்துக் கிருஷ்ணன்  P 3,   தோழர். P. குமார் R 3,   தோழர் K. குணசேகரன் P4,   உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு  வேலை நிறுத்த காரணங்களை விளக்கி  சிறப்புரை ஆற்றினர். இரவு 09.00   மணி வரை  கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்திட  கலந்து கொண்ட  அனைத்துத் தோழர்களும்  உறுதி ஏற்றனர். கூட்ட ஏற்பாடு செய்திருந்த NFPE/FNPO கோட்டச் சங்க நிர்வாகிகளுக்கு  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி.  

No comments:

Post a Comment