Pages

Tuesday, 30 December 2014

ஏர் ஏசியா விமானம் கண்டுபிடிப்பு ; உடல்கள் கடலில் ...

சுமத்ரா : காணாமல் போன ஏர் ஏசியா விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஜாவா கடலில் விழுந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சோகத்தை சொல்லிக்கொள்ள வார்த்தைகள் ஏதுமில்லை என ஏர் ஏசியா தலைமை அதிகாரி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஏர் ஏசியா கடலில் தான் விழுந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலில் மிதக்கும் உடல்கள் தொடர்பான காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது வரை 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷியா கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சுர்பையா விமான நிலையத்தில், பலியான பயணிகளின் உறவினர்கள் குவிந்துள்ளனர்

No comments:

Post a Comment