Pages

Wednesday, 25 February 2015

பொது மக்களின் கருத்து

நூறாண்டுகளுக்கு முற்பட்ட நீராவி இரயில் எஞ்சினை இரயில்வேத்துறை இன்னமும் பாதுகாத்து வருவது போல், பாரம்பரியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைத் தொல்லியல் துறை அடைகாப்பது போல், நமது பெருமைக்குரிய மக்கள் சேவைகளிலொன்றாக எண்ணியாவது தந்தி சேவையைத் தக்க வைத்திருக்கலாம். அதுதான் இல்லை என்றாகி விட்டது. சரி. தபால் சேவையையாவது ஒழுங்காகக் கொடுக்கலாம் அல்லவா? கிளை அலுவலகங்கள் மூடப்படுவதும், ஊழியர் பற்றாக்குறையென்று சங்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதும் அத்துறையில் வாடிக்கையாகிவிட்டது.



இதற்கிடையில் நமது நாட்டின் எந்த மூலை முடுக்குக்கும் ஐம்பது பைசா செலவில் ஒரு கடிதத்தை அனுப்பிவிட முடியும் என்பது ஏழை நடுத்தர மக்களுக்கு எத்தனை சந்தோஷம் தருகின்ற விஷயம் தெரியுமா?



இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் தபால் அனுப்பும் சேவைகளில் மட்டுமல்லாது பலசேவைகளிலும் கால் பதித்துள்ள இந்திய அஞ்சல் துறை, புதியதாக வங்கி ஒன்றைத் தொடங்கி செயல்படுகிறதாம். அதற்கு பதிலாக, தனது அடிப்படைச் சேவையான தபால் சேவையைப் பழையபடி சரியாக வழங்குவதையே இந்தியத் தபால் துறை முக்கிய நோக்கமாகக் கொள்ளவேண்டும்.

Source : geeonenews

No comments:

Post a Comment