Pages

Friday, 13 March 2015

சென்னை வட்டாரத்தில் அஞ்சல் சேமிப்பு வங்கி பணி நேரம் நீட்டிப்பு

சென்னை வட்டாரத்தில் உள்ள அஞ்சல் சேமிப்பு வங்கிகளின் பணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர வட்டார தபால் துறை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெண் குழந்தைகளுக்கான "சுகன்யா சம்ரித்தி' கணக்குகளை நடப்பு நிதியாண்டில் 1 கோடி அளவுக்கு தொடங்க தபால் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், தபால் அலுவலக சேமிப்பு வங்கி மையங்களில் நிதியாண்டின் இறுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இதனால், அஞ்சல் சேமிப்பு வங்கிகள் செயல்படும் நேரம் நீட்டிக்கப்படுகிறது. இதன்மூலம் வழக்கமான பணி நேரத்தைவிட கூடுதலாக ஒரு மணி நேரம் வங்கி செயல்படும். இதன்படி சென்னை வட்டாரத்தில் உள்ள அனைத்து அஞ்சல் சேமிப்பு வங்கிகளும் மார்ச் 31-ஆம் தேதி வரையில் கூடுதல் நேரம் செயல்படும்.
Source  : Dinamani 

No comments:

Post a Comment