OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Thursday, 18 October 2012

DEPARTMENT/GDS ஊழியர்களுக்கான BONUS உத்திரவு

PRODUCTIVITY LINKED BONUS FOR THE ACCOUNTING YEAR 2011-2012

File No. 26-05/2012-PAP
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
(Establishment Division)

Dak Bhawan,Sansad Marg,
New Delhi-110 001
Dated :18.10. 2012

To      
All Chief Postmasters General,
Postmasters General
 General Managers (Finance)
/Deputy Directors of Accounts (Postal)

Subject: - Productivity Linked Bonus for the Accounting year 2011-2012

Sir/Madam,
I am directed to convey the approval of the President of India for payment of Productivity Linked Bonus for the accounting year 2011-2012 equivalent of emoluments of 60 (Sixty) days to the employees of Department of Posts in Group `D`,Group `C` and non Gazetted Group `B`. Ex-gratia payment of Bonus to Gramin Dak Sevaks who are regularly appointed after observing all appointment formalities and Ad-hoc payment of Bonus to Casual labourers who have been conferred Temporary Status are also to be paid equivalent to allowance/wages respectively for 60 (sixty) Days for the same period/year.

1.1 The calculation for the purpose of payment of Bonus under each category will be done as indicated below.

Wednesday, 17 October 2012

GDS BPM களுக்கு ஊதியப் பாதுகாப்பு


அன்புத் தோழர்களே !  நமது  JCA  தலைவர்களுக்கு  இலாக்கா துணை அமைச்சர் திரு. சச்சின் பைலட் அவர்கள்  அளித்த வாக்குறுதியின் படி  GDS BPM  களுக்கு DDG LEVEL  கமிட்டி  பரிந்துரை அளித்ததையும்  அதன் காரணமாக அவர்கள் வேலைப் பளு குறைந்தாலும் கூட அவர்கள் ஊதியம் பாதுகாக்கப் படும் என்றும்  நேற்றைய செய்தியில் தெரிவித்திருந்தோம் .  இன்று  உத்திரவு வெளியிடப்பட்டு உள்ளது. பாதிக்கப் பட்ட GDS BPM  தோழர்களிடம் இதனைத் தெரிவிக்கவும் குறிப்பாக  ஈரோடு கோட்டத்தில் இது நடந்துள்ளதாக நமக்கு தகவல் வந்துள்ளது . அங்குள்ள நம் சங்க முன்னோடிகள் , பாதிக்கப் பட்ட தோழர்களின் ஊதியம் பாதுகாக்கப்பட உடன் நடவடிக்கை எடுக்கவும் 

NEWS FROM SECRETARY GENERAL , NFPE ON GDS AND BONUS ISSUES


1. BONUS 2012 - POSTAL BOARD  HAS SENT THE BONUS FILE  TO THE HONBLE  MINISTER FOR COMMUNICATIONS FOR HIS APPROVAL.

2. REGARDING  ENHANCEMENT OF BONUS  BONUS CEILING TO GDS  FROM 2500 TO 3500 - AS THE FINANCE HAS AGAIN REJECTED  THE PROPOSAL,  COMMUNICATIONS MINISTER WILL  BE TAKING UP THE CASE WITH THE  FINANCE MINISTER  AS PER THE ASSURANCE GIVEN  TO THE JCA LEADERS EARLIER.

3. GDS ALLOWANCE PROTECTION -  THE RECOMMENDATIONS OF THE DDG LEVEL COMMITTEE  IS TO GRANT PROTECTION FOR  ONE YEAR AND TO GIVE  CHANCE TO THE GDS TO IMPROVE  THE WORK LOAD.  DIRECTORATE ORDERS WILL BE ISSUED ACCEPTING THIS RECOMMENDATIONS AS ASSURED BY SHRI. SACHIN PILOT, MINISTER FOR COMMUNICATIONS (STATE)  TO THE JCA LEADER AT HIS RESIDENCE.

= M. KRISHNAN, SECRETARY GENERAL, NFPE.

Holding of Limited Departmental Competitive Examination for Filling the Posts of Postman/ Mail Guards as per the revised Recruitment Rules


HOLDING OF LIMITED DEPARTMENTAL COMPETITIVE EXAMINATION  FOR  FILLING THE POSTS OF POSTMAN/ MAIL GUARDS AS PER THE REVISED RECRUITMENT RULES

SCHEDULE  OF ACTIVITY
POSTMAN/ MAIL GUARD
 ISSUE OF NOTIFICATION
15.10.2012
LAST DATE  FOR RECEIPT OF APPLICATIONS
02.11.2012
ISSUE OF ADMIT CARDS
05.01.2013
DATE OF EXAMINATION
20.01.2013
TIMING OF EXAMINATION
10.00 A. M TO 11.30  AM 
DATE OF DECLARATION  OF RESULTS
31-01.2013

Friday, 12 October 2012

TN JCA POSTER ON 18.10.2012 ONE DAY STRIKE


ANOTHER ROUND OF CONCILIATORY MEETING BEFORE LABOUR COMMISSION ORDERED


அன்புத் தோழர்களே ! தோழியர்களே !  வணக்கம் !

தொழிலாளர் நல ஆணையம் முன்பாக  மேலும் ஒரு சுற்று  பேச்சு  வார்த்தைக்கு  நாம் எதிர்வரும் 15.10.2012 அன்று  அழைக்கப்பட்டுள்ளோம்.  அந்தப் பேச்சு வார்த்தையில்  நமது புகார்களுக்கு ஆதாரமாக எழுத்து பூர்வமான  புகார்களோ அல்லது நேரடி சாட்சியமோ (ORAL EVIDENCE) அளிக்குமாறு  நாம் கோரப்பட்டுள்ளோம் . எனவே  பாதிக்கப் பட்ட எந்த ஒரு தோழர்/ தோழியரும்  நம் சங்கம் மூலமாக  அவர்களது புகாரை  அளிக்கலாம். 

அப்படி அளிப்பதாயின் உடன்  கையெழுத்துடன் கூடிய  புகார் மனுவை 
தொழிலாளர் நல ஆணையர் என பெயரிட்டு  நம் மாநிலச் சங்கத்திற்கு  அந்தந்த கோட்ட/கிளைச் செயலர் மூலம்  உடன்  ஸ்கேன்  செய்து E-MAIL லிலோ  அல்லது விரைவுத் தபாலிலோ அனுப்பி வைக்கவும். 

Wednesday, 10 October 2012

அனைத்து அஞ்சல் ஊழியர் கூட்டுப் போராட்டக்குழு மதுரை மண்டலம்-வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்



SCHEDULE FOR HOLDING POSTMEN AND MTS EXAM DECLARED


DG (POSTS) No A-34012/01/2012-DE                            Dated 08th October 2012

            I am directed to invite a kind reference to the SPB-I Section Circular No 37 -33/2009-SPB-I dated 11.07.2013 and No 44-14/2009-SPB-I dated 12.07.2012 wherein the amendment to RRs of 2010 in respect of Postmen/Mail Guard and Multi Tasking Staff respectively were circulated to all the concerned..

2          Further attention of the Circles is also invited to SBPB-I Section Circular No 45-14(ii)/2012-SBP-I dated 31.07.2012 wherein the pattern and syllabus for the above said two Examinations were communicated.  The Directorate vide letter No 45-14/2012-SPB-l dated 31.07.2012 issued detailed guidelines for conduct of the Examination to fill up the posts of Postmen/Mail guard and Multi Tasking Staff.

Tuesday, 9 October 2012

12.10.12 அன்று மதுரையில் சிறப்பு போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம்


அன்புத் தோழர்களே தோழியர்களே......

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே.....
-பார் புகழ் கவிஞன் பாரதி


      18.10.12 அன்று, மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு, அனைத்து மாநில செயலர்களூம், பங்கு பெறும் சிறப்பு போராட்ட பொதுக்குழு விளக்கக் கூட்டம் மதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 12.10.12 மாலை 6 மணியளவில் நடைபெறவிருப்பதால் மதுரை தென் மண்டலத்தைச் சார்ந்த அனைத்து அஞ்சல் தோழர்களும், தவறாமல் கலந்து கொண்டு மூன்று அம்சக் கோரிக்கையினை வென்று எடுக்க போராட்டக் களத்தை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...

பரவட்டும்.... போராட்டத் தீ பரவட்டும்......

இப்படிக்கு,
Joint Council Association
R. ராஜகுமார்
தேனி கோட்டச் செயலர்.

TN JCA CHANGED THE STRIKE DATE TO 18.10.2012


அன்புத் தோழர்களே ! தோழியர்களே !!!! வணக்கம் !


நேற்று நாம் அறிவித்த படி  இன்று ( 09.10.2012) காலை சுமார் 11.00 மணியளவில்  JCA  வின் கீழ் NFPE /FNPO  சார்ந்த அனைத்து மாநிலச் செயலர்களும்  ஒன்று கூடி,  நடந்த  சம்பவங்கள் குறித்தும் , JCA  வின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும்  விவாதித்தோம் . இறுதியாக ,  தற்போது இருக்கக் கூடிய சூழ்நிலையில்  தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும்  ஒரு நாள்  கால அவகாசத்தில்  வேலை நிறுத்தத்தை 11.10.2012 அன்று நடத்துவதில் உள்ள சிரமங்கள்  குறித்து  அனைவரும்  கவலை தெரிவித்ததாலும், தொழிலாளர் நல ஆணையத்தின்  கோரிக்கையை ஏற்று மேலும்  ஒரு  முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு  அவகாசம் அளிக்கவும்,  சட்ட ரீதியாக அதற்கான வாய்ப்பை  வழங்கிடவும்  பலரும் ஆலோசனை வழங்கியதாலும் , வேலை நிறுத்த தயாரிப்புகளை கோட்ட மட்டங்களில்  உரிய அறிக்கைகள் வழங்கி  அதனை  உறுப்பினர் மட்டத்தில்  இன்னும் பல கோட்டங்களில்  கொண்டு செல்ல அவகாசம் வேண்டுவதாலும் , வேலைநிறுத்த நாளை 18.10.2012 க்கு  மாற்றி  வைப்பதாக ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.    


நேற்று நிர்வாகத்திற்கு அறிவித்தபடி , உடனடியாக  நமது எதிர்ப்பையும் , சட்ட பூர்வமான  வேலை நிறுத்த நாள் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டியும் , அதற்கான  NOTICE ஐ   தயார்  செய்து , அனைத்து  மாநிலச் செயலர்களும்  அதில் கையெழுத்து இட்டு ,  மதியம் 01.45 மணியளவில் DPS HQRS  அவர்களிடம் நேரில் சென்று அளித்தோம்.   பின்னர் மதியம் 03.30 மணியளவில்  தொழிலாளர் நல ஆணையத்திற்கு நேரிடையாகச் சென்று  இதே NOTICE  ஐ அளித்து ,  மாநில நிர்வாகத்தின்  தன்னிச்சையான  , ஒரு சார்பு நிலையை விளக்கி உடன் அடுத்த கட்ட நடவடிக்கை  எடுக்குமாறு வேண்டினோம்.  ALC (CENTRAL)  அவர்களும்  உடன் நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்தார். 


வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்த  உடனே JCA  சார்பில்  போஸ்டர் அனுப்பிடவும் ,  விரிவான  சுற்றறிக்கை அனுப்பிடவும் தீர்மானிக்கப் பட்டது.

11.10.12 வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டு 18.10.12 அன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும்...


அன்பார்ந்த J.C.A தோழர்களே......

                 J.C.A அறை கூவலின் படி 11.10.12 அன்று நடக்கவிருந்த, தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம் மற்ற வேலை நிறுத்த ஆயத்தப் பணிகளுக்காக, 18.10.12 அன்று ஒத்தி வைக்கப்பட்டு, வேலை நிறுத்தம் நிச்சயம் நடைபெறும். அனைத்து J.C.A. அன்புத் தோழர்களும் தவறாது ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு மூன்று அம்ச கோரிக்கைகளை வென்று எடுப்பதற்கான போராட்டக் களத்தை வலுப்படுத்தும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். 

இப்படிக்கு,
R.ராஜகுமார்
தேனி கோட்டச் செயலர்

Monday, 8 October 2012

வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் - திருச்சி மண்டலம்


04.10.2012 அன்று மாலை  திருச்சி   RMS HRO  மன மகிழ் மன்ற அரங்கில்  திருச்சி மண்டல  வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் , திருச்சி  கோட்ட JCA  சார்பில் வெகு சிறப்பாக ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது . கிட்டத்தட்ட 200 தோழர்கள் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில் NFPE  சார்பில் மாநிலச் செயலர்கள்  தோழர். J.R., P 3,  தோழர். K.  சங்கரன் R 3,  மண்டலச் செயலர் தோழர்.A.  மனோகரன் , மற்றும் FNPO   சார்பில்  மாநிலச் செயலர்கள்  தோழர். G.P. முத்துக் கிருஷ்ணன்  P 3,   தோழர். P. குமார் R 3,   தோழர் K. குணசேகரன் P4,   உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு  வேலை நிறுத்த காரணங்களை விளக்கி  சிறப்புரை ஆற்றினர். இரவு 09.00   மணி வரை  கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்திட  கலந்து கொண்ட  அனைத்துத் தோழர்களும்  உறுதி ஏற்றனர். கூட்ட ஏற்பாடு செய்திருந்த NFPE/FNPO கோட்டச் சங்க நிர்வாகிகளுக்கு  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி.  

WISH U ALL HAPPY WORLD POST DAY (9 OCTOBER)

Wish u all Happy World Post Day (9 October): World Post Day is celebrated each year on 9 October, the anniversary of the establishment of the Universal Postal Union (UPU) in 1874 in the Swiss capital, Bern. It was declared World Post Day by the UPU Congress held in Tokyo, Japan, in 1969. The purpose of World Post Day is to create awareness of the role of the postal sector in people’s and businesses’ everyday lives and its contribution to the social and economic development of countries. The celebration encourages member countries to undertake programme activities aimed at generating a broader awareness of their Post’s role and activities among the public and media on a national scale.


TN JCA DECISION ON RECORDED MINUTES AND AFTERMATH

அன்புத் தோழர்களே ! வணக்கம் !

     இன்று மதியம் JCA  தலைவர்கள் DPS HQRS  அவர்களை சந்தித்து DRAFT COPY  MINUTES குறித்து கேட்கச் சென்றோம். ஆனால் அவர் ஏற்கனவே பதிவு செய்யப் பட்ட   FINAL MINUTES  இன்  நகலை நமக்கு வழங்கினார் , அதன் நகல் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் ஏற்கனவே  அனுப்பப் பட்டதாகவும்  நம்மிடையே தெரிவித்தார். 

       05.10.12 அன்று காலை  தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற  பேச்சு வார்த்தை  குறித்தும் , பின்னர் மதியம் அதன் மீதான  CPMG, TN  உடன்  நடைபெற்ற இரு தரப்பு பேச்சு வார்த்தை குறித்தும் நாம் ஏற்கனவே உங்களுக்கு தெரிவித்திருந்தோம் .  நம் வலைத்தளத்திலும்  பிரசுரித்திருந்தோம் . இது போலவே  தமிழக FNPO வலைத்தளத்திலும்  பிரசுரிக்கப் பட்டிருந்தது . திங்கள் அன்று  பேச்சு வார்த்தையின் பதிவு செய்யப்பட்ட MINUTES COPY  கிடைத்தவுடன்  இதன் மீதான  அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து JCA  கூடி முடிவெடுத்து அறிவிப்பதாக  தெரிவித்திருந்தோம். 

Friday, 5 October 2012

மதுரையில் நடந்த எழுச்சிமிகு ஆர்ப்பாட்டமும், போராட்ட பொதுக்குழு விளக்கக்கூட்டமும்,


ஒற்றுமை ஓங்குக....

மதுரையில் 05.10.2012 அன்று, மாலை 0530 மணியளவில், மதுரை மண்டல அலுவலகத்தில், ஆர்ப்பாட்டத்திற்கு J.C.A. தோழர்கள், அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

தென்மண்டல இயக்குனர் திரு.வ.ச. ஜெயசங்கர், ஆர்ப்பாட்டத்தினைத் தவிர்க்க வேண்டி, மாலை 0300 மணிக்கு எல்லாம் திருநெல்வேலி சென்றுவிட்டார். 

தென்மண்டல இயக்குனரால், கிட்டத்தட்ட 03.30 மணிக்கு எல்லாம் காவல்துறையினர் தெற்கு மண்டல வாயிற்கதவிற்கு அருகில்  குவிக்கப்பட்டு, கதவுகள் அடைக்கப் பெற்று எந்த தோழரையும் ஆர்ப்பாட்டத்திற்கு தென்மண்டலத்தின் உள்ளே நுழைய அனுமதிக்கப் படவில்லை. 

மாலை 0400 மணிக்கே தென்மண்டல அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும், அனுமதி அளிக்கப்பட்டு அலுவலகத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர்.

சுமார் 0430 மணியளவில் இருந்தே தென்மண்டல NFPE, FNPO தோழர்கள் எழுச்சியோடு பங்கேற்க வந்தபோது, காவல் துறையினரால் தடுக்கப்பட்டு, தொழிற்சங்கக் கடமைகளை நிறைவேற்ற விடாமல் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டப்பட்டனர்.

BI-LATERAL DISCUSSIONS ON STRIKE BY CPMG WITH JCA LEADERS


தொழிலாளர் நல ஆணையர்  உத்திரவுப்படி  05.10.2012  மாலை 03.30 மணியளவில்  CPMG TN  அவர்களால்  அதிகாரபூர்வமான பேச்சு வார்த்தைக்கு வேலைநிறுத்த  நோட்டீஸ்  அளித்த JCA  தலைவர்கள் அழைக்கப் பட்டனர். NFPE/FNPO  சார்பில் 13 மாநிலச் செயலர்கள்  பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர் .  மதுரை அஞ்சல் பயிற்சி மைய  இயக்குனரின்  அடாவடித்தனங்கள் குறித்தும் ,  பயிலாளர்களுக்கு  இழைக்கப் பட்ட கொடுமைகள் குறித்தும்  விரிவாக விவாதிக்கப் பட்டது.  

மேலும்  தோழர் ஜெயகுமாரின்  தற்கொலைக்கு  பயிற்சி மைய இயக்குனரின்  கொடுமைகளே காரணம் என்பதையும் விரிவாகத் தெரிவித்தோம் . அதே போல  தென் மண்டல இயக்குனரின்  அத்து மீறிய செயல்களையும் ,  இந்த தற்கொலையில் அவரின் வரம்பு மீறிய செயல்களையும் ,  உண்மைகளை மறைத்து  , அஞ்சல் மைய  இயக்குனருக்கு ஆதரவாக அவர் செயல் படும் தவறான விதம் குறித்தும்  விரிவாகத் தெரிவிக்கப் பட்டது.  இவை அனைத்தையும் CPMG அவர்கள் பொறுமையாகக் கேட்டறிந்தார். பல்வேறு கேள்விகளை கேட்டும் அதன் மீது விளக்கங்களையும்  பெற்றார். கிட்டத்தட்ட 3 1/2 மணி நேரம் இந்த விவாதம் நடைபெற்றது.

இறுதியாக  நம்முடைய  வேலை நிறுத்தத்திற்கான  மூன்று கோரிக்கைகளையும்  உடன்  நிறைவேற்ற வேண்டுமென நாம் வேண்டினோம் 

அதற்கு  CPMG TN  அவர்கள் கீழ்க்கண்டவாறு  பதில் அளித்தார். 

முதியோர் தொகையினை, வங்கிகள் பட்டுவாடா செய்வதில் குளறுபடி, மதுரை தினமலர் செய்தி


முதியோர் உதவித் தொகை மற்றும் பல நலத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை, மாநிலம் முழுவதும், நாட்டின் மிகப்பெரிய சேவை நிறுவனமான அஞ்சல் துறையில் வழங்கப்பட்டு, பயனீட்டாளர்களின் இருப்பிடத்திற்கே சென்று தபால்காரர்களால் பட்டுவாடா செய்யப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக அவற்றில் ஒரு பகுதியை சோதனை முயற்சியாக வங்கிகளின் மூலம் தமிழக அரசால் பட்டுவாடா செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி தள்ளாத வயதில் முதியோர் உதவித்தொகை பெறும் பயனீட்டாளர்கள் மற்றும் ஊனமுற்ற பல பயனீட்டாளர்கள் வங்கிகளால் பட்டுவாடா செய்யும் இடத்திற்கு அவர்களாகவே பணம் செலவழித்து சென்று பெற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு, ரேகை பெறுவதில் சிக்கல், கணக்குப்புத்தகம் பெறுவதில் சிக்கல் போன்ற   பல முரண்பாடுகளினால் பயனீட்டாளர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.வங்கிகளின் தற்போதைய அடிப்படை வசதிகளைக் கொண்டும், அதன் ஆட்பற்றாக்குறை காரணமாகவும் திறம்பட பட்டுவாடா செய்ய முடியாமல், வங்கி ஊழியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவற்றையெல்லாம் வெளிக்கொணரும் விதமாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உதவித்தொகை பட்டுவாடா செய்வது குறித்த வங்கி ஊழியர் கூட்டம் பற்றிய தினமலர் செய்தி 04.10.12 இங்கே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் பயனீட்டாளர்கள் அதிருப்திக்கு உள்ளாகி, மீண்டும் அஞ்சல் துறையே திறம்பட உதவித்தொகை பட்டுவாடா செய்யும் நிலை மீண்டும் உருவாகும் என்று அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தினமல்ர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோரிக்கைகளில் உறுதி ! சூடு பிடிக்கிறது போராட்டக்களம் !


மதுரை அஞ்சல் பயிற்சி மைய இயக்குனர்  அவர்களின் கொடுமைகளுக்கு எதிரான, நம் தோழர் ஜெயகுமாரின் உயிர்பலிக்கு நியாயம் கேட்டு நடைபெற உள்ள 11.10.2012  JCA வின் வேலை நிறுத்த NOTICEபெற்ற LABOUR COMMISSIONER அவர்கள் பேச்சு வார்த்தைக்கு 05.10.2012 அன்று காலை 11.00 மணிக்கும், நமதுCPMG அவர்கள் 05.10.2012 அன்று மாலை 3.00 மணிக்கும் JCA வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள் .