Pages
Showing posts with label J.C.A. Show all posts
Showing posts with label J.C.A. Show all posts
Friday, 12 October 2012
ANOTHER ROUND OF CONCILIATORY MEETING BEFORE LABOUR COMMISSION ORDERED
அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் !
தொழிலாளர் நல ஆணையம் முன்பாக மேலும் ஒரு சுற்று பேச்சு வார்த்தைக்கு நாம் எதிர்வரும் 15.10.2012 அன்று அழைக்கப்பட்டுள்ளோம். அந்தப் பேச்சு வார்த்தையில் நமது புகார்களுக்கு ஆதாரமாக எழுத்து பூர்வமான புகார்களோ அல்லது நேரடி சாட்சியமோ (ORAL EVIDENCE) அளிக்குமாறு நாம் கோரப்பட்டுள்ளோம் . எனவே பாதிக்கப் பட்ட எந்த ஒரு தோழர்/ தோழியரும் நம் சங்கம் மூலமாக அவர்களது புகாரை அளிக்கலாம்.
அப்படி அளிப்பதாயின் உடன் கையெழுத்துடன் கூடிய புகார் மனுவை
தொழிலாளர் நல ஆணையர் என பெயரிட்டு நம் மாநிலச் சங்கத்திற்கு அந்தந்த கோட்ட/கிளைச் செயலர் மூலம் உடன் ஸ்கேன் செய்து E-MAIL லிலோ அல்லது விரைவுத் தபாலிலோ அனுப்பி வைக்கவும்.
Wednesday, 10 October 2012
Tuesday, 9 October 2012
12.10.12 அன்று மதுரையில் சிறப்பு போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம்
அன்புத் தோழர்களே தோழியர்களே......
பரவட்டும்.... போராட்டத் தீ பரவட்டும்......
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே.....
-பார் புகழ் கவிஞன் பாரதி
18.10.12 அன்று, மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு, அனைத்து மாநில செயலர்களூம், பங்கு பெறும் சிறப்பு போராட்ட பொதுக்குழு விளக்கக் கூட்டம் மதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 12.10.12 மாலை 6 மணியளவில் நடைபெறவிருப்பதால் மதுரை தென் மண்டலத்தைச் சார்ந்த அனைத்து அஞ்சல் தோழர்களும், தவறாமல் கலந்து கொண்டு மூன்று அம்சக் கோரிக்கையினை வென்று எடுக்க போராட்டக் களத்தை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...
இப்படிக்கு,
Joint Council Association
R. ராஜகுமார்
தேனி கோட்டச் செயலர்.
TN JCA CHANGED THE STRIKE DATE TO 18.10.2012
அன்புத் தோழர்களே ! தோழியர்களே !!!! வணக்கம் !
நேற்று நாம் அறிவித்த படி இன்று ( 09.10.2012) காலை சுமார் 11.00 மணியளவில் JCA வின் கீழ் NFPE /FNPO சார்ந்த அனைத்து மாநிலச் செயலர்களும் ஒன்று கூடி, நடந்த சம்பவங்கள் குறித்தும் , JCA வின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தோம் . இறுதியாக , தற்போது இருக்கக் கூடிய சூழ்நிலையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒரு நாள் கால அவகாசத்தில் வேலை நிறுத்தத்தை 11.10.2012 அன்று நடத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து அனைவரும் கவலை தெரிவித்ததாலும், தொழிலாளர் நல ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அவகாசம் அளிக்கவும், சட்ட ரீதியாக அதற்கான வாய்ப்பை வழங்கிடவும் பலரும் ஆலோசனை வழங்கியதாலும் , வேலை நிறுத்த தயாரிப்புகளை கோட்ட மட்டங்களில் உரிய அறிக்கைகள் வழங்கி அதனை உறுப்பினர் மட்டத்தில் இன்னும் பல கோட்டங்களில் கொண்டு செல்ல அவகாசம் வேண்டுவதாலும் , வேலைநிறுத்த நாளை 18.10.2012 க்கு மாற்றி வைப்பதாக ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
நேற்று நிர்வாகத்திற்கு அறிவித்தபடி , உடனடியாக நமது எதிர்ப்பையும் , சட்ட பூர்வமான வேலை நிறுத்த நாள் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டியும் , அதற்கான NOTICE ஐ தயார் செய்து , அனைத்து மாநிலச் செயலர்களும் அதில் கையெழுத்து இட்டு , மதியம் 01.45 மணியளவில் DPS HQRS அவர்களிடம் நேரில் சென்று அளித்தோம். பின்னர் மதியம் 03.30 மணியளவில் தொழிலாளர் நல ஆணையத்திற்கு நேரிடையாகச் சென்று இதே NOTICE ஐ அளித்து , மாநில நிர்வாகத்தின் தன்னிச்சையான , ஒரு சார்பு நிலையை விளக்கி உடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினோம். ALC (CENTRAL) அவர்களும் உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்த உடனே JCA சார்பில் போஸ்டர் அனுப்பிடவும் , விரிவான சுற்றறிக்கை அனுப்பிடவும் தீர்மானிக்கப் பட்டது.
11.10.12 வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டு 18.10.12 அன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும்...
அன்பார்ந்த J.C.A தோழர்களே......
J.C.A அறை கூவலின் படி 11.10.12 அன்று நடக்கவிருந்த, தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம் மற்ற வேலை நிறுத்த ஆயத்தப் பணிகளுக்காக, 18.10.12 அன்று ஒத்தி வைக்கப்பட்டு, வேலை நிறுத்தம் நிச்சயம் நடைபெறும். அனைத்து J.C.A. அன்புத் தோழர்களும் தவறாது ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு மூன்று அம்ச கோரிக்கைகளை வென்று எடுப்பதற்கான போராட்டக் களத்தை வலுப்படுத்தும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
R.ராஜகுமார்
தேனி கோட்டச் செயலர்
Monday, 8 October 2012
வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் - திருச்சி மண்டலம்
04.10.2012 அன்று மாலை திருச்சி RMS HRO மன மகிழ் மன்ற அரங்கில் திருச்சி மண்டல வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் , திருச்சி கோட்ட JCA சார்பில் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . கிட்டத்தட்ட 200 தோழர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் NFPE சார்பில் மாநிலச் செயலர்கள் தோழர். J.R., P 3, தோழர். K. சங்கரன் R 3, மண்டலச் செயலர் தோழர்.A. மனோகரன் , மற்றும் FNPO சார்பில் மாநிலச் செயலர்கள் தோழர். G.P. முத்துக் கிருஷ்ணன் P 3, தோழர். P. குமார் R 3, தோழர் K. குணசேகரன் P4, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு வேலை நிறுத்த காரணங்களை விளக்கி சிறப்புரை ஆற்றினர். இரவு 09.00 மணி வரை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்திட கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களும் உறுதி ஏற்றனர். கூட்ட ஏற்பாடு செய்திருந்த NFPE/FNPO கோட்டச் சங்க நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி.
TN JCA DECISION ON RECORDED MINUTES AND AFTERMATH
அன்புத் தோழர்களே ! வணக்கம் !
இன்று மதியம் JCA தலைவர்கள் DPS HQRS அவர்களை சந்தித்து DRAFT COPY MINUTES குறித்து கேட்கச் சென்றோம். ஆனால் அவர் ஏற்கனவே பதிவு செய்யப் பட்ட FINAL MINUTES இன் நகலை நமக்கு வழங்கினார் , அதன் நகல் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் ஏற்கனவே அனுப்பப் பட்டதாகவும் நம்மிடையே தெரிவித்தார்.
05.10.12 அன்று காலை தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை குறித்தும் , பின்னர் மதியம் அதன் மீதான CPMG, TN உடன் நடைபெற்ற இரு தரப்பு பேச்சு வார்த்தை குறித்தும் நாம் ஏற்கனவே உங்களுக்கு தெரிவித்திருந்தோம் . நம் வலைத்தளத்திலும் பிரசுரித்திருந்தோம் . இது போலவே தமிழக FNPO வலைத்தளத்திலும் பிரசுரிக்கப் பட்டிருந்தது . திங்கள் அன்று பேச்சு வார்த்தையின் பதிவு செய்யப்பட்ட MINUTES COPY கிடைத்தவுடன் இதன் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து JCA கூடி முடிவெடுத்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தோம்.
Sunday, 7 October 2012
Friday, 5 October 2012
மதுரையில் நடந்த எழுச்சிமிகு ஆர்ப்பாட்டமும், போராட்ட பொதுக்குழு விளக்கக்கூட்டமும்,
மதுரையில் 05.10.2012 அன்று, மாலை 0530 மணியளவில், மதுரை மண்டல அலுவலகத்தில், ஆர்ப்பாட்டத்திற்கு J.C.A. தோழர்கள், அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தென்மண்டல இயக்குனர் திரு.வ.ச. ஜெயசங்கர், ஆர்ப்பாட்டத்தினைத் தவிர்க்க வேண்டி, மாலை 0300 மணிக்கு எல்லாம் திருநெல்வேலி சென்றுவிட்டார்.
தென்மண்டல இயக்குனரால், கிட்டத்தட்ட 03.30 மணிக்கு எல்லாம் காவல்துறையினர் தெற்கு மண்டல வாயிற்கதவிற்கு அருகில் குவிக்கப்பட்டு, கதவுகள் அடைக்கப் பெற்று எந்த தோழரையும் ஆர்ப்பாட்டத்திற்கு தென்மண்டலத்தின் உள்ளே நுழைய அனுமதிக்கப் படவில்லை.
மாலை 0400 மணிக்கே தென்மண்டல அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும், அனுமதி அளிக்கப்பட்டு அலுவலகத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர்.
சுமார் 0430 மணியளவில் இருந்தே தென்மண்டல NFPE, FNPO தோழர்கள் எழுச்சியோடு பங்கேற்க வந்தபோது, காவல் துறையினரால் தடுக்கப்பட்டு, தொழிற்சங்கக் கடமைகளை நிறைவேற்ற விடாமல் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டப்பட்டனர்.
BI-LATERAL DISCUSSIONS ON STRIKE BY CPMG WITH JCA LEADERS
தொழிலாளர் நல ஆணையர் உத்திரவுப்படி 05.10.2012 மாலை 03.30 மணியளவில் CPMG TN அவர்களால் அதிகாரபூர்வமான பேச்சு வார்த்தைக்கு வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்த JCA தலைவர்கள் அழைக்கப் பட்டனர். NFPE/FNPO சார்பில் 13 மாநிலச் செயலர்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர் . மதுரை அஞ்சல் பயிற்சி மைய இயக்குனரின் அடாவடித்தனங்கள் குறித்தும் , பயிலாளர்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப் பட்டது.
மேலும் தோழர் ஜெயகுமாரின் தற்கொலைக்கு பயிற்சி மைய இயக்குனரின் கொடுமைகளே காரணம் என்பதையும் விரிவாகத் தெரிவித்தோம் . அதே போல தென் மண்டல இயக்குனரின் அத்து மீறிய செயல்களையும் , இந்த தற்கொலையில் அவரின் வரம்பு மீறிய செயல்களையும் , உண்மைகளை மறைத்து , அஞ்சல் மைய இயக்குனருக்கு ஆதரவாக அவர் செயல் படும் தவறான விதம் குறித்தும் விரிவாகத் தெரிவிக்கப் பட்டது. இவை அனைத்தையும் CPMG அவர்கள் பொறுமையாகக் கேட்டறிந்தார். பல்வேறு கேள்விகளை கேட்டும் அதன் மீது விளக்கங்களையும் பெற்றார். கிட்டத்தட்ட 3 1/2 மணி நேரம் இந்த விவாதம் நடைபெற்றது.
இறுதியாக நம்முடைய வேலை நிறுத்தத்திற்கான மூன்று கோரிக்கைகளையும் உடன் நிறைவேற்ற வேண்டுமென நாம் வேண்டினோம்
அதற்கு CPMG TN அவர்கள் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார்.
Subscribe to:
Posts (Atom)