மதுரையில் 05.10.2012 அன்று, மாலை 0530 மணியளவில், மதுரை மண்டல அலுவலகத்தில், ஆர்ப்பாட்டத்திற்கு J.C.A. தோழர்கள், அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தென்மண்டல இயக்குனர் திரு.வ.ச. ஜெயசங்கர், ஆர்ப்பாட்டத்தினைத் தவிர்க்க வேண்டி, மாலை 0300 மணிக்கு எல்லாம் திருநெல்வேலி சென்றுவிட்டார்.
தென்மண்டல இயக்குனரால், கிட்டத்தட்ட 03.30 மணிக்கு எல்லாம் காவல்துறையினர் தெற்கு மண்டல வாயிற்கதவிற்கு அருகில் குவிக்கப்பட்டு, கதவுகள் அடைக்கப் பெற்று எந்த தோழரையும் ஆர்ப்பாட்டத்திற்கு தென்மண்டலத்தின் உள்ளே நுழைய அனுமதிக்கப் படவில்லை.
மாலை 0400 மணிக்கே தென்மண்டல அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும், அனுமதி அளிக்கப்பட்டு அலுவலகத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர்.
சுமார் 0430 மணியளவில் இருந்தே தென்மண்டல NFPE, FNPO தோழர்கள் எழுச்சியோடு பங்கேற்க வந்தபோது, காவல் துறையினரால் தடுக்கப்பட்டு, தொழிற்சங்கக் கடமைகளை நிறைவேற்ற விடாமல் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டப்பட்டனர்.