OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Thursday, 16 April 2015

வரலாற்றில் இன்று APRIL 17

இன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர்தீரன் சின்னமலை பிறந்தநாள் :

                                        இந்திய சுதந்திரப் போராட்டம் சிப்பாய் கலகத்தில் இருந்து தீவிரம் அடைந்தது. இருந்தாலும், அதற்கு முன்பே தமிழகத்தில் விடுதலைக்கான விதைகள் தூவப் பட்டன. பூலித்தேவன், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் தீரன் சின்னமலையும் விடுதலை வேள்வியில் இறங்கியவர். 


தீரன் சின்னமலை அஞ்சல்தலை
தீரன் சின்னமலை அஞ்சல்தலை

மாவீரன் தீரன் சின்னமலை இந்திய விடுதலைப் போராட்ட வீரர். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் ஒருவர்.

வரலாறு

ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர்.  இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியைச் சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார். கொங்கு நாடு அப்பொழுது மைசூர் ஆட்சியில் இருந்தது. கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது.

ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, மைசூர் அரசுக்கு கொண்டு செல்லப்பட்ட வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். வரிப் பணத்தைக் கொண்டு சென்ற தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை இருக்கிறது. அது பறித்ததாகப் போய்ச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழக்கத்திற்கு வந்தது.

டிசம்பர் 7, 1782-இல் ஹைதர் அலியின் மறைவிற்குப் பின், திப்பு சுல்தான் மைசூர் ஆட்சிக்கு வந்தார். கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துப் போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்பு சுல்தானுக்குப் பெரிதும் உதவியது.

குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைக்கு கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது.


மேலும் நெப்போலியனுக்கு திப்புவின் கோரிக்கையோடு பிரான்சுக்குத் தூதுசெல்லும் வேலையை தீரன் சின்னமலையின் வீரர் கருப்பச்சேர்வை செய்கிறார். திப்புவின் முடிவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தைத் தவிர பிற பகுதிகள் கும்பினிப் படை வசமாகின்றன. அடங்க மறுக்கும் சின்னமலைக்கு ஆங்கிலேயப் படை குறி வைக்கிறது.

எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர்.

வெற்றி

அறச்சலூர்ப் போரில் ஆங்கிலப் படையைத் துரத்தி அடிக்கிறார் சின்னமலை. காவிரிக்கரைப் போரில் 1801-இல் கர்னல் மாக்ஸ்வெல் படையைத் துரத்துகிறார். அதே மாக்ஸ்வெல்லின் தலையை 1802-இல் ஓடாநிலைப் போரில் வெட்டி வீசினார் சின்னமலை. வெறியோடு 1803-இல் குதிரைப் படையுடன் சின்னமலையைக் கைது செய்ய வந்த ஜெனரல் ஹாரிஸின் படைகள் மீது எறிகுண்டை வீசித் துரத்தி அடிக்கிறார் சின்னமலை. 
மீண்டும் பெரும் படையுடன் ஜெனரல் ஹாரிஸ் வருவதை அறிந்த சின்னமலை ஓடாநிலைக் கோட்டை வாசலில் பீரங்கியால் தாக்குவது போல வெறும் பீரங்கியை வைத்து விட்டு கோட்டையில் இருந்து தலைமறைவாகி, காங்கேயம் சென்றார். 
அங்கிருந்து வாழை வியாபாரி போன்ற வேடத்தில் பழனி சென்றார். மற்ற பாளையக்காரர்களுடன் கும்பினிப் படையைத் தாக்கத் திட்டமிடுகிறார். எட்டப்பனைப் போல இங்கும் சமையல்காரன் நல்லப்பன் காட்டிக் கொடுக்க தீரன் சின்னமலை கும்பனிப் படையால் கைது செய்யப் படுகிறார்.

தூக்கிலிடப்படல்

போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று தெரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி செய்தனர். சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்றனர். போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று சங்ககிரி மலைக்கோட்டையின் ஆலமரத்தில் தூக்கிலிட்டனர்.
****************************************************************************************************************


சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி சென்னையில் காலமானார்.

இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் தினம்: 5-9-1888


“ஆசிரியர்களின் தந்தை” என்ற அடை மொழிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் டாக்டர் இராதகிருஷ்ணன் சிக்கல்கள் நிறைந்த
தத்துவக் கருத்துக்களை எளிமையாக விளக்கிக் கூறிய தரணி போற்றும் தத்துவ ஞானி அவர்.
                           டாக்டர் இராதாகிருஷ்ணன் மைசூர் பல்கலைக்கழகத்திலிருந்து கல்கத்தா பல்கலை கழகத்துக்கு மாற்றலாகிச் செல்ல வேண்டிய
நிலை.  இச்செய்தி மைசூர் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பெருத்த
வேதனையை அளித்தது. பல்கலைக்கழக வளாகத்திலிருந்து இரயில்
நிலையத்திற்கு குதிரை வண்டியில் புறப்பட தயாரானார் இராதாகிருஷ்ணன்.
ஆனால் மாணவர்கள் அன்பின் மிகுதியால் வண்டியில் பூட்டியிருந்த
குதிரைகளை அவிழ்த்து விட்டு தாங்களே சென்றனர். மாணவர்களின் குருபக்தியையும் மாணவர்கள்பால் அவருக்கிருந்த பாசத்தையும் எண்ணி அனைவரும் வியந்தனர்.

               இதனை மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக பிற்காலத்தில் நினைவு கூர்ந்து உள்ளம் நெகிழ்ந்திருக்கிறார் இராதாகிருஷ்ணன். இராதாகிருஷ்ணன் முதன் முதலில் காந்திஜியை சந்தித்தது தமிழ்நாட்டில்தான். முதல் சந்திப்பே மிகவும் சுவையானது. இருவரும் உரையாடிக் கொண்டிருக்கையில் காந்திஜி ‘பாலை அசைவ உணவாகத்தான் கருத வேண்டும். பசுவின் இரத்தத்திலிருந்து உற்பத்தியாவது தானே அது இறைச்சிக்கு சமானமே’ என்றார். உடனே இராதாகிருஷ்ணன் ‘அப்படியானால் நம்மில் யாருமே சைவ உணவை உட்கொள்ளுபவர்கள் இல்லை. மனிதனுடைய மாமிசத்தை சாப்பிடும் காட்டுமிராண்டிகள்தான். தாயின் பாலை உண்டு வளரும் மனிதன் அவள்
இரத்தத்தின் சத்தான பாலை, அதாவது மனித இறைச்சியின் சாரத்தைத்தானே குடித்து வளர் கிறான்’ என்று பதிலளித்தார்.

1950ல் இந்திய அரசு இராதா கிருஷ்ணனை ரஷ்யாவின் அரசாங்கத் தூதுவராக நியமித்தது. அப்போது ரஷ்யாவில் ஸ்டாலின் அதிபராக இருந்தார். அடிமைப் பட்டுக்
கிடந்து அப்போது தான் விடுதலை பெற்ற இந்திய நாட்டின் மீது அவருக்கு அவ்வளவாக உயர்ந்த அபிப்ராயம் இல்லை.
இந்த நிலையில் தான் இராதாகிருஷ்ணன் அங்கு தூதராகச் சென்றார். ரஷ்யாவின் தூதர் பணி முடிந்து இந்தியா திரும்புகையில் அவருக்கு பிரிவு உபசார விருந்து அளிக்கப்பட்டது. ஒர் அரசாங்க தூதருக்கு ரஷ்ய அமைச்சகம் விருந்தளித்து கௌரவிப்பது அதுவே முதல் முறை. பெரும்பாலும் இரவில் நடக்கும் விருந்துகள் இராதாகிருஷ்ணனின் வசதியை முன்னிட்டு பகலிலேயே நடந்தது. மாஸ்கோவில் இருந்து புறப்படும் முன் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது ஸ்டாலின் நோய்வுற்றிருந்தார். அவருடைய முகம் வீங்கி யிருந்தது. பாரத நாட்டின் வேதாந்தியான இராதாகிருஷ்ணன் அவரின் கன்னங்களை மெதுவாக வருடினார்.
முதுகைத் தடவிக் கொடுத்தார், ஆரத்தழுவிக் கொண்டார். தத்துவ ஞானியின் இந்த அன்புப் பெருக்கு ஸ்டாலின் உள்ளத்தை உருக்கிவிட்டது. ‘மற்றவர்கள்
நினைப்பது போல் என்னை அரக்கனாக எண்ணாமல் மனிதன் என்று எண்ணிப் பழகிய முதல் மனிதர் நீங்கள்தான். நீங்கள் பிரிந்து செல்வது பற்றி மிகவும் வருந்துகிறேன். நீங்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். நான் இனி அதிக காலம் இருக்க மாட்டேன் என்றார் ஸ்டாலின்.
இராதா கிருஷ்ணனன் விடைபெற்றபோது அவர் கண்கள் கலங்கின. அவர் கூறியபடியே ஆறு மாதங் களுக்குப்பின் ஸ்டாலின் மறைந்து விட்டார். யாரையும் எளிதில் பாராட்டி விடாத ஸ்டாலின் மனம் திறந்து பாராட்டியது இராதாகிருஷ்ண
னின் பெருமைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

ஆசிரியராக தன் பணியைத் தொடங்கி நாடு போற்றும் தலைவராக விளங்கிய ராதாகிருஷ்ணன், தனது 86வது வயதில், அதாவது 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி சென்னையில் காலமானார்.

No comments:

Post a Comment