OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Friday, 24 April 2015

இன்று உலக மலேரியா நோய் தடுப்பு தினம்


உலக மலேரியா தினம் ஏப்ரல் 25-ம் தேதி (இன்று) அனுசரிக்கப்படுகிறது . மலேரியா என்பது நோய் பரப்பி அல்லது நோய்க்காவி வாயிலாக பரவும் தொற்றுப்பண்புடைய ஒரு தொற்றுநோயாகும். இது முதற்கலவுரு ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படுகிறது. அமெரிக்காஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்பமண்டலம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது. 


ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 350 முதல் 500 மில்லியன் வரையிலான மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றில் ஒன்றிலிருந்து மூன்று மில்லியன் மக்கள் இந்த நோயினால் இறக்கிறார்கள். 

இந்த நோயின் காரணமாக இறப்பவர்களில் அதிகமானவர் சப்-சஹாரா (Sub-Saharan)ஆப்பிரிக்காவில் இருக்கும் இளம் குழந்தைகளாவர். மலேரியா தொடர்பாக ஏற்படும் இறப்புகளில் 90 சதவீத இறப்பு சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் நிகழ்கிறது. மலேரியா பொதுவாக வறுமையுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. ஆனால் இது வறுமைக்கு காரணமாகவும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாகவும் இருக்கிறது. 

மிகவும் பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். இது பொதுச்சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பேரினம் பிளாஸ்மோடியம் (மலேரியா நோய்க்காரணி என்னும் முதற்கலவுரு ஒட்டுண்ணிகளினால் இந்த நோய் ஏற்படுகிறது. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியின் ஐந்து வகை இனங்கள் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். 

நோயின் மிகவும் கடுமையான தன்மை பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரத்தனால் ஏற்படுத்தப்படுகிறது. பிளாஸ்மோடியம் விவக்ஸ் (Plasmodium vivax), பிளாஸ்மோடியம் ஓவலே (Plasmodium ovale) மற்றும் பிளாஸ்மோடியம் மலேரியா (Plasmodium malariae)ஆகியவற்றின் காரணத்தினால் ஏற்படும் மலேரியா மனிதர்களுக்கு மிகவும் லேசான நோய்த் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. 

இதற்கு பொதுவாக கொல்லும் தன்மை இல்லை. ஐந்தாவது இனமான பிளாஸ்மோடியம் நோலெசி (Plasmodium knowlesi), குட்டை வால் குரங்குகளுக்கு மலேரியா நோய் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மனிதர்களுக்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். மனிதர்களுக்கு நோய்விளைவிக்கும் தன்மையைக் கொண்ட இந்த வகை பிளாஸ்மோடியம் இனங்கள் வழக்கமாக மலேரியா ஒட்டுண்ணிகள் என்று கருதப்படுகின்றன. 

2010 என்ற ஒரு வருடத்தில் மட்டுமே உலகெங்கும் பார்க்கையில் 6,55,000பேர் உயிரிழக்க நேர்ந்திருந்தது. இதில் பெரும்பான்மையானோர் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் ஆவர் என மருத்துவ சஞ்சிகையான தி லான்செட்டில் வெளியான மலேரியா ஆராய்ச்சி தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக் குநர் டாக்டர் எஸ்.இளங்கோ கூறியதாவது:
அனபிலஸ் என்ற வகையை சேர்ந்த பெண் கொசுவே மலேரி யாவை பரப்புகிறது. இந்த கொசு சுத்தமான தண்ணீரிலேயே முட்டை யிட்டு கொசுவை உற்பத்தி செய் கிறது. சாதாரண மலேரியா, வைவாக் மலேரியா, பால்சிபேரம் மலேரியா, ஓவேல் மலேரியா, மலே ரியா மலேரியா என பலவகையான மலேரியாக்கள் உள்ளன.

தமிழகத்தில் கடலோரப்பகுதி மலேரியா, ஆற்றுப்படுகை பகுதி மலேரியா மற்றும் நகர்ப்புற பகுதி மலேரியா என 3 வகை உள்ளது. சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற பகுதிகளில் நகர்ப்புற மலேரியா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பதிவாகும் மலேரியா பாதிப்பில், 60 சதவீதம் மலேரியா பாதிப்பு சென்னையில் பதிவாகிறது.
மீதமுள்ள 40 சதவீதம் மலேரியா பாதிப்புத்தான் மற்ற மாவட்டங்களில் உள்ளது. சென்னையில் ஆண்டு தோறும் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர்.

மலேரியா, சிக்கன்குனியா, டெங்கு காய்ச்சல்கள் 
மனிதனுக்கு  வருவதும்  வித, விதமான கொசுக்களாலே,
இதனை  தடுப்பதும், ஒழிப்பதும் நம் கையிலே,
அதற்காண  வழிகளை மேற்கொள்வோம் விரைவிலே !

தேங்கிய நீரும், மூடபடாத சாக்கடைகளே கொசுக்களின் குடியிருப்பு,
தேவையற்ற பொருள்களும், காகிதம், பிளாஸ்டி பொருளின் குவிப்பு,
இவையே  கொசுக்கள்  உறைவதர்காண  குடியிருப்பு 
இதனை  ஓழிக்க நாடும், தனிமனிதனும் முயற்சி செய்தாக வேண்டும். !

மனிதனே, உன் சுற்று புற இடங்களை  தூய்மை வைத்துக்கொள் ,
கொசுவின் தொல்லையின்றி, நோயின்றி உன்னை பாதுகாத்துக்கொள் 
அதனை தடுக்க, ஒழிக்க நல்ல வழிகளை   பின்பற்ற கற்றுக்கொள்!
நோய்யற்ற  வாழ்வே, குறைவற்ற செல்வம் என அறிந்துகொள் !

No comments:

Post a Comment