OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Monday, 24 June 2013

Monthly Meeting

Dear Comrades,

             Our divisional Monthly meeting to be held on 27-06-2013, if any of your grievances are invited  contact Number: 9994240223...



9TH FEDERAL COUNCIL: HYDERABAD 09 TO 12.06.2013

LIST OF NEWLY ELECTED OFFICE BEARERS OF NFPE
President                   :  Shri Giri Raj Singh R-3 (Delhi).
Working President  :  Shri. A. Manoharan,  PA, Virudhachalam HO (Tamil Nadu)
Vice Presidents       1. Shri Pranab Bhattacharya Admin. Union (WB)
                                     2. Shri T.Sathyanaryana PO A/C Andhra Pradesh
                                     3. Shri K.K. Sharma, Mail Man, S.J. Stg. Office
     Air Mail Stg.Dn. New Delhi.        
Secretary General  :  Shri M.Krishnan, BCR PA, Thycaud HO,
   Trivandrum South Dn. -695 014 (Kerala)
Dy. Secy. General   :  Shri Ishwar Singh Dabas,Postman,
    Sakurbasti R.S.PO.Delhi-110 034.
Asstt. Secy. General:
                                    1. Shri R.N.Parashar, Designated  SPM
    Mathura City P.O-281 001(UP)
                                    2. Shri S. Raghupathy, PA , Perambur Barracks PO,
    Chennai-600 012(Tamil Nadu)
                                   3.  Smt. R. Seethalakshmi, Postwoman,
    Bangalore City H.O.-560 002(Karnataka)                            
Financial Secretary : Shri Raj Kumar, Stg, Postman,
    Karol Bagh P.O. New Delhi-110 005

                           சம்மேளன மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த விருத்தாசலம் கோட்ட செயலர் தோழர் .A . மனோகரன் அவர்கள் செயல் தலைவராகவும் சென்னை வட கோட்டத்தை சேர்ந்த தோழர் .S .ரகுபதி அவர்கள் மீண்டும் உதவிப் பொது செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.  

                 கடந்த மூன்று  ஆண்டுகளாக சம்மேளன செயல் தலைவராக சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த கோவை  தோழர்.C .சந்திரசேகர்  அவர்கள்  தற்போது பொறுப்பில் இருந்து விடுபடுகிறார் . அவருக்கு நம்  மாநிலச் சங்கத்தின் பாராட்டுக்கள் !  வாழ்த்துக்கள் !!

ஒற்றுமை மாநில மாநாடு!

                 

               36வது  தமிழ் மாநில மாநாடு  குடந்தையில்  ஜூன் மாதம் 5-7 தேதிகளில் தோழர் O P குப்தா நகரில் தோழர்.P.ஆறுமுகம் அரங்கில் கொடியேற்றத்துடன் மாநாடு துவங்கியது.  தோழர்.J .ஸ்ரீவெங்கடெஷ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.  
    பொது செயலர் தோழர். M .கிருஷ்ணன் அவர்கள் பொது அரங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மத்திய மண்டல செயலர் தோழர். A .மனோகரன் வரவேற்ப்புரை ஆற்றினார்.  வரவேற்ப்பு குழு தலைவர் திரு.R.திருநாவுக்கரசு (சேர்மன், அரசு இஞ்சினியரிங் காலேஜ் குழுமம், தஞ்சாவூர்), திரு.T.R.லோகநாதன், திரு.செ.ராமலிங்கம்,Ex.MLA, டாக்டர் .கோவி.செழியன்,MLA, திரு.K .ராஜேந்திரன் (மாநில வழக்கறிஞர் தலைவர்),   தோழர்.K .ராகவேந்திரன்  (மு.மா.பொதுச் செயலர், NFPE), தோழர்.K .V.ஸ்ரீதரன்  (மு.பொதுச் செயலர் அஞ்சல் மூன்று ), தோழர்.R .சிவன் நாராயணா (அ.இ.தலைவர்  அஞ்சல்மூன்று ), சம்மேளன தலைவர்கள் தோழர்.C.சந்திரசேகர், தோழர் S.ரகுபதி, அகில இந்திய தலைவர்கள்


தோழர்.N.கோபாலகிருஷ்ணன், தோழர்.N .சுப்பிரமணி, தோழர்.A .வீரமணி, தோழர்.P.பாண்டுரங்கராவ், தோழர்.R .தனராஜ் , தோழர்.K .C.ராமச்சந்திரன், தோழர். P .நாகராஜன் மற்றும் மாநில செயலர்கள் பலரும் சிற்ப்புரையற்றினர்.  

         அமைப்பு நிலை விவாதத்தை மாநில செயலர் தோழர்.J .ராமமூர்த்தி துவக்கிவைத்து உரையாற்றினார் . அவர் தனது உரையில் தமிழக  அஞ்சல் துறையில், தாந்தோன்றி தனமாக, தறிகெட்டு செயல்படும் அதிகாரிகள், கடிவாளமிட்டு கண்டித்திட தவறும் மாநில மண்டல நிர்வாகங்கள்,  விதி மீறல்கள், அரசு பணத்தை விரயமாக்கிடும் பல்வேறு செயல்பாடுகள் என ஏற்பட்டிருக்கும் சீரழிவினை கட்டுப்படுத்திட, சரிசெய்து தர வேண்டிய கட்டாயத்தில் தமிழ் மாநில சங்கங்கள்.   இயக்கங்களின் நிலவி வந்த சண்டைகளினால் வலுப்பெற்ற அதிகாரிகளின் கொட்டத்தினை அடக்கிட, இயக்கங்களில் ஒற்றுமை அவசியம் என்ற கோட்பாட்டுடன், "போராட்டத்திற்காக ஒற்றுமை; ஒற்றுமைக்காக போராட்டம்" என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்று சேர்ந்து இயக்கப் பதாகையினை தூக்கி பிடித்திடுவோம் என்ற கொள்கை முழக்கங்களுடன் இந்த மாநாட்டில் இன்று நாம் கூடியிருக்கின்றோம். 

   நடந்து முடிந்த கசப்பான சம்பவங்கள், இயக்கத்தில் எற்பட்ட கரும்புள்ளிகளாக இருந்தாலும், வருங்காலத்தில் அவைகள் துடைத்தெறியப்பட ஒற்றுமையுடன் ஜனநாயகரீதியில்  செயல்படுவது  ஒன்று தான் சரியான பாதை  என்பதனை அனைவரும் உணர்ந்திட  வேண்டும்.  அந்த நம்பிக்கையுடன் தான் இந்த மாநாட்டில் கூடியிருக்கின்றோம் என குறிப்பிட்டார்.

          மகளிர் கருத்தரங்கம் தோழியர் ஏஞ்சல் சத்தியநாதன் தலைமையில் 6.6.2013 மாலை 6.00 மணியளவில் நடைப்பெற்றது.  அதில் பாரத் கல்வி குழமத்தின் தலைவர்  திருமதி. புனிதா கணேசன்  அவர்களும் குடந்தை நகர் மன்ற தலைவர் திருமதி.ரத்னா சேகர் அவர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

             பின்னர் நிர்வாகிகள் தேர்தல் நடைப்பெற்றது.  கீழ் கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்                                                   தோழர். J .ஸ்ரீவெங்கடெஷ் (வட சென்னை)

துணைத் தலைவர்கள்                        தோழர்.V. வெங்கட்ராமன் (தென் சென்னை)
                                                                      தோழர். D .எபிநேசர்காந்தி (கோவை)
                                                                      தோழர். J .ஜானகிராமன்(திருச்சி)

மாநில செயலர்                                      தோழர்.  J .ராமமூர்த்தி (மத்திய சென்னை) 

மாநில உதவி செயலர்கள்                தோழர். R .குமார் (புதுக்கோட்டை)
                                                                      தோழர். S  .வீரன்  (வேலுர் )
                                                                      தோழர். C .சஞ்சீவி  (சேலம் மேற்கு )
                                                                      தோழர். R.V . .தியகராஜபாண்டியன்  (அம்பை  )
                                                                      தோழர். S .K .ஜெகப்ராஜ்  (திருநெல்வேலி)

மாநில நிதிச்செயலர்                         தோழர். A .வீரமணி (அண்ணா சாலை )

மாநில உதவி நிதிச்செயலர்           தோழர். R .பெருமாள் (குடந்தை)

அமைப்பு செயலர்கள்                        தோழர். G .ராமமூர்த்தி (செங்கல்பட்டு)
                                                                     தோழர். V .ஜோதி (திண்டுக்கல்)
                                                                     தோழர். A .ராஜேந்திரன் II  (திருப்பூர் ) 

          மிக குறைந்த காலத்தில் குடந்தை கோட்டம் மாநாட்டின் பொறுப்பை ஏற்று மாநில மாநாட்டினை சீரும் சிறப்புமாக நடத்திய வரவேற்ப்பு குழுவிற்கும் குறிப்பாக குடந்தை கோட்ட செயலர் தோழர்.R .பெருமாள், தோழர்.V .ஜோதி  ஆகியோருக்கு மாநில சங்கத்தின் நன்றிகள்!

Saturday, 18 May 2013

Arrangements for the Post of DPS in Tamilnadu circle:

http://tamilnadupost.nic.in/rec/STC_1_3_130515.pdf

Friday, 10 May 2013

DPS Transfers :

Shri.V.S.Jayasankar, DPS, Southern Region,  Madurai posted as 
DPS, Western  Region, Coimbatore.




Tuesday, 30 April 2013


May Day Greetings




Saturday, 27 April 2013



வாழ்த்துகின்றோம்  


30.04.2013 அன்று பணி ஓய்வு பெறும் 

தோழர் M. Nainar Mohamed (SPM, சின்னமனூர்)

அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக

வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தோழர் அவர்கள் நமது துறையில் 41 வருடம் 4 மாதம்

9 நாட்கள் பணியாற்றியுள்ளார்மேலும் அவர் மிக

திறமையான மற்றும்  அஞ்சல் துறையின் நூல்களை

அறிந்தவர்அவருடைய பணிஓய்வு காலத்தில்  மிக

சிறப்பாகவும்நலமுடணும்  வாழ  NFPE  சங்கத்தின் 

சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்..

Thursday, 25 April 2013

8%  DA Order :


The Ministry of Finance, today,  issued  the order for payment of dearness allowance to central government employees with effect from 1-1-2013. Having dearness allowance increased to 80%  from 1-1-2006, the arrears for the last 3 months  from January, February and March has to be paid separately. The copy of the order is given below..








Thursday, 18 April 2013


FILLING UP OF ALL VACANT HSG I POSTS BASED ON EXISTING RULES - ORDERS ISSUED :




     அன்புத் தோழர்களுக்கு வணக்கம். நீண்ட காலமாக  நிரப்பப் படாமல் ADHOC ARRANGEMENT  இல் வைக்கப் பட்டிருக்கும்  GENERAL  LINE க்கு உண்டான  அனைத்து HSGI  பதவிகளையும் தற்போது நடப்பில் உள்ள  HSGI  RECTT RULES  அடிப்படையில் நிரப்பிக் கொள்ள இலாக்கா இன்று உத்திரவிட்டுள்ளது.

ஏற்கனவே அனைத்து HSGI  பதவிகளையும்  GENERAL LINE க்கு அளிக்க வேண்டும் என்றும் ,  அதன் மீது புதிய பதவி உயர்வுத்திட்டம் வேண்டும் என்றும்  நாம் கோரிக்கை வைத்து , அதன் அடிப்படையில்  இலாக்கா DOPT  க்கு பரிந்துரை செய்திருந்தது  உங்களுக்கு நினைவிருக்கும்.  பல காலம் இந்த கோப்பு பல்வேறு விளக்கங்கள்  கேட்டு  மீண்டும் மீண்டும் திருப்பப் பட்டதால்  DOPT  ஒப்புதல் கிடைக்கும் வரை HSGI  பதவிகளை நிரப்ப வேண்டாம் என்று இலாக்கா முடிவு எடுத்திருந்ததும் உங்களுக்கு நினைவு இருக்கும்.  

கடந்த 28.12.2012 JCM  இலாக்கா குழு கூட்டத்தில் , இந்தப் பரிந்துரை DOPT யால் மறுக்கப் பட்டதால் , பழைய சட்ட விதிகளின் படி HSGI  பதவிகளை நிரப்பிக்கொள்ள விரைவில் உத்திரவு அளிக்கப் படும் என்று  எழுத்து பூர்வமாக பதிலை இலாக்கா அளித்திருந்தது  உங்களுக்கு நினைவு இருக்கும். 

இதிலும் கூட 50% பதவிகள் ASP  இலிருந்து பதவி உயர்வாக அளிக்கப் பட்டிருந்ததால்,  ASP  யும்  HSGI  உம்  ஒரே ஊதியத்தில் உள்ளதால்  அது பதவி உயர்வாக கருதி  காலிப் பணியிடங்களை நிரப்பிடலாமா என்பதற்கு DOPT  இலிருந்து  விளக்க ஆணை வராத காரணத்தால் , அந்த பதவிகள் நிரப்பப்  படமாட்டாது  என்று உத்திரவு இடப்பட்டுள்ளது .

இதனால் மீண்டும் நம்முடைய தோழர்களே பல IPO  லைன் காலிப் பணியிடங்களில்  வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது .   எது எப்படி ஆனாலும் , தற்போது  இந்த உத்திரவின் மூலம்  எதிர்வரும் 30.04.2013 க்குள் DPC  கூட்டப் பட்டு  06.05.2013 க்குள்  50% HSGI  பதவிகள் நிரப்பப் பட வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளதால் , தற்போது HSGII  பணியிடங்களில் இருக்கும் தோழர்களுக்கு HSGI  பதவி உயர்வும் , LSG  பதவியில் உள்ளவர்களுக்கு , புதிதாக  காலியாகும்  HSGII  பணியிடங்களும் , அதேபோல நிலுவையில் LSG  காலிப்   பணியிடங்களுடன் கூடுதலாக காலிப் பணியிடங்களும்  கிடைக்கும் என்பதும் , இதனால்  RESULTANT  ஆக 300 க்குக் குறையாமல்  PA  காலியிடங்கள்  2013 DIRECT  RECTT  இல் கூடுதலாகநிரப்பப் படும் என்பதும் நமக்கு  மகிழ்ச்சியை அளிக்கிறது .  

இவையெல்லாம்  காலதாமதமில்லாமல் முறையாக நிறைவேற நம் மாநிலச் சங்கம் நிச்சயம்  நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி கூறுகிறோம். உத்திரவின் நகலை கீழே உள்ள இணைப்பில் 'கிளிக்' செய்து பார்க்கவும்.


Reallotment to Home Circles in PS Group B cadre


Directorate has issued reallotments to the following 15 PS Group B officers to their Home circles vide Directorate memo no 9-22/2013-SPG dated 18.04.2013.




Dearness Allowance 80% With Effect From 01-01-2013 –Approved By Central Government

     UNION CABINET ON TUESDAY APPROVED A PROPOSAL TO HIKE AN ANOTHER ADDITIONAL DEARNESS ALLOWANCE BY 8% FOR CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS…
THE CENTRAL GOVERNMENT TODAY APPROVED TO RELEASE A EIGHT PER CENT HIKE IN DEARNESS ALLOWANCE TO CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS, THIS HIKE IS TO BE EFFECTIVE RETROSPECTIVELY FROM JANUARY 2013…
THE DEARNESS ALLOWANCE AND DEARNESS RELIEF FOR CENTRAL GOVERNMENT SERVING EMPLOYEES AND PENSIONERS WILL INCREASE FROM 72% PER CENT OF BASIC EMOLUMENTS TO 80% PER CENT WITH EFFECT FROM 1.1.2013 TO COMPENSATE FOR PRICE RISE.

DELAY IN ANNOUNCEMENT OF DA - CONDUCT NATIONWIDE DEMONSTRATIONS ON 23rd APRIL-2013.


அன்புத் தோழர்களே ! தோழியர்களே !  வணக்கம். 

01.01.2013 முதல் வழங்கப் பட வேண்டிய  8% பஞ்சப்படி  இதுவரை வழங்கப் படவில்லை .எப்போதும் போல இது மார்ச் இறுதியில் உத்திரவிடப்பட்டு ஏப்ரல் முதல் தேதியில்  நிலுவையுடன்  உயர்த்தி வழங்கப் பட்டிருக்க வேண்டும் . 

பிரத அமைச்சர்  ஊரில் இல்லை, நிதி அமைச்சர் ஊரில் இல்லை என்று மாற்றி மாற்றி காரணங்கள் கூறப்பட்டு  இன்று வரை காபினெட் ஒப்புதல் அளிக்கப் படாததால்  நமக்கு சட்டப் படி வழங்கப் பட வேண்டிய  DA  கால தாமதப் படுத்தப் படுகிறது. 

இதனை எதிர்த்து  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்  எதிர்வரும் 23.04.2103 அன்று  அவரவர் பணியிடங்களில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் படி நமது  NFPE  சம்மேளனமும்  இதற்கான வேண்டுகோளை  அளித்துள்ளது. 

ஆகவே தமிழகத்தின் அனைத்து கோட்ட / கிளைகளிலும்  எதிர்வரும் 23.04.2013 அன்று  ஆர்ப்பாட்டம் நடத்தி , பிரதம அமைச்சருக்கு கடிதத் தந்திஅனுப்பிட வேண்டுகிறோம். 

சென்னை மாநகரைப் பொருத்தவரை ,  JCA  சார்பில் - NFPE /FNPO  அனைத்து மாநிலச் சங்கங்கள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம்  எதிர்வரும் 19.04.2013 வெள்ளி அன்று   உணவு  இடைவேளையில்   அண்ணா சாலை  தலைமை அஞ்சலக வாயிலில்  நடத்தப் பட முடிவு எடுக்கப் பட்டுள்ளது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில்  NFPE  சார்பிலும்  CONFEDERATION  சார்பிலும்   மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயல் தலைவர்  தோழர்  K .R அவர்களும்  FNPO  சார்பில்  அதன் மாபொதுச்  செயலர் தோழர்.  தியாகராஜன் அவர்களும்  கலந்து கொண்டு  போராட்ட உரை அளித்திட உள்ளார்கள். 

எனவே  சென்னை மாநகரத்தின் அனைத்து  கோட்ட/ கிளைகளில் இருந்தும் JCA  வில் உள்ள  NFPE /FNPO  அனைத்து சங்கங்களின் கோட்ட/ கிளை நிர்வாகிகள்  மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக  இந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பு  செய்திட வேண்டுகிறோம். 

JCA  சார்பிலான POSTER  நேற்று மாலை  தயார் செய்யப் பட்டதால்  அவற்றை  POST  செய்திட இயலவில்லை . எனவே நம்முடைய  கோட்ட/ கிளைச் செயலர்கள்  சென்னை அண்ணா சாலை  கிளையில் உள்ள  நமது அஞ்சல் மூன்றின்  மகிளா  கமிட்டி கன்வீனர்  தோழர். மணிமேகலை  அவர்களிடம்  தங்கள் கிளைகளுக்கான  POSTER  -ஐ பெற்றுக் கொள்ளுமாறு  அன்புடன் வேண்டுகிறோம். 

CONFEDERATION CALLS FOR A STRONG PROTEST AGAINST THE INORDINATE DELAY IN GRANTING 8% DA TO CG EMPLOYEES BY GOVERNMENT

No. Conf/27 /2013 -                                                                Dated 17th April 2013
Comrades,

DELAY IN GRANT OF DA - HOLD PROTEST DEMONSTRATION ON 23RD APRIL 2013

            Since the implementation of the recommendations of the 4th central pay commission in 1986, the Dearness Allowance (DA) is paid in two six-monthly installments – in March and September of every year. The practice followed since then is that the order granting DA to government employees is issued in March and September itself.

            This time the practice in force since 1986 is violated. Our enquiries with concerned Ministries informed us that the file is already moved for Cabinet approval. But it is nearly a month now. The cabinet has found no time to take a decision on this.

            This naturally is quiet disturbing, especially in the time of galloping price line. The employees have, in the past, fought bitterly for grant of DA and the 3rd CPC gave a definite formula for DA in the aftermath of the one day strike on 19th September 1968. We cannot allow the hard won DA to be tampered with.

            Confederation has written to Prime Minister conveying the disquiet amongst the amongst the employees over the inordinate delay in the grant of additional installment of DA due from 1st January 2013 and urging the Prime Minister to take immediate steps to assuage the feelings of the employees. Copy of the letter is given along with this Circular.

            The Secretariat of Confederation therefore calls upon every affiliate as well as State Committee of Confederation to organise lunch hour demonstration in the work place on 23rd April 2013, Tuesday and send the following telegram to the Prime Minister of India.

TEXT OF TELEGRAM: EMPLOYEES AGITATED OVER DELAY IN GRANT OF DA, URGE TO EXPEDITE ISSUANCE OF ORDERS.

            Each affiliate and State Committee of Confederation may send a detailed report on implementation of the programme in their organisation/state to the Confederation CHQ.

            With greetings
Yours fraternally
Sd/-
(KKN Kutty)
Secretary General

Wednesday, 13 March 2013

CHQ OFFICE BEARERS OF AIPEU Gr. C ELECTED UNANIMOUSLY:





President                                 Com. R.Sivannarayana (Andhra Pradesh) 
Working President                 (1) Com.Mangesh Parab (Maharashtra)
                                                  (2) Com.N.Gopalakrishnan (Tamilnadu)
Vice President                        (1) Com.R.C.Mishra (Odisha)
                                                  (2) Com.Smt. C.P.Sobhana (Kerala)
General Secretary                  Com. M.Krishnan (Kerala)

Dy. Genl. Secy                        (1) Com. N.Subramanyam (Tamilnadu)

Asst.Genl.Secy                      (2) Com. R.N.Prashar (Uttar Pradesh)
                                                 (3) Com. G.Maity (West Bengal)
                                                 (4) Com. P.Veeramani (Tamilnadu)
Financial Secy.                       (1) Com. Balwinder singh (Delhi)
Asst. Fin. Secy                        (2) Com.H.P.Diwakar (Rajasthan)
Org. Genl. Secy                      (1) Com.S.A.Hameed (Chattisgarh)
                                                  (2) Com.U.K.Tiwari (Bihar)
                                                  (3) Com.L.P.Saikia (Assam)

AIPEU Gr.C (CHQ) WOMEN COMMITTEE
Chariperson : Com. Nandasen (West Bengal)
Convener : Com.C.P.Sobhana (Kerala)

Committee Members : 
Com.K.Pushpeswaridevi (Andhra Pradesh)
Com.Mani Meghalai (Tamilnadu)
Com.Mousami Majumdar (Assom)
Com.P.Rema (Kerala)
Com.Manali (Maharashtra)
Com.Manju Srivashtava (Madhya Pradesh)
Com.Srimathi (Andhra Pradesh)
Com.P.Sathyanadam (Tamilnadu)


NFPE Theni conveys greetings and congratulations to the newly elected office bearers of AIPEU Group ‘C’.

Tuesday, 5 March 2013


SPECIAL CL GRANTED FOR AIC, THIRUVANANTHAPURAM



ALL INDIA CONFERENCE AT THIRUVANANTHAPURAM - GUIDELINES TO DELEGAES







Monday, 4 March 2013


7வது சம்பளக்கமிஷன்

புதுடில்லி: அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பளக்கமிஷன் அமைக்கும் எண்ணமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லோக்சபாவில் இன்று நடந்த விவாதத்தின் போது 

7வது சம்பளக்கமிஷன் அமைப்பது தொடர்பாக 

கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் 

நமோ நாராயண் மீனா எழுத்துப்பூர்வமாக 

பதிலளித்தார். அதில் அவர் கூறுகையில், அரசு 

ஊழியர்களுக்கான 6வது சம்பளக்கமிஷன் 

பரிந்துரைகள் கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 1ம் 

தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், 

7வது சம்பளக்கமிஷன் அமைக்கும் எண்ணம் 

எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று 

தெரிவித்தார்

Friday, 1 March 2013


29TH ALL INDIA CONFERENCE, THIRUVANANTHAPURA - INVITATION & PROGRAMME