Pages
Tuesday, 6 August 2013
Tuesday, 30 July 2013
SOUTHERN REGION TRADE UNION STUDY CAMP AND DIVL/BR.SECS MEETING AT MADURAI
அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் !
நமது
குடந்தை மாநில மாநாட்டில் அறிவித்த படி, மாநிலச் சங்கம் பொறுப்பேற்றவுடன்
இரண்டு மாதங்களுக்குள் மண்டல ரீதியிலான கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தை
கூட்டி , தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்சினைகளை ஒருங்கிணைத்து, அந்தந்த
மண்டல அதிகாரிகளிடமும், மாநில உயர் அதிகாரியிடமும் MEMORANDUM அளித்து ,
ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் தீர்வினை வேண்டியும் , அப்படி
தீர்க்கப்படவில்லை எனில் மண்டல ரீதியில் தொடர் போராட்டங்களை
நடத்திடுவதாகவும் மாநிலச் சங்கம் முடிவெடுத்துள்ளது.
அதன்
படி , முதலில் மிக அதிகமாக பிரச்சினைகள் உள்ள தென் மண்டலத்தில் ,
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அதன் கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தினை
கூட்டுவது என்று முடிவினை எடுத்தோம். அந்த கூட்டத்தினை ஏற்று நடத்துவது
என்று மதுரை கோட்ட அஞ்சல் மூன்று சங்கம் மனம் உவந்து முன்வந்துள்ளது
என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும்
, புதிதாக இலாக்காவில் சேர்ந்துள்ள இளைஞர்களுக்கு தொழிற் சங்க வரலாறு
மற்றும் இலாக்கா நடத்தை விதிகள், ஊழியர் பாதுகாப்பு விதிகள், தகவல்
அறியும் உரிமை சட்டம் , CONTRIBUTORY NEGLIGENCE குறித்த விதிகள் , CCS
CCA RULES 1965 உள்ளிட்ட விதிகளில் ஊழியர்களின் பாது காப்பு அம்சங்கள்
குறித்து தென் மண்டல அளவில் ஒரு தொழிற் சங்க பயிற்சி வகுப்பு
நடத்திடவும் முடிவெடுத்தோம். அதனையும் மதுரை கோட்ட அஞ்சல் மூன்று சங்கமே
எடுத்து நடத்திட விழைந்துள்ளது என்பது பாராட்டத் தக்கது.
இந்த
நிகழ்ச்சி இளைஞர்களுக்கு மட்டுமல்ல , நம் சங்கத்தின் முன்னோடி களுக்கும்
தான். அதிகாரிகளின் விதி மீறிய, தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில்
இருந்து ஊழியர்களை பாது காக்க இந்த வகுப்பு ஒரு கேடயமாக அமைந்திடும்
என்பது திண்ணம்.
எதிர்வரும்
ஆகஸ்ட் மாதம் 09 ம் தேதி விடுமுறை தினத்தன்று இந்த தொழிற் சங்க
பயிற்சி வகுப்பும் ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி கோட்ட/கிளைச் செயலர்கள்
கூட்டமும் நடைபெற முடிவெடுக்கப் பட்டுள்ளது.
எனவே தென்
மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் இதனையே
முன்னறிவிப்பாக எடுத்துக் கொண்டு பயிற்சி வகுப்புக்கு தங்கள் பகுதியில்
இருந்து பெருமளவில் இளைஞர்களையும் சங்க முன்னோடிகளையும் கலந்து கொண்டிட
ஆவன செய்திட வேண்டுகிறோம். இரண்டு நாட்கள் விடுமுறை வருகிறது என்று
வெளியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் முன்
கூட்டியே கேட்டுக் கொள்கிறோம்.
பயிற்சி
வகுப்பில் கலந்து கொள்கிற தோழிய/ தோழர்களுக்கு குறைந்த பட்ச DELEGATE
கட்டணம் வசூலிக்கப் படும். அந்தப் பணத்தில் காலை சிற்றுண்டி , 11
மணியளவில் தேநீர், மதிய உணவு, மாலை தேநீர், மற்றும் வகுப்பு முடிந்தவுடன்
ஊருக்கு செல்வதற்கு முன்னர் எளிய சிற்றுண்டி வழங்கப் படும். வகுப்புகளில்
குறிப்பெடுக்க SCRIBBLING PAD , பேனா உள்ளிட்டவை அளிக்கப் படும் .
மறுநாள் நடைபெறும் கோட்ட/ கிளைச்
செயலர்கள் கூட்டத்தில் , தென் மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சல் மூன்று
கோட்ட/ கிளைச் செயலர்களும் தவறுதல் இன்றிக் கலந்து கொண்டிட வேண்டுகிறோம் .
அவர்கள் வரும்போது , உடனடியாக முழு விபரத்துடன் MEMORANDAM தயாரித்து
மண்டல / மாநில அதிகாரிகளுக்கு அளிக்கும் வகையில் அவர்களது கோட்ட
மட்டத்தில் மாதாந்திரப் பேட்டியில் எடுக்கப் பட்டும் தீர்க்கப்படாத
ஊழியர்கள் பிரச்சினைகளையும், பொதுப் பிரச்சினை களையும் விரிவாக அவர்களது
சங்க லெட்டர் PAD இல் TYPE செய்து எடுத்து வருமாறு அன்புடன்
வேண்டுகிறோம்.
தயவு செய்து வாய்மொழியாக மட்டுமே சொல்லிச் செல்லலாம் என்றுஎண்ண
வேண்டாம் என்றும் அன்புடன் வேண்டுகிறோம். அது முழுமையாக பிரச்சினைகளை
மாநிலச் செயலருக்கு அளிக்காது என்பதனையும் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.
நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம்,
நேரம் , எடுக்கப் படும் வகுப்புகள் , வகுப்புகளை எடுப்போர் குறித்த
விபரங்கள் ஓரிரு நாட்களில் சுற்றறிக்கையாக வெளியிடப்படும். இதனைப்
பார்க்கும் தோழர்கள் , இந்த விபரத்தினை தயவு செய்து தென் மண்டலத்தில் உள்ள
அனைத்து ஊழியர்களுக்கும் உடன் தெரிவிக்க வேண்டுகிறோம்.
குறிப்பு :
தொழிற் சங்க பயிற்சி வகுப்புகளுக்கு
கண்டிப்பாக தோழியர்களையும் அழைத்து வரவும் . இது ஒரு நல்ல வாய்ப்பு .
நிச்சயம் உபயோகப் படுத்திக் கொள்ளவும்.
தோழமை வாழ்த்துக்களுடன்
உங்கள் மாநிலச் செயலர் .
Saturday, 27 July 2013
தேனிக் கோட்டத்தின் ஜூலை 2013முதல்
நம் அழைப்பை ஏற்றுபுதிதாக NFPE இல்
இணையும் 11
தோழர்களை/தோழியர்களை நாம் வாழ்த்தி வரவேற்கிறோம்
அஞ்சல் மூன்று புதிய உறுப்பினர்கள்
அஞ்சல் மூன்று புதிய உறுப்பினர்கள்
1) D. Maheswaran, Acct.,
pkm
2) J. Swarna surya, OA.,
DO
3) R. Venkatesh kumar, OA,
DO
4) S. Malathi, PA., Tei
5) D. Saravanan, SPM., Vrj
6) S.
JeyashreeSubramanian,PA., Pkm
7) V. Manjula, PA., Pkm
8) V. Veerajeyanthi, SPM.,
Lkp
9) B. Shanmugapriya, PA.,
Tei
10) V. Saravanan, SPM.,
Gdr
11) N. Saravanakumar, PA.,
Cbm
புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில்
ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றி
. நன்றி.
Monday, 24 June 2013
Monthly Meeting
Dear Comrades,
Our divisional Monthly meeting to be held on 27-06-2013, if any of your grievances are invited contact Number: 9994240223...
Our divisional Monthly meeting to be held on 27-06-2013, if any of your grievances are invited contact Number: 9994240223...
9TH FEDERAL COUNCIL: HYDERABAD 09 TO 12.06.2013
LIST OF NEWLY ELECTED OFFICE BEARERS OF NFPE
President : Shri Giri Raj Singh R-3 (Delhi).
Working President : Shri. A. Manoharan, PA, Virudhachalam HO (Tamil Nadu)
Vice Presidents 1. Shri Pranab Bhattacharya Admin. Union (WB)
2. Shri T.Sathyanaryana PO A/C Andhra Pradesh
3. Shri K.K. Sharma, Mail Man, S.J. Stg. Office
Air Mail Stg.Dn. New Delhi.
Secretary General : Shri M.Krishnan, BCR PA, Thycaud HO,
Trivandrum South Dn. -695 014 (Kerala)
Dy. Secy. General : Shri Ishwar Singh Dabas,Postman,
Sakurbasti R.S.PO.Delhi-110 034.
Asstt. Secy. General:
1. Shri R.N.Parashar, Designated SPM
Mathura City P.O-281 001(UP)
2. Shri S. Raghupathy, PA , Perambur Barracks PO,
Chennai-600 012(Tamil Nadu)
3. Smt. R. Seethalakshmi, Postwoman,
Bangalore City H.O.-560 002(Karnataka)
Financial Secretary : Shri Raj Kumar, Stg, Postman,
Karol Bagh P.O. New Delhi-110 005
சம்மேளன மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த விருத்தாசலம் கோட்ட செயலர் தோழர் .A . மனோகரன் அவர்கள் செயல் தலைவராகவும் சென்னை வட கோட்டத்தை சேர்ந்த தோழர் .S .ரகுபதி அவர்கள் மீண்டும் உதவிப் பொது செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சம்மேளன செயல் தலைவராக சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த கோவை தோழர்.C .சந்திரசேகர் அவர்கள் தற்போது பொறுப்பில் இருந்து விடுபடுகிறார் . அவருக்கு நம் மாநிலச் சங்கத்தின் பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !!
ஒற்றுமை மாநில மாநாடு!
அமைப்பு நிலை விவாதத்தை மாநில செயலர்
தோழர்.J .ராமமூர்த்தி துவக்கிவைத்து உரையாற்றினார் . அவர் தனது உரையில்
தமிழக அஞ்சல் துறையில், தாந்தோன்றி தனமாக, தறிகெட்டு செயல்படும்
அதிகாரிகள், கடிவாளமிட்டு கண்டித்திட தவறும் மாநில மண்டல
நிர்வாகங்கள், விதி மீறல்கள், அரசு பணத்தை விரயமாக்கிடும் பல்வேறு
செயல்பாடுகள் என ஏற்பட்டிருக்கும் சீரழிவினை கட்டுப்படுத்திட, சரிசெய்து தர
வேண்டிய கட்டாயத்தில் தமிழ் மாநில சங்கங்கள். இயக்கங்களின் நிலவி வந்த
சண்டைகளினால் வலுப்பெற்ற அதிகாரிகளின்
கொட்டத்தினை அடக்கிட, இயக்கங்களில் ஒற்றுமை அவசியம் என்ற கோட்பாட்டுடன்,
"போராட்டத்திற்காக ஒற்றுமை; ஒற்றுமைக்காக போராட்டம்"
என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்று சேர்ந்து இயக்கப் பதாகையினை தூக்கி
பிடித்திடுவோம் என்ற கொள்கை முழக்கங்களுடன் இந்த மாநாட்டில் இன்று நாம்
கூடியிருக்கின்றோம்.
நடந்து முடிந்த கசப்பான சம்பவங்கள்,
இயக்கத்தில் எற்பட்ட கரும்புள்ளிகளாக இருந்தாலும், வருங்காலத்தில் அவைகள்
துடைத்தெறியப்பட ஒற்றுமையுடன் ஜனநாயகரீதியில் செயல்படுவது ஒன்று தான்
சரியான பாதை என்பதனை அனைவரும் உணர்ந்திட வேண்டும். அந்த நம்பிக்கையுடன்
தான் இந்த மாநாட்டில் கூடியிருக்கின்றோம் என குறிப்பிட்டார்.
மகளிர் கருத்தரங்கம் தோழியர் ஏஞ்சல் சத்தியநாதன் தலைமையில் 6.6.2013 மாலை 6.00 மணியளவில் நடைப்பெற்றது. அதில் பாரத் கல்வி குழமத்தின் தலைவர் திருமதி. புனிதா கணேசன் அவர்களும் குடந்தை நகர் மன்ற தலைவர் திருமதி.ரத்னா சேகர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பின்னர் நிர்வாகிகள் தேர்தல் நடைப்பெற்றது. கீழ் கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் தோழர். J .ஸ்ரீவெங்கடெஷ் (வட சென்னை)
துணைத் தலைவர்கள் தோழர்.V. வெங்கட்ராமன் (தென் சென்னை)
தோழர். D .எபிநேசர்காந்தி (கோவை)
தோழர். J .ஜானகிராமன்(திருச்சி)
மாநில செயலர் தோழர். J .ராமமூர்த்தி (மத்திய சென்னை)
மாநில உதவி செயலர்கள் தோழர். R .குமார் (புதுக்கோட்டை)
தோழர். S .வீரன் (வேலுர் )
தோழர். C .சஞ்சீவி (சேலம் மேற்கு )
தோழர். R.V . .தியகராஜபாண்டியன் (அம்பை )
தோழர். S .K .ஜெகப்ராஜ் (திருநெல்வேலி)
மாநில நிதிச்செயலர் தோழர். A .வீரமணி (அண்ணா சாலை )
மாநில உதவி நிதிச்செயலர் தோழர். R .பெருமாள் (குடந்தை)
அமைப்பு செயலர்கள் தோழர். G .ராமமூர்த்தி (செங்கல்பட்டு)
தோழர். V .ஜோதி (திண்டுக்கல்)
தோழர். A .ராஜேந்திரன் II (திருப்பூர் )
Friday, 31 May 2013
Saturday, 18 May 2013
Arrangements for the Post of DPS in Tamilnadu circle:
http://tamilnadupost.nic.in/rec/STC_1_3_130515.pdf
http://tamilnadupost.nic.in/rec/STC_1_3_130515.pdf
Tuesday, 30 April 2013
Saturday, 27 April 2013
வாழ்த்துகின்றோம்
30.04.2013 அன்று பணி ஓய்வு பெறும்
தோழர் M. Nainar Mohamed (SPM, சின்னமனூர்)
அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தோழர் அவர்கள் நமது துறையில் 41 வருடம் 4 மாதம்
9 நாட்கள் பணியாற்றியுள்ளார். மேலும் அவர் மிக
திறமையான மற்றும் அஞ்சல் துறையின் நூல்களை
அறிந்தவர். அவருடைய பணிஓய்வு காலத்தில் மிக
சிறப்பாகவும், நலமுடணும் வாழ NFPE சங்கத்தின்
சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்..
Thursday, 25 April 2013
8% DA Order :
The Ministry of Finance, today, issued the order for payment of dearness allowance to central government employees with effect from 1-1-2013. Having dearness allowance increased to 80% from 1-1-2006, the arrears for the last 3 months from January, February and March has to be paid separately. The copy of the order is given below..
Thursday, 18 April 2013
FILLING UP OF ALL VACANT HSG I POSTS BASED ON EXISTING RULES - ORDERS ISSUED :
அன்புத் தோழர்களுக்கு வணக்கம். நீண்ட காலமாக நிரப்பப் படாமல் ADHOC ARRANGEMENT இல் வைக்கப் பட்டிருக்கும் GENERAL LINE க்கு உண்டான அனைத்து HSGI பதவிகளையும் தற்போது நடப்பில் உள்ள HSGI RECTT RULES அடிப்படையில் நிரப்பிக் கொள்ள இலாக்கா இன்று உத்திரவிட்டுள்ளது.
ஏற்கனவே அனைத்து HSGI பதவிகளையும் GENERAL LINE க்கு அளிக்க வேண்டும் என்றும் , அதன் மீது புதிய பதவி உயர்வுத்திட்டம் வேண்டும் என்றும் நாம் கோரிக்கை வைத்து , அதன் அடிப்படையில் இலாக்கா DOPT க்கு பரிந்துரை செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். பல காலம் இந்த கோப்பு பல்வேறு விளக்கங்கள் கேட்டு மீண்டும் மீண்டும் திருப்பப் பட்டதால் DOPT ஒப்புதல் கிடைக்கும் வரை HSGI பதவிகளை நிரப்ப வேண்டாம் என்று இலாக்கா முடிவு எடுத்திருந்ததும் உங்களுக்கு நினைவு இருக்கும்.
கடந்த 28.12.2012 JCM இலாக்கா குழு கூட்டத்தில் , இந்தப் பரிந்துரை DOPT யால் மறுக்கப் பட்டதால் , பழைய சட்ட விதிகளின் படி HSGI பதவிகளை நிரப்பிக்கொள்ள விரைவில் உத்திரவு அளிக்கப் படும் என்று எழுத்து பூர்வமாக பதிலை இலாக்கா அளித்திருந்தது உங்களுக்கு நினைவு இருக்கும்.
இதிலும் கூட 50% பதவிகள் ASP இலிருந்து பதவி உயர்வாக அளிக்கப் பட்டிருந்ததால், ASP யும் HSGI உம் ஒரே ஊதியத்தில் உள்ளதால் அது பதவி உயர்வாக கருதி காலிப் பணியிடங்களை நிரப்பிடலாமா என்பதற்கு DOPT இலிருந்து விளக்க ஆணை வராத காரணத்தால் , அந்த பதவிகள் நிரப்பப் படமாட்டாது என்று உத்திரவு இடப்பட்டுள்ளது .
இதனால் மீண்டும் நம்முடைய தோழர்களே பல IPO லைன் காலிப் பணியிடங்களில் வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது . எது எப்படி ஆனாலும் , தற்போது இந்த உத்திரவின் மூலம் எதிர்வரும் 30.04.2013 க்குள் DPC கூட்டப் பட்டு 06.05.2013 க்குள் 50% HSGI பதவிகள் நிரப்பப் பட வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளதால் , தற்போது HSGII பணியிடங்களில் இருக்கும் தோழர்களுக்கு HSGI பதவி உயர்வும் , LSG பதவியில் உள்ளவர்களுக்கு , புதிதாக காலியாகும் HSGII பணியிடங்களும் , அதேபோல நிலுவையில் LSG காலிப் பணியிடங்களுடன் கூடுதலாக காலிப் பணியிடங்களும் கிடைக்கும் என்பதும் , இதனால் RESULTANT ஆக 300 க்குக் குறையாமல் PA காலியிடங்கள் 2013 DIRECT RECTT இல் கூடுதலாகநிரப்பப் படும் என்பதும் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது .
இவையெல்லாம் காலதாமதமில்லாமல் முறையாக நிறைவேற நம் மாநிலச் சங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி கூறுகிறோம். உத்திரவின் நகலை கீழே உள்ள இணைப்பில் 'கிளிக்' செய்து பார்க்கவும்.
Dearness Allowance 80% With Effect From 01-01-2013 –Approved By Central Government
UNION CABINET ON TUESDAY APPROVED A PROPOSAL TO HIKE AN ANOTHER ADDITIONAL DEARNESS ALLOWANCE BY 8% FOR CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS…
UNION CABINET ON TUESDAY APPROVED A PROPOSAL TO HIKE AN ANOTHER ADDITIONAL DEARNESS ALLOWANCE BY 8% FOR CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS…
THE CENTRAL GOVERNMENT TODAY APPROVED TO RELEASE A EIGHT PER CENT HIKE IN DEARNESS ALLOWANCE TO CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS, THIS HIKE IS TO BE EFFECTIVE RETROSPECTIVELY FROM JANUARY 2013…
THE DEARNESS ALLOWANCE AND DEARNESS RELIEF FOR CENTRAL GOVERNMENT SERVING EMPLOYEES AND PENSIONERS WILL INCREASE FROM 72% PER CENT OF BASIC EMOLUMENTS TO 80% PER CENT WITH EFFECT FROM 1.1.2013 TO COMPENSATE FOR PRICE RISE.
Subscribe to:
Posts (Atom)