OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Tuesday, 13 October 2015

அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே வணக்கம்.

கோட்ட அதிகாரியுடன் மாதாந்திர பேட்டி (Monthly Meeting) 29.12.2015  நடைபெற உள்ளது. தோழர்கள் மற்றும் தோழியர்கள்  தங்கள் அலுவலக சம்மந்தமான பிரச்சினைகள் கோட்டச் செயலர் தோழர். K .சிவமூர்த்தி  கைபேசி  (99942-40223),        தலைவர்  தோழர். C .நாகேந்திரன்    கைபேசி  (94434-43054 அல்லது                      கோட்ட சங்க மின் அஞ்சல் முகவரியான nfpetheni@gmail.com ல்  தெரியபடுத்துமாறு கேட்டுகொள்கிறோம் .


                                                                        நன்றி.

Monday, 12 October 2015

SUCCESS TO CIRCLE UNION EFFORTS ON LATE DETENTION OF OFFICIALS AT ALL CBS OFFICES DUE TO EOD PROBLEMS

மாநிலச் சங்கத்தின் இடைவிடாத 
முயற்சிக்கு வெற்றி !
 
EOD  பிரச்சினையில் இரவு நீண்ட நேரம் காத்திருப்புக்கு  முற்றுப் புள்ளி ! 

09.10.2015  CPMG  யுடனான நம்முடைய பேச்சு வார்த்தையில் அளித்த உறுதி மொழியின்படி  இன்று (12.10.2015) தமிழகம் உள்ளிட்ட அனைத்து அஞ்சல் வட்டங்களுக்கும் (இந்தியா முழுமைக்கும் )  HISCOD  மூலம் பணி  முடிக்க மென்பொருளில் புதிய முறை அறிமுகம் ! 

CBS தொடர்பான இதர பிரச்சினைகளும் அறிவித்த காலக் கெடுவுக்குள் CPMG அவர்கள் முடித்து தருவார் என்று நம்புகிறோம் !
 
ஏற்கனவே  23.6.2014 இல் நடைபெற்ற நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியில் ஏற்பட்ட முடிவின்படி   இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை EOD  என்பது CPC மூலம் அளித்திட 
நாடு முழுமைக்கும்  நமது மாநிலச் சங்கம் 
உத்திரவு பெற்றது நினைவிருக்கும்.

தற்போதைய இந்த உத்திரவு மூலம் VALIDATION மற்றும் SUPERVISOR  VERIFICATION  முடித்தவுடன், CPC மற்றும் SPOC உத்திரவை எதிர்பார்த்து,  DC  CLOSURE க்கு எதிர்பார்த்து காத்திருந்து 
EOD  கொடுக்க வேண்டுமே என்று இனி கவலையுறவேண்டாம் !  இல்லையெனில் மறுநாள் காலை வரவேண்டுமே எனவும் 
கவலையுற வேண்டாம் ! 

நமது கடிதத்தை ஏற்று, இந்தப் பிரச்சினையில் உடனடி கவனம் செலுத்தி ஆவன செய்திட மேற்கொண்ட  
CPMG  DR . CHARLES LOBO  அவர்களுக்கும்  
CEPT  DY . DIRECTOR  திரு. V .M . சக்திவேலு அவர்களுக்கும் நம்முடைய மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி !
கீழே பார்க்க  CPMG  அவர்களின் உத்திரவு நகலை !
===============================================================

Dear SPOCs,

Infosys have made changes in the EOD execution procedure. Details to be
followed are available in the attached document.

The major change done by infosys to address EOD issues is

1.  SOLs should only run HISCOD menu  ( new menu  available  for PO user -
SU, SA, PM )
2.  HSCOD, HSOLCOP and HSCOLD to be executed by CPCs in circle sets

​The changes are already deployed by Infosys in production. For any
clarifications on the changes made please contact Mr Elango,  Infosys.

---------------------------------------
Dear CEPT Team,

Please find attached the SOP Document for EOD Execution by centrally.
Kindly share the document with respective stakeholders and instruct users
to follow the same. This change is taken into production 
with immediately 
 effort.

Kindly modify the work class for menu HISCOD through HMOPM menu, so that
the branch user are able to access HISCOD menu and submit HISCOD menu after
their business operation.
==============================================================

இதர முக்கிய செய்திகள் :-

 1)அஞ்சல் பகுதிக்கான 2011-12 க்கான  LSG  பதவி உயர்வு பட்டியல் தயார் நிலையில் உள்ளது. ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.

2)2012-13,13-14 கான  பட்டியல் அடுத்த  நிலையில் வெளியிடப்படும்.

3)இருமாதங்களுக்கு ஒரு முறையான மண்டல ரீதியிலான பேட்டிகள் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெறும் . மாநிலச் செயலரும் அந்தந்த மண்டலச் செயலரும்  இந்த பேட்டிகளில்  கலந்துகொண்டு  ஊழியர் பிரச்சினைகள் குறித்து பேசுவார்கள் .

BI MONTHLY MEETING SOUTHERN REGION - 19.10.2015 (தேதி மாற்றம்)

Saturday, 10 October 2015

MEETING WITH CHIEF PMG, TN ON 09.10.2015 TO DISCUSS STAFF MATTERS



CHIEF PMG  அவர்களுடன்  சந்திப்பு 

ஏற்கனவே அறிவித்தபடி, நேற்று மாலை 04.30 மணியளவில் CHIEF PMG அவர்களுடன் ஊழியர்கள் பிரச்சினை தொடர்பாக நம்முடைய சந்திப்பு நடை பெற்றது . சந்திப்பின்போது ஊழியர்கள் தரப்பில் அஞ்ச மூன்று மாநிலச் செயலர் தோழர். J .R ., மாநிலத் தலைவர் தோழர். P . மோகன், மாநில நிதிச் செயலர் தோழர் . A . வீரமணி , அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன் , AIPEU  GDS NFPE  மாநிலச் செயலர் தோழர்.R . தனராஜ் ஆகியோரும் நிர்வாகத் தரப்பில் CHIEF  PMG அவர்களுடன் PMG, MM  திரு.J .T.வெங்க டேஸ்வரலு , DPS  HQ  திரு. A . சரவணன்,  DY. DIRECTOR ,CEPT திரு. V .M . சக்திவேலு ஆகியோரும்  கலந்துகொண்டனர். 

சந்திப்பின்போது பேசப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அதற்கான நிர்வாகத்தின் தீர்வு மற்றும் பதில்கள்  குறித்து கீழே  அளிக்கிறோம்.

1. CBS  தொடர்பான பிரச்சினைகள் குறித்து மட்டுமே கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் முழுமையாக விவாதிக்கப்பட்டது.  நமது மாநிலச் சங்கத்தின் தொடர் கடிதங்களின் அடிப்படையில் , இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ள தாகவும், ஒவ்வொரு பிரச்சினைக்கும் நிச்சயம் தீர்வு அளிக்கப்படும் என்றும் CPMG  அவர்கள் உறுதி அளித்தார்.
  
 a ) முதலில் EOD  அளிப்பதால் ஏற்படும் LATE  DETENTION குறித்து பிரச்சினை தொடர்பாக, கடந்த இரு நாட்களில் INFOSYS  உடன் விரிவாக விவாதிக்கப்பட்டு, மேலும் IBM தரப்பிலும் கலந்து FINACLE SOFTWARE இல் ஒரு தீர்வுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், 

இதன்படி எதிர்வரும் 12.10.2015 மாலை முதல் சேமிப்பு வங்கிப் பிரிவில் எல்லா VOUCHER களும் CLEAR செய்து VALIDATION கொடுத்தபிறகு POSTMASTER க்கு AUTHORIZE  செய்யப்படும் HSCARD  மூலம் எல்லா TRANSACTION  களும் COMPLETE செய்யப்பட்டதை அவர் உறுதி செய்த பிறகு "OK BUTTON CLICK" செய்தால் போதும் என்றும் இதன் பிறகு ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு கிளம்பலாம் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.  

b ) முதல் நாளைய DC  CLOSURE PROCESS  மறுநாள்  PEAK HOUR இல் எடுக்கப் படுவதாலும், அதே நேரத்தில் மிக அதிக எண்ணிக்கையில் அலுவலகங்கள் MIGRATION செய்யப்படுவதாலும்  PEAK HOUR SLOW DOWN ஏற்படுகிறது . இதனால் பொதுமக்கள் சேவை முற்றிலும் பாதிக்கப்படுகிறது. CUSTOMER  உடன்  COUNTER இல் பணியாற்றும் ஊழிர்களுக்கு தேவை யில்லாமல் மோதல் ஏற்படுகிறது என்பதை சுட்டிக் கட்டினோம். 

MIGRATION ஆல் இந்த பிரச்சினை எழவில்லை என்பதை பரீட்சார்த்தமாக கடந்த நாட்களில் சோதனை செய்து உறுதி செய்துள்ளதாகவும் DC  CLOSURE PROCESS  PEAK HOUR இல் செய்யப்படுவதால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது என்பதை தாங்கள் ஏற்பதாகவும் எனவே அதன் மீது INFOSYS  உடன் கலந்து EOD II STAGE மற்றும்   III STAGE PROCESS  இல் மாற்றம் ஏற்படுத்த உள்ளதாகவும் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண INFOSYS  உறுதி அளித்துள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டது. 

c) CHEQUE CLEARANCE  பிரச்சினையில் , தற்போது CBS  ஆக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு அலுவலகத்திற்கும் CLEARING  HOUSE  இல் இருந்து தனித் தனியே அனுப்பிடாமல்  CENTRALISED  ஆக  இந்தப் பிரச்சினையை  கையாள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் ஒரு மாதத்தில் இதற்கு தீர்வு காணப்படும் என்று உறுதி   அளிக்கப்பட்டது.

d) புதிதாக MIGRATE செய்யப்பட்டு வரும்  RURAL /REMOTE SINGLE /DOUBLE HANDED S.O. க்களில் ஏற்படும் NETWORK  பிரச்சினை காரணமாக அவர்கள் மாலையில்  அருகாமையில் உள்ள பெரிய அலுவலகங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது என்பதை சுட்டிக் காட்டினோம். இது குறித்து தங்களுக்கு எந்தப் புகாரும் இதுவரை வரவில்லை என்றும்  அப்படி ஏற்படும் அலுவலகங்களின் பட்டியல் அளிக்கப்பட்டால் உடன் BSNL  மற்றும  SIFY யுடன் தொடர்பு கொண்டு   இதனை தீர்க்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.  எனவே இது குறித்து கோட்ட/கிளைச் செயலர்கள்/ மாநிலச் சங்க நிர்வாகிகள் , மாநிலச் சங்கத்திற்கு EMAIL  மூலம்  உடன் தகவல் அனுப்பிட வேண்டுகிறோம்.

2) திண்டுக்கல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளரின் ஊழியர் விரோத நடவடிக்கைகள் குறித்தும் தொழிற்சங்கங்களின் அறிவிப்பு பலகை வைப்பது குறித்து ஏற்கனவே அளிக்கப்பட உத்திரவு  நிறைவேற்றப்படாதது குறித்தும் விரிவாக பேசினோம். மாநிலச் சங்க புகார் குறித்து REPORT  கேட்கப் பட்டுள்ளதாகவும்  அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அறிவிப்பு பலகை பிரச்சினையில், அலுவலகத்தில் ஊழியர் தரப்புடன் கலந்து ஊழ்யர்களின் பார்வையில்படும் பிரதான இடத்தில் வைத்திட தாம் அறிவுறுத்தி யுள்ளதாகவும் CHIEF PMG கூறினார். மேலும் தானே நேரில் சென்று பார்க்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

3) மேற்கு மண்டல அலுவலகத்தில்  திருப்பி அனுப்பப்பட்ட ஊழியர்களில் மூவரை மீண்டும் மண்டல அலுவலகத்திற்கு DEPUTATION கேட்பது குறித்து விவாதிக்கப்பட்டது. புதிதாக பணியில் சேர்ந்த ஊழியர்கள் பயிற்சி பெறாததால் மண்டல அலுவலகத்தில் BD மற்றும் TECH  BRANCH களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே  தற்காலிகமாக 3 மாதங்களுக்கு மட்டும் DEPUTATION இல் அந்த ஊழியர்களை  அளிக்க வேண்டி CHIEF  PMG இடம்  PMG WR  அவர்கள் அனுமதி கோரி பெற்றுள்ளதாகவும்  தெரிவித்தார். மேலும் இது நீட்டிக்கப்படாது என்று உறுதி அளித்தார்.  இதர ஊழியர்களை RELIEVE செய்வது குறித்து  தனது  INSPECTION போது  நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக CPMG  அவர்கள் உறுதி அளித்தார்.

4) சென்னை GPO மற்றும் அண்ணா சாலை தபால்காரர்களின் விடுப்பு மற்றும் காலியிடங்களில்  பணி இணைப்பு செய்யாமல்  பதிலி அனுமதிக்கும் பிரச்சினையில் இது குறித்து  உடன்  உரிய அறிவுறுத்தல் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

5) ANNA ROAD HPO தலைமை அஞ்சலகத்தில் எடுக்கப்பட்ட SENTRY  POST  மீண்டும் எதிர் திசையில் வைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

6) GDS  ஊழியர்களின் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒய்வு பெற்ற ஊழியர்களின்  SEVERANCE  தொகை அளிப்பது  குறித்து PFRDA  வுக்கு எடுக்கப் பட்டுள்ளது எனவும் இதுபோல  குரூப் இன்சூரன்ஸ் தொகை தற்போது வழங்கப் பட்டு வருவதாகவும் , RPLI  INCENTIVE  BILL PAYMENT  அளித்திட FUND  மண்டலங்களுக்கு ALLOTMENT செய்யப்பட்டுள்ளதாகவும், ESSENTIAL FORMS SUPPLY  உறுதி செய்திட ஆவன செய்வதாகவும் தெரிவித்தார்.

சுமார் மாலை 06.00 மணிவரை இந்த சந்திப்பு நடைபெற்றது . ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து  மாநில நிர்வாகம் முழுமையாக தெரிந்துகொள்ளவும் அதனை முழுமையாக உணர்ந்திடவும்  இந்த சந்திப்பு  பயனாக அமைந்தது. 

இந்த சந்திப்பின்போது அளிக்கப் பட்ட உறுதிமொழியை காலதாமதமின்றி நிச்சயம்  நம்முடைய CHIEF PMG அவர்கள்  நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்.  நமது  CHIEF  PMG அவர்களுக்கும் இதர மாநில நிர்வாகத்தின் அதிகாரிகளுக்கும் நம்முடைய நன்றி ! 

Thursday, 8 October 2015

Point Of Sale in Core System Integrator (CSI) Project Deployed for Testing

The Department of Posts (DoP) and Tata Consultancy Services (TCS) officially kicked-off the Core System Integrator (CSI) Project on 2nd of May 2013, as a part of the IT Modernization Project.

Core Systems Integration (CSI) will integrate all solutions implemented under the IT Modernization Project across different channels, levels and locations.

Now the CSI Project is under testing at selected Post Offices.  By the rolling out of this project, the entire local database based applications like Meghdoot and SpeedNet Software will be replaced with web based application developed by TCS.

Following are some details about new Point Of Sale module under CSI Project.


Overview

1.   Login for each of the module is based on roles
2.   User ID is created centrally and shared with each and every individual separately
3.   Roles and Password are setup at the Identity Access Management (IAM) application
4.   Individual applications use the centrally setup password

Login to POS

1.   POS Counter application allows a person to login provided the person has the allocation to use the counter
2.   Counter allocation happens at the Back Office application of POS
3.   Single Sign On(SSO) allows login to POS Counter, Back office, PBS, PLI, SAP through the CA –SSO

Day Begin

1.   Post Master, Supervisor, Treasurer are the controlling Users
2.   Post Master or the designated person will start the operation
3.   Supervisor will allocate the counter to the operators
4.   Treasurer will receive the Cash, Stamps, IPOs from the F&A
5.   Treasurer will allocate the Cash, Stamps, IPOs to the users
6.   Treasurer / Supervisor will get alerts for approval
7.   Post Master or the designated person will close the Post Office operation during the end of Day

Saturday, 26 September 2015

மத்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (POSTAL 
JCA),  ஏற்கனவே மே  மாதம் 6 ந் தேதி முதல் நடைபெறுவதாக இருந்து ஒத்தி வைக்கப்பட்ட  காலவரையற்ற வேலை நிறுத்தம், மீண்டும் எதிர் வரும் 23.11.2015 முதல்   நடைபெறும் என  அறிவித்துள்ளது. மத்திய அரசின்
பிடிவாதப் போக்கு காரணமாகவும் , அஞ்சல் துறையின்  மெத்தன போக்கு 
காரணமாகவும்  கீழ்க் காணும் முக்கிய கோரிக்கைகள்  இதுவரை நிறை வேற்றப்படவில்லை.   

1. அஞ்சல் துறையில் பணியாற்றும் 2.65 லட்சம் GDS  ஊழியர்களின் 
ஊதியம் மற்றும் பணித்தன்மை குறித்து ஏழாவது ஊதியக் குழுவே பரிசீலிக்க வேண்டும் .

2. கேடர்  சீரமைப்புத் திட்டம்  உடனடியாக நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் .

3. அனைத்து பகுதிகளிலும் காலிப் பணியிடங்கள் முறையாக 
முழுவதுமாக நிரப்பப் படவேண்டும்.

ஏற்கனவே ரயில்வே,  பாதுகாப்பு துறை ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட 
அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் அமைப்பான NATIONAL COUNCIL  JCM  ஊழியர் தரப்பு சங்கங்கள் சார்பாக எதிர்வரும் 23.11.2015 முதல் GDS  ஊழியர் கோரிக்கை உள்ளிட்ட ஊதியக் குழு  தொடர்பான மற்றும் இதர முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏழாவது ஊதியக் குழு தன்னுடைய அறிக்கையை  அரசுக்கு 
சமர்ப்பிக்க உள்ள சூழலில் இந்த வேலை நிறுத்தம் குறித்து மாற்று தேதி அல்லது மாற்று முடிவு  NC  JCM  ஊழியர் தரப்பு  தலைவர்களால் அறிவிக்கப்பட்டாலும் கூட, நமது  PJCA  வின்  வேலை நிறுத்தம் இதே தேதியில் இருந்து  மேற்கண்ட மூன்று கோரிக்கைகளுக்காக  நிச்சயம் நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.  அந்த அறிவிப்பின் நகலை  கீழே காண்க.

POSTAL JOINT COUNCIL OF ACTION
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATIONS
ALL INDIA POSTAL EMPLOYEES UNION, GDS (NFPE)
NATIONAL UNION GDS

No.PF-PJCA/2015                                              Dated: 23rd September, 2015

CIRCULAR
To
            All General Secretaries /All India Office Bearers
Circle Secretaries / Divisional and Branch Secretaries of NFPE, FNPO
& GDS Unions.


Comrades,

            The Postal Joint Council of Action comprising NFPE, FNPO, AIPE Union GDS (NFPE) & NUGDShas viewed with grave concern, the total negative attitude of the Central Government towards the genuine demands of the Postal employees which includes the revision of wages and service condition of the Gramin Dak Sevaks by 7th CPC, implementation of Cadre Restructuring Agreement and filling up of all vacant posts in all cadres of Department of Posts.

            As the 7th CPC  may  submit its report  any time before 31st  December,2015 , delay in settling the above demands will  result in denial of justice to 5.5 lakhs Postal Employees .

            In view of the above serious situation the PJCA  unanimously decided to  revive the  postponed indefinite strike of  May 6th  and  to commence  the indefinite  strike  from 23rd November, 2015, the date  from which JCM National Council  Staff Side  is going  on indefinite  strike. It is further  decided  that  in case  the JCM  Staff Side  change their decision the PJCA  will go on  strike from 23d November,2015 itself for the following  demands:

            (i)Include GDS in 7th CPC for wage revision and other service related matters.

            (ii)Implement cadre Restructuring proposals in all cadres including Postal     Accounts and MMS in Department of Posts

            (iii)Fill up all vacant posts in all cadres of Department of Posts(i.e. PA,SA,       Postmen, Mail Guard, Mail Man, GDS Mail Man, MMS Driver & other staff in         MMS, PA CO, PA SBCO , PO Accounts & Civil Wing  Staff)


With revolutionary Greetings

Yours Comradely,
                                                                      
(D. Theagarajan)                                                                                     (R.N. Parashar)
Secretary General                                                                                 Secretary General
         FNPO                                                                                                     NFPE
           
                                                                                     
(P. Panduranga Rao)                                                                        (P.U. Muralidharan)
General Secretary                                                                                General Secretary
AIPEU GDS (NFPE)                                                                                        NUGDS

Copy to:



          The Secretary Department of Posts, Dak Bhawan, New Delhi-110 001 for information and necessary action.