OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Tuesday, 10 March 2015

கிராம அஞ்சல் ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக் : செய்தி தாள்களில் வந்த செய்திகள் சில

கிராம அஞ்சல் ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்



அறந்தாங்கி: கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும். 50 சதவித பஞ்சப்படியை சம்பளத்துடன் இணைக்க வேண்டும், சம்பளம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் 7வது ஊதியக்குழுவே விசாரணை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர்  2வது நாளாக இன்று வேலை நிறுத்த போராட்டம் செய்தனர். மாலை தபால் நிலையம் முன் சங்க மாவட்ட தலைவர் அடைக்கலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. புதுக்கோட்டையிலும் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் இன்று வேலை நிறுத்த போராட்டம் செய்தனர்.



பாளையங்கோட்டையில் கிராம அஞ்சல் ஊழியர்கள் தர்ணா

கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில்  தர்ணா போராட்டம்  நடைபெற்றது.


கிராமிய அஞ்சல் ஊழியர்களை இலாகா ஊழியர்களாக்கி அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களின் ஊதிய மாற்றம் மற்றும் பணித்தன்மையை மாற்றியமைக்க நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அஞ்சல் துறையை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் அஞ்சல் ஊழியர்கள் இன்று தர்ணா போராட்டம் நடத்தினர்.


பாளையங்கோட்டையில்  தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலாளர்  காலபெருமாள்  தலைமை தாங்கினார்.  அம்பாசமுத்திரம் கிளைச் செயலாளர் ஏகாம்பரம் முன்னிலை வகித்தார். இந்த தர்ணா போராட்டத்தில் பி-4 முன்னாள் மாநிலதலைவர் ஜி.கிருஷ்ணன், சண்முகசுந்தரராஜா, ஜேக்கப்ராஜா, ஆறுமுகம், முத்தையா, நடராஜன், அப்துல்சமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கோவை, மார்ச் 10–
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் அஞ்சல் துறை ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று காலை கோவை குட்ஷெட் ரோட்டில் உள்ள தலைமை தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்ட தலைவர் சிவக்குமார், செயலாளர் ஜீவா, மாவட்ட அமைப்பு செயலாளர் சசிதரன் மற்றும் மகளிரணி கோட்ட பொறுப்பாளர் புஷ்பா ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கி நிரந்தர ஊழியர்களாக்க வேண்டும். 7–வது ஊதிய கமிஷன் குழுவை அமைத்து ஊதியம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.கிராமிய அஞ்சல் ஊழியர்களின் போராட்டம் காரணமாக அஞ்சல் அலுவலகங்களில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

கிராம அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்: அஞ்சல் சேவை பாதிப்பு
திருப்பூர் :  கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதனால், திருப்பூர் மாவட்ட கிராமப்புற பகுதிகளில் அஞ்சல் சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏழாவது ஊதியக் குழுவில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களைச் சேர்ப்பதுடன், அவர்கள் அனைவரையும் இலாகா ஊழியராக மாற்றி அனைத்து சலுகைகளையும் வழங்க
வேண்டும். ஊதியம், பணி ஆகியவற்றை பரிசீலிக்க நீதிபதி குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய கிராமிய அஞ்சல்
ஊழியர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியது.
வேலைநிறுத்தத்தில் திருப்பூர் கோட்டத்தில் சுமார் 800 கிராம அஞ்சல் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.   இதனால் கிராமப்புற அஞ்சல் துறை பணிகள் பெருமளவில்
முடங்கியுள்ளன. அஞ்சல் சார்ந்த பணிகளுக்காகவும், மணியார்டர் உள்ளிட்டவற்றுக்காக நகர்ப்புற அஞ்சல் நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை கிராமப்புற மக்களுக்கு
ஏற்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் கடுமையாகக் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக திருப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம்
நடத்தப்பட உள்ளது. இதில் ஊழியர்கள் பங்கேற்க வேண்டும் என சங்கத்தின் கோட்டச் செயலர் வெள்ளிங்கிரி கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment