OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Wednesday, 15 July 2015

நீரழிவு நோய் இருப்பவர்களெல்லாம் வேலைக்கு தகுதியானவர்கள் அல்ல என்று கூற முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு

நீரழிவு நோய் இருப்பவர்களெல்லாம் வேலைக்கு தகுதியானவர்கள் அல்ல என்று கூற முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, ஜூலை 16-

சென்னை ஐகோர்ட்டில் தெற்கு ரெயில்வேயின் தலைமை பணியாளர் அதிகாரி, துணைத் தலைமை அதிகாரி, தலைமை மருத்துவ அதிகாரி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியம், டி.மதிவாணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-


தெற்கு ரெயில்வே மற்றும் ஐ.சி.எப்.-ல் குரூப் டி பணிகளில் உள்ள 3 ஆயிரத்து 698 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2007-ம் ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக 4 லட்சத்து 3ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.


இதில் 2 லட்சத்து 95 ஆயிரம் பேர் தகுதியுள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டு முதல் கட்டமாக உடல் தகுதி தேர்வுக்கு அனுப்பப்பட்டனர். அதில் பங்கேற்ற 79 ஆயிரம் பேர்களில் 34 ஆயிரத்து 927 பேர் தகுதி பெற்றனர். இவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதில் 6 ஆயிரத்து 367 பேர் தேர்ச்சி பெற்றனர்.


இவர்களில் 4 ஆயிரத்து 232 பேரிடம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 58 பேர் மருத்துவ ரீதியாக தகுதி பெறவில்லை. அவர்களில் பி.புஷ்பம் என்பவரும் ஒருவர்.


தனக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று புஷ்பம் கேட்டதன்படி, மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் தகுதியற்றவர் என்று மீண்டும் சான்றளிக்கப்பட்டது. இதை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் புஷ்பம் வழக்கு தாக்கல் செய்தார்.


புஷ்பத்தின் மனுவை ஏற்றுக் கொண்ட தீர்ப்பாயம், அவருக்கு 12 வாரத்துக்குள் பணி வழங்கும்படி 17.10.14 அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இந்த கோர்ட்டில் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். அதில், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.


இதுபோன்ற வழக்கு ஒன்றில் இதே ஐகோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதில், உலகத்தின் நீரழிவு நோயின் தலைநகராக இந்தியா விளங்குகிறது என்றும் அதை நோய் என்று கூறுவதைவிட, உடலில் ஏற்பட்டுள்ள கோளாறு அல்லது சீர்குலைவு (டிஸ்ஆர்டர்) என்று கூறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.


ரெயில்வே நிர்வாகம் தரப்பில் வாதிட்ட வக்கீல், 40 வயதுள்ள புஷ்பத்துக்கு நீண்டகாலமாக நீரழிவு நோய் இருப்பதால், திறமையாக பணியாற்றுவதற்கான தகுதி அவரிடம் இருக்காது. எனவே அவரது விண்ணப்பத்தை நிராகத்ததில் குற்றம் காணக்கூடாது என்று குறிப்பிட்டார்.


மேலும், அந்த நோயால் உடலின் முக்கிய பாகங்களும் பாதிக்கப்பட்டு, பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இதனால்தான் ரெயில்வே பணிக்கு நீரழிவு நோய் தாக்கியவர்கள் தகுதியானவர்கள் அல்ல என்று கருதப்படுகிறார்கள் என்றும் தெற்கு ரெயில்வேயின் தலைமை மருத்துவ இயக்குனர் அளித்த மனுவையும் ரெயில்வே வக்கீல் தாக்கல் செய்தார்.


புஷ்பத்துக்கு தீவிர நிலையில் நீரழிவு நோய் (எச்.பி.ஏ.1சி.) இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது மருத்துவ ரீதியான கருத்துகளுக்கு பதில் கருத்து கூறுவதற்கு நாங்கள் மருத்துவ நிபுணர் அல்ல.


இந்த அளவு தீவிர நோய் இருந்தால் அது பிற்காலத்தில், சிறுநீரக பிரச்சினை, உறுப்பை நீக்குவது, குருட்டுத்தன்மை போன்ற பல பக்க விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படும் என்று ஊகத்தில் கூறப்படும் கருத்துக்களை வைத்துக் கொண்டு புஷ்பத்துக்கு வேலை கொடுக்காமல் இருந்துவிட முடியாது.


ஆனால் தற்போதய நிலையில் புஷ்பத்தை வேலைக்கு தகுதியானவர் அல்ல என்று கூறும் அளவுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டிருக்கவில்லை. அவரிடம் இருக்கும் நீரழிவு நோயின் தற்போதய நிலையில், அவரால் தொடர்ந்து சீரான சிகிச்சையை பெற்றாலே போதும்.


எனவே, நீரழிவு அல்லது சர்க்கரை நோய் இருந்தால் அலுவலக பணிகளை ஒருவரால் நிறைவேற்ற முடியாது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதால், ரெயில்வே நிர்வாகம் வைக்கும் வாதங்களை ஏற்க முடியாது.


நீரழிவு நோயின் தலைநகரம் என்று அழைக்கப்படும் அளவுக்கு இந்தியாவில் பலருக்கு இந்த பிரச்சினை உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக தொழிற்சாலைகளால் தயாரிக்கப்பட்ட உணவு, உரம், மருந்து வகைகள், பானங்கள் ஆகியவற்றின் பாதிப்பாகவும் ஏற்பட்டிருக்க முடியும்.


இந்திய நீரழிவு நோய் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறிக்கையின்படி, இந்தியாவில் வாழ்பவர்களில் 4கோடியே 90 லட்சம் பேர் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இவர்கள் பணியாற்றுவதற்கு தகுதியிழந்தவர்கள் என்றும் அவர்களுக்கு பணி வழங்கினால் அது பணி வழங்கியவர்களின் பொறுப்பில் வந்துவிடும் என்றும் கூறுவதை ஏற்க முடியாது.


ரெயில்வே நிர்வாகிகளின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. புஷ்பத்துக்கு இன்னும் 8 வாரங்களுக்குள் பணி வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment