OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Wednesday, 15 July 2015

நில மசோதாவுக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டையால் கிராமப்புற முன்னேற்றம் பாதிப்பு: முதல்-மந்திரிகள் கூட்டத்தில் பிரதமர் பேச்சு

நில மசோதாவுக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டையால் கிராமப்புற முன்னேற்றம் பாதிப்பு: முதல்-மந்திரிகள் கூட்டத்தில் பிரதமர் பேச்சு
புதுடெல்லி, ஜூலை.16-

மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்ற குழு கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-


நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் அரசியல் ரீதியாக முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கூடங்கள் கட்டுதல், ஆஸ்பத்திரிகள் கட்டுதல், சாலைகள் அமைத்தல், நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுதல் உள்ளிட்ட கிராமப்புற முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நில எடுப்புக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்து வேறுபாடு கிடையாது.


இதில் தீர்வு காண்பதில் அரசியல் மாச்சரியங்கள் கூடாது. அது, கிராமப்புறங்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தருவதிலும், விவசாயிகளுக்கு பெரிய அளவிலான வளங்களை கொண்டு வந்து சேர்ப்பதிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். நிலம் கையகப்படுத்தும் மசோதா, தற்போது பாராளுமன்ற நிலைக்குழுவிடம் உள்ளது. பாராளுமன்றம் கூட உள்ள நிலையில், மாநிலங்களின் யோசனைகள் மீண்டும் கேட்கப்படுவது சரியானதாக இருக்கும்.


எங்கள் அரசு பதவி ஏற்ற பின்னர், 2013-ம் ஆண்டைய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பல்வேறு மாநிலங்களும் கவலை தெரிவித்தன.


அந்த சட்டத்தின் பிரிவுகளால், வளர்ச்சிப்பணிகள் பாதித்துள்ளதாக பல மாநிலங்கள் கூறின. பல முதல்-மந்திரிகள் அந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அவர்கள் கடிதங்களும் அனுப்பினர். டீம் இந்தியா என்ற ஒரே அணியின் அங்கம் என்ற வகையில், அனைத்து வளர்ச்சிப்பணிகளிலும் மாநிலங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.


கடந்த ஓராண்டு நல்ல தொடக்கமாக இருந்திருக்கிறது. திட்டமிடும் செயல்பாடுகளில் மாநிலங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. நிதி ஆயோக் துணைக்குழுக்களில் மாநில முதல்-மந்திரிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.


மத்திய அரசு வளர்ச்சி திட்டங்களை தீட்டுகிறபோது, மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரிகள் எப்போதுமே கருதுகின்றனர். மாநிலங்களின் வளர்ச்சி பற்றிய கவலைகளின் அடிப்படையிலும், விவசாயிகள் தங்கள் சட்டப்பூர்வமான பலன்களை அடைய வேண்டும் என்பதின் அடிப்படையிலும் தான், நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் 3 முறை பிரகடனம் செய்யப்பட்டது 
என கூறினார்


இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஆகியோர் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இந்த கூட்டத்துக்கு பின்னர் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நிருபர்களிடம் பேசினார்.


அப்போது அவரிடம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து கவலை தெரிவித்துள்ள தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அருண் ஜெட்லி, “மாநிலங்கள் எழுப்பியுள்ள அனைத்து பிரச்சினைகளும் கவனத்தில் கொள்ளப்படும்” என பதில் அளித்தார்.


நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்த சில கட்சிகள், இப்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருப்பதற்கு அருண் ஜெட்லி வருத்தம் தெரிவித்தார்.


தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


2013-ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் சில பிரிவுகளால், நிலம் கையகப்படுத்துவதில் பெரும் சிரமங்கள் இருப்பதாக மாநிலங்கள் புகார் கூறின. அதன் அடிப்படையில்தான், 2013-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தோம்.


மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்காக காலவரம்பின்றி காத்திருப்பதை விட சில மாநிலங்கள் நிலம் கையகப்படுத்துதலை எளிதாக்கும் விதத்தில், மாநில அளவில் நிலம் கையகப்படுத்தும் சட்டம் இயற்றுவதில் ஆர்வம் கொண்டுள்ளன. மத்திய அரசு ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு முக்கிய ஆலோசனை வந்தது. ஆனால் கருத்து ஒற்றுமை ஏற்படுவதற்காக மாநிலங்கள் காலவரம்பின்றி காத்திருக்க முடியாது.


மத்திய அரசு இந்த நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற தவறுகிற பட்சத்தில், அதை மாநிலங்களுக்கு விட்டு விட வேண்டியதுதான். விரைவான வளர்ச்சி காண விரும்புகிற மாநிலங்கள், அவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு என சொந்த சட்டம் இயற்றிக்கொள்ளட்டும்.


இதுபோன்ற யோசனைகள் பெரிய அளவில் வந்துள்ளன.


இந்த கூட்டத்தில் சில முதல்-மந்திரிகள் பங்கேற்கவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் காரணமாக சிலர் வரவில்லை. அவர்களில் பலரும் பிரதமரிடம் பேசினார்கள். இந்த கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்தவர்கள், அந்த முடிவு, கூட்டுறவு கூட்டாட்சிக்கு இசைவானதுதானா என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டும். எப்போதுமே நீங்கள் வந்து, மாற்று கருத்தினை தெரிவிக்கலாம்.


நாட்டின் வளர்ச்சியில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். விவசாயிகளின் நலன்களை மனதில் வைத்துக்கொள்வோம். அந்த அடிப்படையில் நாங்கள் அனைத்து ஆலோசனைகளையும் பரிசீலிப்போம் 
என கூறினார்

“வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றிவிட முடியும் என்று அரசுக்கு நம்பிக்கை உள்ளதா?” என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.


அதற்கு அருண் ஜெட்லி நேரடியாக பதில் அளிக்காமல், “நல்லது. நாட்டுக்கு சில மாற்றங்கள் தேவை என்பதை நான் நிச்சயமாக சொல்வேன். ஒவ்வொரு வளர்ச்சி நடவடிக்கைக்கும் நிலம் தேவைப்படுகிறது” என கூறினார். 
source : Malaimalar

No comments:

Post a Comment