ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ஒரு வாரமே அவகாசம் உள்ள நிலையில் 2015 ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது ஆர்பிஐ. 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில் ஆண்டு அச்சிடப்பட்டிருக்காது. இந்த நோட்டுகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதன்படி ஜனவரி 01, 2015க்குள் 2005க்கு முன்னர் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
இப்படி மாற்றிக்கொள்வ தற்கான கால அவகாசம் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றாலும், பத்து நோட்டுகளுக்கு அதிகமாக கொடுத்து பரிமாற்றம் செய்யும் போது முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று போன்றவை கொடுத்தால் மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்.
கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை தடுக்கும் விதமாக ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கணக்கில் வராத கருப்பு பணத்தை இதன் மூலம் கட்டுப்படுத்தமுடியும். வியாபார நிறுவனங்களில் பணத்தை கொடுக்கும்போது ஆண்டு அச்சிடப்பட்ட நோட்டு என்பது கவனிக்கப்படும் என்ப தால் மாற்றிக்கொள்வது நல்லது.
No comments:
Post a Comment