வருங்காலத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட சாத்தியங்கள் இருக்கின்றது என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை இதே நிலைமையில் இருந்து, பணவீக்கம் குறையும்போது வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது என்று இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) நிகழ்ச்சியின் போது இதனை தெரிவித்தார்.
விலைகள் குறைந்து வருவது சாதகமாக இருந்தாலும், சர்வதேச சூழல் காரணமாக இந்த சரிவு இருக்கிறது. இது மேலும் தொடரும் போது வட்டி விகிதம் குறையும் என்றார்.
மேலும் பேமென்ட் மற்றும் சிறிய வங்கிகள் தொடங்க பல நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும். மார்ச் ஏப்ரல் மாதங்களில் இதற்கான அனுமதி கொடுக்கப்படும் என்றார். மேலும் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவது ரிசர்வ் வங்கியின் முக்கியமான குறிக்கோள் என்றார். தவிர ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களுக்கான மறுகடன் வழங்குவதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். தொழிற்துறையினர் இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளனர் என்றார்.
இப்போது தொடங்கப்படும் திட்டங்களில் அதன் ஆயுள் காலம் முடியும் வரை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மறு கடன் கிடைக்கும் வசதி இருக்கிறது. ஆனால் ஏற்கெனவே இருக்கும் திட்டங்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை. இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளி யாகும் என்றார்.
No comments:
Post a Comment