படிச்சு முடிச்சு பிரைவேட் வேலை பார்த்து
முதலாளிகளுக்கு அடிமையா
இருக்க முடியாதுன்னு
கவர்மெண்டு வேலைக்கு
பரிட்சை எழுதி வந்து சேர்ந்தேன்...
உங்களுக்கெல்லாம் பென்ஷன்
கிடையாதுன்னும் உங்க சம்பளத்துல
கொஞ்சம் கடிச்சு
கடசியா துப்புவேன்
எடுத்துக்கனு சொண்ணாங்க.....
பாதி நாட்கள் கரன்ட் இல்லை
வேலை செய்யாத யுபிஎஸ் ஜெனரேட்டர்
இருந்தும் பயனில்லை,
மட்டமானத ஏன் வாங்குனீங்கனு கேட்காம
இருக்குறத சரிபார்த்து தரசொன்னா
நிதி இல்லைன்னு சொண்ணாங்க.....
மாதாமாதம் இலக்குனு சொண்ணாங்க
பத்துப்பேர் இருக்குற ஊருல மாதாமாதம்
நூறு இலக்குனு கேட்டாங்க நானும் உழச்சேன்,
நிதி இல்லாம பொருள் வாங்க முடியாதுன்னு
தெரிஞ்சவங்க, ஆட்கள் இல்லாம இலக்கு வராதுன்னு
தெரியவில்லை போல....
இலக்க ஏன் நாம அடைய முடியலனு
காரணம் கேட்டால் சொல்லிடலாம்,
நீ ஏன் இலக்க எட்டலனு விளக்கம் கேட்டா
என்ன செல்ல.....
ஒரு விவசாயி
இன்னொரு விவசாயிட்ட சொண்ணா புரிஞ்சுப்பான்
ஆபிசர்கலுக்கு தெரியாது
கலப்பை இல்லாம விதை நெல்லும் இல்லாம
வெரும் மாட்ட மட்டும் அடி அடினு அடிச்சா
மகசூல் வராதுன்னு, ஆனால்
ஆபிசர்கலுக்கு ஒன்றும் மட்டும் தெரியும்
இவங்க தொழிலாளி
நாம ஆபிசர்னு.....
No comments:
Post a Comment