OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Wednesday, 25 February 2015

தவறான அதிகாரிகள் ! தபால் துறைக்கு ஆபத்து!

                                  தமிழகத்தில், அஞ்சல் அதிகாரிகளின் தவறான வழிக்காட்டுதலால், காப்பீடு திட்டம் மற்றும் ஆர்.டி., கணக்கு துவங்கியதில், பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, அஞ்சல் ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.


தமிழகத்தில், அஞ்சல் துறை, சென்னை, மதுரை, திருச்சி, கோவை என, நான்கு மண்டலமாக செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில், தலைமை அஞ்சலகம், துணை அஞ்சலகம், கிளை அஞ்சலகம் என மொத்தம், 12,185 அஞ்சலகம் இயங்கி வருகின்றன.கடந்த அக்.,9ம் தேதி முதல், 16ம் தேதி வரை, 'தேசிய அஞ்சல் வாரவிழா' கொண்டாப்பட்டது. தமிழ்நாடு அஞ்சல்துறை தலைவர் மூர்த்தி,' மக்களிடையே,விழிப்புணர்வு ஏற்படுத்தி, சேமிக்கும் எண்ணத்தை உருவாக்க, சேமிப்பு கணக்குகளை, அதிக அளவில், துவக்க வேண்டும்' என்றார்.


அதையடுத்து, மண்டல அதிகாரிகள் சேமிப்பு கணக்குகளை பெருமளவில் துவக்க வேண்டும் என, கோட்ட அதிகாரிகள், அனைவருக்கும், நெருக்கடி கொடுத்து வந்தனர். தமிழக அஞ்சல்துறை தலைவரிடம், பரிசு மற்றும் நற்பெயர் எடுக்கவே, இத்தகைய கெடுபிடிக்கு காரணமென, அஞ்சல் ஊழியர்கள் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளனர்.நிலைமையை சமாளிக்க, வேறு வழியின்றி, கோட்ட அதிகாரிகள், நிர்பந்தம் செய்து தனக்கு கீழ் உள்ள அஞ்சல் ஊழியர்களை, அவரவர் பெயரில், சேமிப்பு கணக்கை துவங்க செய்து விட்டனர். சிறு சேமிப்பில் (எஸ்.பி.,) கணக்கு துவங்க, டிபாசிட் தொகை, 50 ரூபாய் தேவை இதில், ஒருவர் ஒரு சிறுசேமிப்பு கணக்கு மட்டுமே துவங்க முடியும்.அதே நேரத்தில், தொடர்புவைப்பு (ஆர்.டி.,) கணக்கை, ஒருவர் பெயரில், எத்தனை வேண்டுமானாலும் துவங்கலாம் என்கிற நிலை உள்ளது. இதற்கான டிபாசிட் தொகை தலா, 10 ரூபாய் இருந்தால் போதும்.இதை பயன்படுத்தி, அஞ்சல் ஊழியர்கள் ஒவ்வொருவரும் தலா, 1,000 முதல், 2,000 ரூபாய் வரை, 'டிபாசிட்' ஆக செலுத்தி, ஒருவர் தலா, 100 முதல், 200 ஆர்.டி., கணக்குகளை துவங்க செய்து சேமிப்பு கணக்கை பல மடங்கு உயர்த்தி, கணக்குகாட்டப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகம் முழுவதும், சேமிப்பு கணக்கின் எண்ணிக்கை, பல லட்சம் மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-
Read at : Dinamalar  Nov 5-2014

No comments:

Post a Comment