நேற்று மாலை நான்கு மணியளவில் NFPE தமிழ் மாநில இணைப்புக் குழு சார்பில் அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J .R ., அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன், RMS மூன்று மாநிலச் செயலர் தோழர். ரமேஷ் , RMS நான்கு மாநிலச் செயலர் தோழர். பரந்தாமன், GDS மாநிலச் செயலர் தோழர். தனராஜ், நிர்வாகப் பிரிவு மாநிலச் செயலர் தோழர். நாகராஜன், SBCO மாநிலத் தலைவர் தோழர். கோவிந்தராஜலு ,
CASUAL LABOUR சங்க மாநிலத் தலைவர் தோழர் சிவகுருநாதன் , தென் சென்னை அஞ்சல் மூன்று கோட்டத் தலைவர் தோழர். வாசுதேவன் ஆகியோர் CHIEF PMG , TN திரு. T. மூர்த்தி அவர்களை சந்தித்தோம்.
அவரது பதவி உயர்வு குறித்து நம்முடைய NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தோம். அவரும் தமிழகத்தில் அவரது காலத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்தார். MEMBER (O) ஆனாலும் தமிழகத்தின் நலனுக்கு நிச்சயம் தன்னாலான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார். பின்னர் அஞ்சல் மூன்று சார்பில் கீழ்க் கண்ட நினைவூட்டு கடிதம் அளித்து முக்கிய பிரச்சினைகளில் தீர்வினை வேண்டினோம் .
1. எழுத்தர் தேர்வு சம்பந்தமாக கேட்கப் பட்டிருந்த விளக்கம் DTE இலிருந்து வந்துவிட்டதால் தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் முடிந்தால் நாளையே அறிவிக்கலாம் (இன்று) என்றும் கூறினார்.
2. LSG பதவி உயர்வு குறித்து கேட்கப் பட்டிருந்த விளக்கம் DTE இலிருந்து இன்னமும் வரவில்லை என்றும் வந்தவுடன் அறிவிக்க சொல்லியிருப்ப தாகவும் தான் DTE சென்றவுடன் இது குறித்து நிச்சயம் பார்க்கிறேன் என்றும் உறுதி அளித்தார்.
3.தென் மண்டல தொழிற் சங்க காரணங்களுக்காக விதிக்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்திட, நேற்று சென்னை வரும் PMG SR இடம் கண்டிப்பாக அறிவுறுத்துவதாக உறுதி அளித்தார்.
இதர பிரச்சினைகள் குறித்து உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். பதவி உயர்வு பெற்றுச் செல்லும் அவருக்கு நம் அஞ்சல் மூன்றின் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment