OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Sunday, 28 September 2014

ஏ.டி.எம் பிரச்சினைக்கு எங்கே புகார் செய்வது?

பெரும்பாலான சமயங்களில் ஏ.டி.எம்.-ல் ஏற்படும் தவறான நடவடிக்கைகளால்தான் மக்கள் பணத்தை இழக்கிறார்கள். ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து நீங்கள் பணம் எடுக்க முயலும்போது பணம் வரவில்லை. ஆனால்உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக உங்கள் பாஸ்புக்கில் பதிவாகிறது. அல்லது நீங்கள் 10,000 ரூபாய் எடுக்க முயற்சிக்கிறீர்கள். ஆனால்வெறும் 1,000 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. ஆனால்உங்கள் பாஸ்புக்கில் 10,000ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக உள்ளது. ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது இப்படி பல பிரச்னைகள் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகள் அந்த ஏ.டி.எம். மெஷினிலோ அல்லதுமின்சாரக் கோளாறினாலோ அல்லது சர்வர் (Server)இயந்திரத்தில் வரும் பிரச்னைகளினாலோ ஏற்படக்கூடும்.

எங்கு புகார் செய்வது..?
ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது இதுமாதிரியான பிரச்னை உங்களுக்கு ஏற்பட்டால்எந்த வங்கி உங்களுக்கு ஏ.டி.எம். கார்டை வழங்கியதோஅந்த வங்கியில் உடனடியாக புகார் (Complaint) செய்யவும். ஏ.டி.எம். சென்டருக்குள்ளேயே உடனடி புகார் செய்ய வேண்டிய தொலைபேசி எண்குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஏ.டி.எம்.-ல் இருந்து பணம் எடுத்ததற்கான ரசீதை (transaction)ஜெராக்ஸ் எடுத்து அதை கவனமாக வைத்துக்கொள்ளவும். அந்த ஸ்லிப்பில் ரெஸ்பான்ஸ் கோட் '00’ அல்லது '054’இருக்கிறதா என்று பார்க்கவும். '00’ என்று வந்தால் அந்தபணப்பரிமாற்றம் சரியானது. '054’ என்று வந்தால் அந்தப் பணப்பரிமாற்றம் தவறானது.

கேட்டுப் பெறவேண்டியவை!
ஏ.டி.எம். தொடர்பான உங்கள் புகார்களை தெரிவிக்கும்போது வங்கியிடமிருந்து கேட்டுப் பெறவேண்டியவை,சர்ச்சைக்குரிய பணப்பரிமாற்றத்திற்கான கணக்குவிவரத்தின் பிரதிஎலெக்ட்ரானிக் ஜர்னல் (Journal), ஜர்னல் பிரின்ட் எனப்படும் பரிமாற்றம் நடந்ததற்கான தகவல் பிரதி.
வாடிக்கையாளர் பணம் எடுக்கும்போது ஏ.டி.எம். இயந்திரத்தால் பதிவு செய்யப்படும் நடவடிக்கை விவரங்கள் மற்றும் வாடிக்கையாளர் கணக்கில் இருப்புத் தொகை போன்ற விவரங்கள். சரியான முறையில் பணம் வழங்கியிருந்தாலும்பணம் வழங்காமல் போனாலும் இந்த விவரங்கள் அதில் பதிவாகி இருக்கும். அதன் பிரதி ஒன்று.

சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்தில் ஒருநாளின் முடிவில் எடுக்கப்பட்ட சரி செய்தலுக்கான விவரங்கள் மற்றும் பணம் சரிபார்த்தல் ரிப்போர்ட் ஆகியவற்றின் பிரதி.

வாடிக்கையாளர் பணம் எடுக்கும்போது எடுக்கப்பட்ட ஏ.டி.எம். காமிரா மற்றும் சி.சி.டிவி-யின் கண்காணிப்பு பதிவுகளடங்கிய சிடி அல்லது டிவிடி ஒன்று.
பணப்பரிமாற்ற நடவடிக்கையின் ஸ்விட்ச் ரிப்போர்ட்.

இது சம்பந்தமாக இந்திய ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகள்படிவாடிக்கையாளருக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கிய வங்கியானதுஇந்த புகார் மீது நடவடிக்கை எடுத்துபுகார் பெற்ற நாட்களுக்குள் வாடிக்கையாளருக்குஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்வது அவசியம்.

ஏழு நாட்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டுஅதுபற்றி வாடிக்கையாளர் 30 நாட்களுக்குள் புகார் தருவாரேயானால்,கார்டு வழங்கிய வங்கி நாளன்றுக்கு 100 ரூபாய் வீதம் அபராதமாகத் தரவேண்டியிருக்கும்.

வங்கியானது வாடிக்கையாளர் அடைந்த நஷ்டத்துக்கீடான பணத்தை வரவு வைக்கா விட்டாலோ அல்லது இத்தகைய புகார்களுக்கு வங்கி பதில் ஏதும் அளிக்காமல் போனாலோ,அந்தப் பகுதியைச் சேர்ந்த வங்கி குறைதீர்ப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கலாம்.

No comments:

Post a Comment