JCA  - NFPE - FNPO 
 அஞ்சல் , RMS -MMS - GDS  ஊழியர் கூட்டுப் போராட்டக் குழு ,
      தமிழ் மாநிலம் 
NFPE -FNPO சம்மேளனங்கள்  கூட்டாக விடுத்துள்ள அறைகூவலையடுத்து எதிர்வரும்  28/12/2012 அன்று தமிழகத்தின் அனைத்து கோட்ட/ கிளை களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட  அன்புடன் வேண்டுகிறோம்.. 
SCREENING  COMMITTEE  இருந்த  நேரத்தில் , 2005 முதல்2008 வரை நேரடி தேர்வு முறையில் இருந்த 2/3RD காலியிடங்கள் நம்முடைய எதிர்ப்பினால்  ஒழிக்கப்படாமல் இதுவரை SKELETON  இல்  இருந்து வந்தது . இப்படி இருப்பில் வைக்கப் பட்டிருந்த  17093 காலிப்பணியிடங்களை, மத்திய நிதி அமைச் சகத்தின் அறிவுறுத்தலின் படி  ஒழித்துக்கட்ட , அஞ்சல்நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது . அதில்,கீழ்கண்ட பணியிடங்கள் உள்ளடங்கும். வேளைப்பளு கூடியுள்ள இத்தருணத்தில், காலிப்  பணியிடங்களை ஒழிப்பதின் மூலம்  ஊழியர்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கும்  அரசின் மற்றும் இலாக்காவின் மோசமான  போக்கினைக் கண்டித்து  இந்த ஆர்ப்பாட்டத்தை  நாடு தழுவிய  அளவில்  நாம்  நடத்துகிறோம்.
சென்னை பெரு  நகரைப் பொருத்தவரை JCA  சார்பில்  28.12.2012 அன்று மதியம் 12.00 மணியளவில் CPMG அலுவலகம்  எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். நகரின் அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் பெருவாரியான தோழர்கள்  ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
குறுகிய கால அவகாசத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளதால் சுற்றறிக்கைகள்  தமிழகத்தின் கடைக்கோடி வரை சென்று சேராது  என்பதால் ,  சுற்றறிக்கையை  எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும்  SMS  மூலம் அறிவிப்பு கொடுக்கப்படும். மேலும் இந்த வலைத்தளத்தின் அறிவிப்பை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டுகிறோம்.
இந்த உத்திரவின் மூலம் ஒழிக்கப் படும் பதவிகள் :-
PAs- 5010, POSTMAN- 3230 Gr D / MTS- 4407,
SBCO PAs- 385 RMS SAs- 1259
PAs- 5010, POSTMAN- 3230 Gr D / MTS- 4407,
SBCO PAs- 385 RMS SAs- 1259
மேலும்  ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு கோட்ட /கிளைச் செயலர்கள்  கீழ் வரும் கடிதத் தந்தியை  நமது துறை அமைச்சருக்கும் , இலாக்கா முதல்வருக்கும்  கண்டிப்பாக்க  தவறாமல்  அனுப்பிட வேண்டுகிறோம்.
TEXT OF SAVINGRAM
STRONGLY PROTEST THE ABOLITION OF 17093 POSTS IN DEPARTMENT OF POSTS AAA  UNABLE TO MANAGE THE DAY-TO-DAY WORK AAA  REQUEST TO REVIEW THE ORDERS AND RESTORE THE POSTS WITH IMMEDIATE EFFECT = 
.......... Branch/Divisional/Circle Secretary.
 
No comments:
Post a Comment