இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி முடிந்த வுடன் PMG, SR அவர்களுடன் மாலையில் INFORMAL MEETING சுமார் 1.30 மணி நேரம் நடை பெற்றது. இதில் மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்களும் மதுரை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். S . சுந்தரமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டார்கள். பேட்டி சுமூகமாக நடைபெற்றது..
தென் மண்டலத்தில் ஊழியர்கள் பிரச்சினைகளில் முழு அக்கறை காட்டப் படும் என்றும் , நிர்வாகத்துடன் தொழிற் சங்கத்திற்கு சுமூக உறவு வேண்டும் என்றும் PMG, SR அவர்கள் வேண்டினார்.
இதில் பேசப்பட்ட பிரச்சினைகள் :-
1. மதுரை கோட்டத்தில் தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகள் ஏற்கனவே மாநிலச் சங்கத்தால் எழுத்து பூர்வமாக கொடுக்கப்பட்டுள்ளது. அவைமீது உரிய நடவடிக்கை உடன் எடுக்கப்படும்.
மதுரை கோட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள முது நிலைக் கண்காணிப்பாளருக்கு இது குறித்து அறிவுறுத்தப்படும். கோட்டச் செயலர் உடன் SSPஐ சந்தித்து பிரச்சினைகள் குறித்து பேசிட அறிவுறுத்தப் பட்டுள்ளார்.
2. திண்டுக்கல் தலைமை அஞ்சலக அலுவல் நேரம் மாற்றப்பட்டது திரும்பப் பெற வேண்டும்.
உடன் இது குறித்து கோட்ட முது நிலைக் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப் படும்.
3. திண்டுக்கல் கோட்டத்தில் அக்டோபர் மாதமே அறிவிக்கை செய்யப் பட்டுள்ள முறைகேடான RT -2015 ரத்து செய்யப் பட வேண்டும்.
இந்த உத்திரவு அமல் படுத்தப்பட மாட்டாது. முது நிலைக் கண்காணிப்பாளர் அறிவுறுத்தப் படுவார்.
4. மதுரை கோட்டத்தில் நீண்ட நாள் கோரிக்கையான தோழர். செல்லத்துரை , PM GRADE I இடமாற்றம் குறித்து
அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப் பட்டு விரைவில் சாதகமான உத்திரவு அளிக்கப் படும்.
5. தேனீ கோட்டத்தில் ஒரு சில ஊழியர்களுக்கு முறை கேடாக அளிக்கப்பட்டுள்ள அதீதமான சலுகைகள் குறித்து .
இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப் படும்.
6. தேனீ கோட்டத்தில் பழுதடைந்த்ள்ள PRINTER மற்றும் கணினி உப பொருட்கள் மாற்றம் செய்திட வேண்டும்.
உடன் இது குறித்து அறிக்கை பெற்று , PERIPHERALS புதிதாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
No comments:
Post a Comment