OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Wednesday 15 July 2015

பெட்ரோல், டீசல் அதிரடி விலை குறைப்பு

பெட்ரோல், டீசல் அதிரடி விலை குறைப்பு
புதுடெல்லி, ஜூலை.16-

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உள்ளிட்ட விஷயங்கள் அடிப்படையில், 15 நாட்களுக்கு ஒருதடவை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.


கடந்த 1-ந் தேதி பெட்ரோல், டீசல் விலை சிறிதளவு குறைக்கப்பட்ட நிலையில், நேற்று அவற்றின் விலை சற்று அதிகமாக குறைக்கப்பட்டது. உள்ளூர் வரிகளைச் சேர்க்காமல், லிட்டருக்கு தலா 2 ரூபாய் விலை குறைக்கப்பட்டதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.


விலை குறைப்புக்கு ஏற்ப, உள்ளூர் வரிகளும் குறைந்ததால், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 55 காசு குறைந்தது. லிட்டருக்கு ரூ.69.84 ஆக இருந்த பெட்ரோல் விலை, ரூ.67.29 ஆக குறைந்தது. சென்னையில், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 44 காசு குறைந்தது. லிட்டருக்கு ரூ.53.52 ஆக இருந்த டீசல் விலை, ரூ.51.08 ஆக குறைந்தது.


டெல்லியில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) அம்மாநில அரசு நேற்று உயர்த்தியது. அதனால் அங்கு மட்டும் பெட்ரோல் விலை அதிகரித்தது. அதாவது, ரூ.66.62 ஆக இருந்த பெட்ரோல் விலை, 28 காசு அதிகரித்து, ரூ.66.90 ஆனது. டீசல் விலை, ரூ.50.22-ல் இருந்து 50 காசு குறைந்து ரூ.49.72 ஆனது.


மும்பையில், பெட்ரோல் விலை ரூ.74.52-ல் இருந்து ரூ.2.55 குறைந்து ரூ.71.97 ஆனது. டீசல் விலை, ரூ.57.64-ல் இருந்து ரூ.2.49 குறைந்து ரூ.55.15 ஆனது.


கொல்கத்தாவில், பெட்ரோல் விலை ரூ.74.09-ல் இருந்து ரூ.2.52 குறைந்து ரூ.71.57 ஆனது. டீசல் விலை, ரூ.54.75-ல் இருந்து 2 ரூபாய் குறைந்து ரூ.52.75 ஆனது.


இந்த விலை குறைப்பு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 
source : Malaimalar

No comments:

Post a Comment