OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Sunday 31 January 2016

தோசை கதை


ஒரு நாட்டின் பண வீக்கம் என்பது ஒரு மனிதனை ஓசைப்படாமல் கொல்லும் வியாதி போன்றது. ஆம், பணவீக்கம் நாட்டின் வளர்ச்சியை அடியோடு பாதிக்க வல்லது. இதற்கு நான் (ரகுராம் ராஜன்) ‘தோசை பொருளாதாரம்’ பற்றி சொல்லி புரிய வைக்க விரும்புகிறேன். எங்களுக்கு ஓய்வூதியம் பெறும் முதியோரிடம் இருந்து வரும் கடிதங்கள் மூலம் கிடைத்த தகவல்களை வைத்து இந்த கதையை சொல்கிறேன்.
ஓய்வூதியம் பெறும் முதியவர் ஒருவர் ஓட்டலில் தோசை வாங்க விரும்புகிறார். தோசை விலை 50 ரூபாய். அவருக்கு வங்கி டிபாசிட் மூலம் ஆண்டு இறுதியில் வட்டியுடன் அசல் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. ₹10 ஆயிரத்துக்கு 50 ரூபாய் வீதம் 200 தோசை வாங்கலாம். சரி, பணவீக்கத்தால் ஒரு பக்கம் அவரின் வங்கி டிபாசிட் மீதான வட்டி குறைகிறது. இன்னொரு பக்கம் தோசை விலையும் 10 சதவீதம் ஏறி விடுகிறது. விளைவு, அவரால் 10 ஆயிரம் ரூபாய் வந்தாலும் 200க்கு பதில் 182 தோசைதான் வாங்க முடிந்தது.
அடுத்த முறை பணவீக்க உயர்வால் அவரின் வங்கி டிபாசிட் பணம் 8 ஆயிரம் ரூபாய்தான் வந்தது; தோசை விலையே ₹57.50 ரூபாய்க்கு போகிறது. அப்போது அவரால் முன்பை விட 40 தோசை குறைவாகவே வாங்க முடிகிறது. இப்படி தான் ஒரு தனி மனிதனை பணவீக்கம் பாதிக்கிறது. ஒவ்வொரு துறையிலும், பொருட்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி அரிக்கிறது. இதை உயர விடாமல் பார்த்து கொள்ள வேண்டியது நம் பொறுப்பு
     பத்தாயிரம் ரூபாய்க்கு ஓட்டலில் எத்தனை தோசை வாங்கலாம்? -
இப்படி ஒரு கேள்வியை கேட்டு வித்தியாசமான கதையை சொல்லி பணவீக்கம் பற்றி விளக்கம் தெரிவித்துள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் .
மும்பையில் சி.டி. தேஷ்முக் பொருளாதார ஆய்வு மையத்தில் உரையாற்றிய ரகுராம் ராஜன் கூறிய தோசை கதை இதுதான்

No comments:

Post a Comment