OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Wednesday 27 January 2016

DISCUSSIONS WITH THE PMG, CCR BY TN POSTAL JCA TWICE ON 27.1.2016 ; EXPECTING FAVOURABLE SETTLEMENT FOR CASUAL LABOURER ISSUE AND COMBINATION OF DUTY TO POSTMAN/MTS

அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

ஏற்கனவே அறிவித்தபடி தமிழ் மாநில NFPE  மற்றும் FNPO  COC சார்பாக இன்று  (27.1.2016) காலை சுமார் 12.00 மணியளவில் PMG CCR  அவர்களை மாநிலச் செயலர்கள் சந்தித்து  CASUAL ஊழியர்கள்  நீக்கம் ரத்து செய்தல் , அண்ணா சாலை மற்றும் சென்னை GPO தபால்காரர்கள்  பணி இணைப்பு உத்திரவு ரத்து செய்தல் உள்ளிட்ட பிரச்சினைகள்  குறித்து  பேசினோம் . PMG, CCR  அவர்களிடம்  TN  PJCA  சார்பாக அளிக்கப்பட்ட கடித நகல் கீழே உங்கள் பார்வைக்கு அளித்துள்ளோம்.

பேச்சு வார்த்தையில் NFPE இணைப்புக் குழு கன்வீனர் தோழர்.G. கண்ணன்(P4), FNPO  இணைப்புக் குழு கன்வீனர் தோழர். P . குமார் ,  NFPE அஞ்சல்  மூன்று மாநிலச் செயலர் தோழர். J .R ., FNPO  அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். P . சுகுமாரன் , NFPE  கணக்குப் பிரிவு மாநிலச் செயலர் தோழர். R .B . சுரேஷ், அஞ்சல் மூன்று மாநிலத் தலைவர் தோழர். P . மோகன் , மாநில நிதிச் செயலர் தோழர். A . வீரமணி  உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்துகொண்டு பேசினோம்.

ஆரம்பத்தில் பேச்சு வார்த்தையில் பிரச்சினைகள் எழுந்தபோதும், இறுதியில்  PMG, CCR  அவர்கள் நம்முடைய கடுமையான  வாதத்தின் உட்கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொண்டு  நிச்சயம்  CPMG மற்றும்  DPS , CCR  ஆகியோர்களைக்  கலந்து கொண்டு ஒரு சுமுகமான முடிவினை மாலையில் தருவதாக உறுதி அளித்தார்கள்.  அதன் அடிப்படையில்  பேச்சு வார்த்தை மதியம் 1.30 மணியளவில்  முடிவுக்கு வந்தது. 

ஆனால், 27.1.2016 காலையிலேயே  ஒரு உத்திரவு ரகசியமாக இடப்பட்டு மதியம்  அண்ணா சாலையில்  அமலுக்கு கொண்டு வரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் நகலும்  உங்கள் பார்வைக்கு கீழே தருகிறோம். 

அதன் அடிப்படையில் SPEED DELIVERY  செய்யும் தபால்காரர்கள் அவரவர்கள் BEAT இல் அவர்களே PICK UP  SERVICE மேற்கொள்ளவேண்டும் என்றும் ஏற்கனவே PICK  UP  SERVICE  செய்யும் C /L ஊழியர் 7 இலிருந்து 5 ஆக குறைக்கப்படுவார்கள் என்றும்,  இனி பேருந்துகளில்தான்  PICK  UP  செய்யவேண்டும் என்றும் அதற்கு தனியே LUGGAGE  CHARGE போட்டுக் கொள்ளலாம் என்றும் வேடிக்கையான ஆனால் விபரீதமான உத்திரவு அது. 

அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகத்தில் மட்டும்  மாதம் 70000 தபால்கள் SPEED மற்றும் BUSINESS  PARCEL  PICK  UP  சேவையின் கீழ் வருகிறது. இதன் சராசரி வருமானம்  ரூ. 50,00,000/- .  PICK  AGENT  ஆக செயல்படும் 7 CASUAL  ஊழியர் அனைவருக்குமே  COLLECTORATE  ஊதிய அடிப்படையில் அளிக்கப்படும் சராசரி ஊதியமோ  ரூ. 50,000/-. இதர  PICK  UP TRANSPORTATION  செலவு  சராசரியாக ரூ.20,000/-. இது மொத்த வருவாயில் சுமார் 1.4% ஆகும். 

இந்தப் பணி வெளியார் AGENCY  க்கு கொடுத்தால் அவர்களுக்கு   குறைந்த பட்சம் வருவாயில் 10%  அளிக்கும்படி  வரும். அவர்கள் PICK  UP மட்டுமே செய்வார்கள்  . நம் அப்பாவி  CASUAL  கொத்தடிமைகளோ  SPOT PICK  UP உடன் BOOKING , TRANSMISSION  இரண்டும் செய்து தருவார்கள். ஆனால் நம் துறை அதிகார வர்க்கம் அவர்களை வெளியேற்றிவிட்டு  AGENCY முறையை கொண்டுவர துடிப்பது, வேடிக்கையானதும் , வினோத மானதும் ஆகும். எனவே இந்த உத்திரவு   நம்முடைய  ஊழியர்களை மட்டுமல்ல , PJCA  தலைவர்களையும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது.

மாலை சுமார் 05.00 மணியளவில் தமிழக அஞ்சல் JCA சார்பாக தோழர்.J .R , தோழர். G . கண்ணன் , தோழர். P . சுகுமாரன் ஆகிய மூவரும் PMG CCR அவர்களை சந்தித்தோம். அதற்கு முன்னரே  , கடந்த இரண்டு நாட்களாக CPMG அலுவலக வாளாகத்தில்  குவிக்கப்பட்டிருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஊழியர் தரப்பு  பிரதிநிதிகளை  சூழ்ந்தே வர ஆரம்பித்தனர்.  

வேடிக்கை என்னவென்றால் , இதுவரை இல்லாத வகையில்  PMG CCR CHAMBER வாயில் வரை அவர்கள் ஏதோ தீவிரவாதிகளைத் தொடர்வது போல, எங்களைச் சூழ்ந்து  தொடர்ந்தே வந்தனர் என்பதும் , அவர்களும் பாதுகாப்புக்கு  உள்ளே வருவோம் என்றதும் இதுவரை  தமிழக  அஞ்சல் வரலாற்றில்  இல்லாத  ஒரு வேடிக்கையான நிகழ்வு ஆகும் . பிறகு எங்கள் நம்பகத்தன்மைக்கு  காவல்துறையினருக்கு நாங்கள் உறுதி கூறிய பின்னர்தான் (?) அவர்களே கதவுக்கு வெளியில்  நின்றனர் என்பது  நகைப்புக்கு இடமான ஒன்றாகும். 

ஊழியர் தரப்பு பிரதிநிதிகள் மீது நம்பிக்கை இழந்த நிர்வாகத்தை, அல்லது சந்தேகம்கொண்ட நிர்வாகத்தை,  கடந்த 30 ஆண்டு  தமிழக அஞ்சல் துறை வரலாற்றில் நாம் இப்போதுதான் பார்க்கிறோம். இருந்த போதும், பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்,    நாம் கோபம்/வருத்தம்  ஏதும் கொள்ளாமல்  PMG CCR அவர்களை அணுகினோம்.  புதிய உத்திரவு எவ்வளவு தவறானது என்று எடுத்துக் கூறினோம்.  அதனை உடனே ரத்து செய்வதாகவும் , PICK  UP SERVICE க்கு மாற்று ஏற்பாடாக அரசு வாகனங்களை உபயோகப்படுத்த முடிவெடுத்துள்ளதாகவும் PMG,CCR அவர்கள் தெரிவித்தார். 

அதேபோல  CHENNAI  GPO மற்றும்  அண்ணா சாலை  தலைமை அஞ்சலகங்களில் இனி தபால்காரர் மற்றும்  MTS  ஊழியர்களுக்கு  பணி இணைப்பு இருக்காதெனவும் உறுதி அளித்தார். பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட  27 CASUAL  ஊழியர்களுக்கு உடன்  பணி  அளித்திட உரிய எழுத்து பூர்வமான உத்திரவாதம் அளிக்க வேண்டினோம்.  CPMG  யுடன் கலந்துகொண்டு இன்று மாலையே , நாளை காலை கிடக்கும் வண்ணம் உரிய உத்திரவுகள் இடப்படும் என்றும்  உத்திரவாதம் அளித்துள்ளார்  PMG CCR  அவர்கள். 

எனவே   நாளை  காலை  எழுத்து   பூர்வமான   உத்திரவு    பெற்றவுடன்,   நம்முடைய   முடிவுகளை அறிவிப்பதாக, மாலை சுமார் 06.00  மணிக்கு   கூடியிருந்த ஊழியர்களிடையே   நாம் அறிவிப்பினை செய்தோம். நாம் கலைந்தவுடன்  நம்மை முற்றுகையிட்டிருந்த காவல்துறை பணியாளர் களும் கலைந்து சென்றனர் என்பது வேடிக்கையே.

நல்ல முடிவை எதிர் நோக்கிக் காத்திருக்கிறோம். நமக்கு கண்ணியமே பெரிது .  காவல்துறை பெரிதல்ல  என்பதை  நிர்வாகத்திற்கு உணர்த்து வோம்.

"கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு  காலத்தினாலே  அழியாது "

COPY OF  TN PJCA LETTER



INTERMITTANT ORDER ISSUED BY PMG, CCR 
NOW ASSURED TO BE WITHDRAWN



No comments:

Post a Comment