தேர்வு முடிவுகள் அனுப்பப் பட்ட 17 அஞ்சல் வட்டங்களில் 16 இல் முடிவுகள்   ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன  தமிழ்நாடு வட்டத்தில் மட்டும் RESERVATION  RELAXATION  குறித்து  சில விளக்கங்கள் கேட்டு DIRECTORATE  க்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும்  பதில் வந்த அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும் என்று  தெரிவிக்கப்பட்டது.  இது குறித்து இலாக்கா முதல்வர், தேர்வு முடிவுகளை  உடன் வெளியிட  ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.  
நம்முடைய சங்கத்தின் மூலம்  DTE  இல் இன்று இது குறித்து DDG அளவில் பேசியதில், இன்று மாலையே  உரிய விளக்கம்   CPMG  அவர்களுக்கு அனுப்பப்படும் என்று  உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனவே  எழுத்தர்  தொடர்பான தேர்வு முடிவுகள்  அனைத்தும்  அடுத்த வாரத்தில்  வெளியாகும் என்று   உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நம்முடைய மாநிலச் சங்கத்தின் மூலம்  CPMG  அவர்களிடம்   திங்கள் அன்று  இது குறித்து  நிச்சயம் மீண்டும் வலியுறுத்துவோம்.
மேலும் எழுத்தர் நேரடி தேர்வில்  கடந்த  ஆண்டு 40 % பதவிகள்  நிரப்பப் படாமல் போனது  குறித்து  நம்முடைய மாநிலச் சங்கத்தில் இருந்து முன்னாள் பொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் மூலம்  ஏற்கனவே  DG அளவில்  எடுத்துச் சென்று பேசியதும்  கடிதம் அளித்ததும் உங்களுக்கு  நினைவிருக்கும்.  
அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ,தற்போது  இந்த ஆண்டு  அனைத்து காலியிடங்களும்  விடுபடாமல் நிரப்பப்படும் என்றும் , FIRST  LIST  இல்  எவரும் பணியில் சேரவில்லை என்றால்  SURPLUS  LIST  மூலம் நிரப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் DDG  உறுதியளித் துள்ளார். 
மேலும் அடுத்த ஆண்டு (2015) தேர்வு முறையில்  தாமதம் தவிர்த்திட தேர்வுகள் BATCH  அடிப்படையில் ONLINE  இல்  நடைபெறும் என்றும், ஒவ்வொரு BATCH  களுக்கும் தனித்தனியே  QUESTIONS  அமைக்கப்படும் என்றும்  COMPUTER  ABILITY  TEST  தனியே  நடத்தப்படாமல் சேர்த்தே நடத்தப்படும் என்றும்  இதன் மூலம் காலதாமதம்  தவிர்க்கப்பட்டு, அனைத்து BATCH  தேர்வுகள் முடிந்தவுடன் , ONLINE  என்பதால்  உடனே அந்தந்த  மாநிலங்களுக்கு தேர்வுமுடிவுகள் அனுப்பப்படும் என்றும்   தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
No comments:
Post a Comment