திண்டுக்கல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளரின் அத்து மீறிய  நடவடிக்கைகள் , சட்ட விரோத செயல்பாடுகள் , தொழிலாளர் விரோத செயல்பாடுகள் , தொழிற் சங்க உரிமைகளை பறிக்கும் போக்குகள் , தான்தோன்றித்தனமான செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே நமது மாநிலச் சங்கத்தின் மூலம் தென் மண்டல PMG மற்றும் CPMG ஆகியோருக்கு  பல புகார்கள் அனுப்பியும்  உரிய  நடவடிக்கைகளை மாநில அளவிலான நிர்வாகம் எடுத்திடவில்லை.  
எனவே நம்முடைய 26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்த கோரிக்கைகளிலும்  திண்டுக்கல் கோட்ட அதிகாரியின் தொழிற் சங்க விரோத நடவடிக்கை குறித்து பிரச்சினை எழுப்பினோம். அதன் மீதும் சரியான நடவடிக்கை இல்லாததால்   நம் அகில  இந்திய சங்கத்தின் மூலம்  DG அவர்களின் நேரடி கவனத்திற்கு இந்தப்  பிரச்சினைகள் தற்போது கொண்டு செல்லப்பட்டுள்ளன  . அதற்கான நம்முடைய பொதுச் செயலரின் கடிதத்தின் நகலை கீழே காணவும்.  
இலாக்கா சட்டங்களை நன்கு அறிந்த (?) இந்த  முது நிலைக் கண்காணிப்பாளர்தான்  கடந்த செப்டம்பர்  31 இல்  RT  முடிந்த கையோடு, அக்டோபர் 2014 இல் மீண்டும் RT க்கான NOTIFICATION  செய்தவர்  என்பது  குறிப்பிடத் தகுந்தது. 
இந்தப் பிரச்சினையில்  பின்னர் மாநிலச் சங்கத்தின் தலையீட்டினால் அந்த RT NOTIFICATION  ரத்து செய்யப்பட்டது  என்பது  குறிப்பிடத்தகுந்தது. இப்படிப்பட்ட (?) அதிகாரியின் செயல்பாடுகளைத்தான்  மேல்மட்ட அதிகாரிகள்  கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறார்கள்  என்பது, தற்போதைய  நிர்வாகங்களின்  தன்மையை  நமக்கு உணர்த்துகிறது. அதற்காக  நாம்  விடமாட்டோம் என்பதே இந்தக் கடிதத்தின் வெளிப்பாடு.
 




No comments:
Post a Comment