இனிய தோழர்களே ! தோழியர்களே,
தொழிற்சங்க ஜனநாயகத்தின் குரல்வலையை நெறித்திடும் மண்டல மாநில அஞ்சல் நிர்வாகங்களை கண்டித்தும்...
அஞ்சல் ஊழியர்களை கசக்கிப் பிழியும் கண்மூடித்தனமான உத்தரவுகளை கைவிட கோரியும் ... 
மற்றும் அஞ்சல் ஊழியர் நலம் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் .
பேசிப் பார்த்தோம் ; கேட்டுப் பார்த்தோம் ; எழுதிப் பார்த்தோம் ; SUBJECTS கொடுத்தோம் ;
அகில இந்திய சங்கத்திற்கு எடுத்துச் சென்றோம் ;  ஆர்ப்பாட்டம் செய்தோம் ;   தார்ணா  இருந்தோம் ;
NOTICE  போட்டோம்  ;    வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்தோம் ;
கோரிக்கை மனு கொடுத்தோம் ;  வேலை நிறுத்தத்தில் தள்ளியது நிர்வாகம் ;
இதுவா நிர்வாகம் ;   இதுவா அரசாங்கம்  ?   நடத்துபவர்கள்  இந்தியர்கள் தானே  ?
அவர்களுக்கு  இந்திய  அரசியல் அமைப்பு  சட்டங்கள்  தொழிலாளர் நல சட்டங்கள் செல்லாதா ?
இது  அப்பட்டமான   அரசியல் அமைப்புச் சட்ட மீறல் !  மனித உரிமை மீறல் !
UNFAIR  LABOUR PRACTICE   என்று  தொழிலாளர் நல  ஆணையரே  பதிவு செய்யும் அவலம்  
ஒரு நாள்  இந்த  நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு.   அந்த மாறுதலை செய்வதற்கு  நல்ல நாள் இன்று  !











No comments:
Post a Comment