அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! 
இன்று (27.03.2015)
 காலை மத்திய  தொழிலாளர் நல உதவி ஆணையர் முன் கூடிய  மாநில அஞ்சல் 
நிர்வாகத்துடனான பேச்சு வார்த்தையின்  முடிவில்  அளிக்கப்பட  MINUTES  நகல்
  மற்றும் தொழிலாளர்  நல உதவி  ஆணையரிடம் அளிக்கப்பட்ட உடனடியாகத் 
தீர்க்கப்பட வேண்டிய சில  முக்கிய   கோரிக்கைகள்  பட்டியல்  கீழே 
 தரப்பட்டுள்ளது.  
அந்தப் பட்டியலில் உள்ள பிரச்சினைகளை  உடனடியாக தீர்த்திடுமாறு  நிர்வாகத்திற்கு மத்திய தொழிலாளர்
 நல உதவி ஆணையர் அறிவுறுத் தினார். நிர்வாகத்தரப்பில் கலந்துகொண்ட உதவி 
இயக்குனர்  இந்தப்  பிரச்சினைகள் மீது தீர்வு வேண்டி உடனடியாக CPMG  யின் 
கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று உறுதி அளித்தார். CPMG  உடனான 
நேரடி  இரு தரப்பு  பேச்சு வார்த்தை , ஏற்கனவே  மாநில நிர்வாகத்தால்  உறுதி
 அளித்தபடி 10.04.2015 க்குள் நடத்தப்படும் என்றும்  தெரிவித்தார். 
பிரச்சினை களின் தீர்வில்  நிச்சயம்  முன்னேற்றம்  அளிக்கப்படும் என்றும் 
 நிர்வாகத்  தரப்பின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. கூட்டம் சுமார் 01.30
 மணியளவில் முடிவுற்றது .  



No comments:
Post a Comment